சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.5,000, 'வாங்கிய' பெண் அதிகாரி கைது

Added : ஆக 24, 2018 | கருத்துகள் (3)
Advertisement

கள்ளக்குறிச்சி : சிட்டாவில் பெயர் சேர்க்க, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, முதுநிலை வருவாய் பெண் ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், வி.அளம்பளம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி சுமதி, 42; இவர்களுக்கு சொந்தமான, 30 சென்ட் நிலத்திற்கான சிட்டாவில், கணவர் ராதாகிருஷ்ணனின் பெயரை சேர்க்க கோரி, பிப்ரவரி மாதம், கள்ளக்குறிச்சி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், சுமதி மனு அளித்தார். சில மாதங்களுக்கு முன், சுமதியின் கணவர் இறந்து விட்டார். சுமதி, மனுவின் நிலை குறித்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கேட்ட போது, சின்னசேலம் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உமா மகேஸ்வரியிடம், மனு குறித்து, சுமதி விசாரித்துள்ளார். அவர், சிட்டாவில் பெயர் சேர்க்க, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில், சுமதி புகார் செய்தார். தாலுகா அலுவலகத்தில் இருந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் உமா மகேஸ்வரியிடம், நேற்று மாலை, 4.00 மணியளவில், ரசாயனம் தடவிய, 5,000 ரூபாயை சுமதி கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு, டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையிலான போலீசார், உமா மகேஸ்வரியை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-ஆக-201808:42:29 IST Report Abuse
Bhaskaran அரசுஅதிகாரிகளில் உள்ள சிலரில் எவ்வளவு சம்பளம் பெற்றாலும் திருப்தி அடையாத ஜென்மங்களில் ஒருசிலரின் இவரும் ஒருவர் உடனே பணிஉயர்வு கொடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஆக-201806:57:21 IST Report Abuse
Mani . V லட்சம், கோடி என்று லஞ்சம் வாங்காமல் வெறும் 5000 ரூபாய் மட்டும் லஞ்சம் வாங்கிய இவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்.
Rate this:
Share this comment
Rajaram Kandalu - Madurai,இந்தியா
24-ஆக-201809:15:57 IST Report Abuse
Rajaram Kandalu5000 மட்டும் வாங்கியதால் தப்பில்லை என்று சொல்ல வருகிறீர்கள் போல் தெரிகிறது. லஞ்சம் என்றால் எவ்வளவு வாங்கினாலும் தவறு தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X