கொளத்தூர்,: கொளத்தூரில் தயாரிக்கப்பட்ட, உலகின் நீளமான இருசக்கர வாகனம், ஆசியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.கொளத்தூர், யுனைடட் காலனி பகுதியில் உள்ள, இந்தியா தொழில் தொடர்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தில், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிறுவனத்தின் இயக்குனர் சவுந்திரபாண்டி, அங்கு பயிலும், 70 மாணவர்களின் உதவியுடன், 6.8 மீட்டர் நீளமும், 1.2 மீட்டர் உயரமும் உடைய, உலகின் மிக நீளமான, இருசக்கர வாகனத்தை, எட்டு மாதங்களில் உருவாக்கினர். இந்த வாகனத்தில், 15 பேர் அமரலாம்.ஆசியா மற்றும் இந்தியா சாதனை புத்தக குழுவினர், நேற்று காலை, இந்த இருசக்கர வாகனத்திற்கு, நீளமான, 'ஹைபிரிட்' இருசக்கர வாகனம் என்ற பட்டத்தை வழங்கினர்.இதுகுறித்து சவுந்திரபாண்டி கூறியதாவது:இந்தியாவில் பொறியியல் படிக்கும் மாணவர்களில், 2 சதவிகிதம் பேர் தான், பொறியியல் திறனுடன் உள்ளனர். அவர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சியை, மத்திய அரசு உதவியுடன், இலவசமாக வழங்கப்படுகிறது.அந்த மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, உலக சாதனை முயற்சியில் ஈடுபட முடிவெடுத்தேன்.இந்த வாகனத்தில், இரண்டு உதிரி பாகங்களை தவிர, மற்றவை அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கபட்டவை. இந்த வாகனத்தை தயாரிக்க, 1.70 லட்சம் ரூபாய் செலவானது. கின்னஸ் புத்தகத்திலும், இந்த வாகனம் இடம் பெற உள்ளது.அடுத்த ஆண்டு, ஒரு சார்ஜில், 500 கி.மீ., செல்லக் கூடிய எலக்ட்ரிக், இருசக்கர வாகனம் தயாரிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE