பொது செய்தி

தமிழ்நாடு

முக்கொம்பில் மேலும் ஒரு மதகு உடைந்தது

Updated : ஆக 23, 2018 | Added : ஆக 23, 2018 | கருத்துகள் (39)
Share
Advertisement
திருச்சி : திருச்சி முக்கொம்பு மேலணையில் உள்ள 9வது மதகும் உடைந்துள்ளது. நேற்று இரவு 8 மதகுகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று (ஆக.,23) காலை 9.20 மணியளவில் மேலும் ஒரு மதகு இடிந்து விழுந்துள்ளது. முக்கொம்பு மேலணையில் மொத்தமுள்ள 45 மதகுகளில் 6 முதல் 14 வரையிலான மதகுகள் உடைந்துள்ளன. நேற்று இரவு உடைந்த மதகுகளை தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகரன்,
காவிரி, முக்கொம்பு மதகு, திருச்சி முக்கொம்பு மேலணை,  பிரபாகரன், திருச்சி கலெக்டர் ராசாமணி , சாலை போக்குவரத்து, தமிழக பொதுப்பணித்துறை, மதகுகள் , காவிரி ஆறு , 
Trichy mukombu, Prabhakaran, Trichy Collector Rasamani, Road Transport, Tamil Nadu Public Works Department, Cauvery River,

திருச்சி : திருச்சி முக்கொம்பு மேலணையில் உள்ள 9வது மதகும் உடைந்துள்ளது. நேற்று இரவு 8 மதகுகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இன்று (ஆக.,23) காலை 9.20 மணியளவில் மேலும் ஒரு மதகு இடிந்து விழுந்துள்ளது.

முக்கொம்பு மேலணையில் மொத்தமுள்ள 45 மதகுகளில் 6 முதல் 14 வரையிலான மதகுகள் உடைந்துள்ளன. நேற்று இரவு உடைந்த மதகுகளை தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகரன், திருச்சி கலெக்டர் ராசாமணி ஆகியோர் இன்று காலை நேரில் ஆய்வு செய்தனர். இவர்கள் ஆய்வு செய்து சென்ற சில நிமிடங்களிலேயே 9வது மதகும் உடைந்துள்ளது.

முன்னதாக ஆய்விற்கு பிறகு பேசிய திருச்சி கலெக்டர் ராசாமணி கூறுகையில், முக்கொம்பு மேலணை உடைப்பால் முசிறி - கரூர் இடையேயான சாலை போக்குவரத்து பாதிக்கப்படும். இரும்பு. கான்கிரீட், மணல் மூட்டைகள் கொண்டு உடைந்த மதகுகள் தற்காலிகமாக சீரமைக்கப்படும். இதுவரை 2 லட்சம் கனஅடி நீர் வந்த போது சமாளிக்கப்பட்டது. அதே போல் இனி வரும் காலங்களிலும் நிலைமையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.


முதல்வர் நாளை ஆய்வு

இந்நிலையில், மதகுகள் உடைந்த முக்கொம்பு அணையை முதல்வர் பழனிசாமி நாளை(ஆக.,24) நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். மறுசீரமைப்பு பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.


ஸ்டாலின் கண்டனம்:

மதகு உடைந்தது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: முன்கூட்டியே கணித்து முக்கொம்பு அணையில் மதகுகளை சீரமைக்க தவறியது ஏன்? அணைகள் பாதுகாப்பு விஷயத்தில் தமிழக அரசு அக்கறையின்றி இருக்கிறது . கொள்ளிடம் பாலம், முக்கொம்பு மேலணை பாதிப்புக்கு அதிமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
பாதிப்பில்லை:

மதகுகள் உடைந்த இடத்தை தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று (ஆக.,23) காலை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பால் பாதிப்பு ஏதுமில்லை. விவசாயத்திற்கு தேவையான நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. முக்கொம்பில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்படும் பகுதி பாதுகாப்பாக உள்ளது.
தமிழகத்தில் 100 ஆண்டுகள் பழமையான அணைகள் அனைத்தும் அரசின் ஆலோசனை பெற்று ஆய்வு செய்யப்படும். முக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பு தொடர்பாக விசாரணை நடக்கிறது. முதல்கட்டமாக மதகில் ஏற்பட்ட உடைப்பை சீரமைப்பது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலணையில் உடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. உபரி நீராக திறக்கப்படவிருந்த தண்ணீர், மதகுகள் உடைந்ததால் வெளியேறி கொண்டிருக்கிறது. தொடர்ந்து வெளியேறும் நீரை தடுத்து நிறுத்துவது குறித்து ஆய்வு செய்து, முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
24-ஆக-201806:32:00 IST Report Abuse
Panneerselvam Chinnasamy புது அணைகள் ,கால்வாய்கள் கட்டுவதெற்க்கெல்லாம் கமிட்டி போட்ட எடப்பாடியார், பழைய அணைகள் பாதுகாப்பு , கால்வாய்கள் தூர் வருதல் போன்றவற்றைப்பற்றி ஏன் கவலைப்படவில்லை? பொதுப்பணித்துறையை ஏழுஆண்டுகளாக நிர்வகிக்கும் அவருக்கு மணல் அளவுகடந்து எடுப்பதால் அணையின் ஸ்திரத்தன்மை போய்விடும் என்பதுகூட தெரியாதா?
Rate this:
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
23-ஆக-201820:29:22 IST Report Abuse
ManiS Dam maintenance money were fully shred by DMK and admk, I believe.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
23-ஆக-201819:18:12 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\உபரி நீராக திறக்கப்படவிருந்த தண்ணீர், மதகுகள் உடைந்ததால் வெளியேறி கொண்டிருக்கிறது. .....\\ எனக்கு இந்த விளக்கம் புரியலை மதகுகள் என்ன கம்பார்ட்மெண்ட் கம்பார்ட்மெண்டா வா தண்ணியை தேக்கி வைத்திருக்கின்றன? அணையின் ஒரு பக்கத்தில் தண்ணீர் மொத்தமாக தேக்கி வைக்கப்பட்டு, இன்னொருபுறம் வேண்டிய மதகுகளை திறந்துவிட்டு தண்ணீரை வெளியேற்றுவார்கள்.......... இப்போது நடுவில் இருக்கும் மதகுகள் உடைந்துவிட்டால், அந்த பக்கத்தில் இருக்கும் தண்ணீர் எல்லாம் ஓட்டை வழியாக போய் விடாதா? என்ன இன்ஜினியரிங் தியரி இது??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X