அரசியல் செய்தி

தமிழ்நாடு

பலத்தை நிரூபிக்க அழகிரி அதிரடி வியூகம்!

Updated : ஆக 24, 2018 | Added : ஆக 24, 2018 | கருத்துகள் (95)
Share
Advertisement
சென்னையில் நடக்கவுள்ள அமைதி பேரணி மூலமாக, தன் பலத்தை நிரூபிக்கவும், ஸ்டாலினுக்கு எதிராக, அதிரடி வியூகம் அமைக்கவும், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தன் ஆதரவாளர்களுடன், மதுரையில், இன்று(ஆக.,24) ஆலோசனை நடத்துகிறார்.தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்த, 16வது நாள் நிகழ்ச்சிகள், சென்னையில், நேற்று முன்தினம், அவரது கோபாலபுரம் வீட்டில் நடந்தன. அதில் பங்கேற்ற அழகிரி, மாலையில், மதுரை
பலத்தை,நிரூபிக்க,அழகிரி,அதிரடி வியூகம்

சென்னையில் நடக்கவுள்ள அமைதி பேரணி மூலமாக, தன் பலத்தை நிரூபிக்கவும், ஸ்டாலினுக்கு எதிராக, அதிரடி வியூகம் அமைக்கவும், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தன் ஆதரவாளர்களுடன், மதுரையில், இன்று(ஆக.,24) ஆலோசனை நடத்துகிறார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்த, 16வது நாள் நிகழ்ச்சிகள், சென்னையில், நேற்று முன்தினம், அவரது கோபாலபுரம் வீட்டில் நடந்தன. அதில் பங்கேற்ற அழகிரி, மாலையில், மதுரை புறப்பட்டு சென்றார். அங்கு, நிருபர்களை சந்தித்த அழகிரி, 'என்னை, தி.மு.க.,வில் சேர்த்துக் கொள்வதுபோல் தெரியவில்லை. என் மனக் குமுறலை, எப்போது கூற வேண்டும் என, அப்பா கூறுகிறாரோ, அப்போது, மக்களிடம் கூறுவேன். என் மனக்குமுறல், நேரம் வரும்போது வெளிப்படும்' என்றார்.

தொடர்ந்து, நேற்று காலையில், விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் நடந்த, தன் ஆதரவாளர் இல்ல திருமண நிகழ்ச்சியில், அழகிரி பங்கேற்றார். அப்போது, நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''தி.மு.க.,விலிருந்து, என்னை வெளியேற்றி விட்டனர். நானாக, கட்சியிலிருந்து வெளியேறவில்லை,'' என்றார்.

இந்நிலையில் இன்று காலை, மதுரை, டி.வி.எஸ். நகரில் உள்ள, தயா திருமண மண்டபத்தில், தன் ஆதரவாளர்களுடன், முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அதில், செப்., 5ம் தேதி, சென்னையில் நடக்கவுள்ள அமைதி பேரணியில், பலத்தை காட்டும் வகையில், கூட்டத்தை திரட்டுவது குறித்தும், தி.மு.க., பொதுக்குழுவில், ஸ்டாலினுக்கு எதிராக, போர்க்குரல் எழுப்புவது குறித்தும், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
28-ஆக-201814:14:32 IST Report Abuse
Matt P ,மனக்குமுறலை எப்போது கூற வேண்டும் என, அப்பா கூறுகிறாரோ... அண்ணாவுக்கு பக்கத்தில் தூங்கி கொண்டிருக்கும் அவர் ..........அலைபேசியில் அழைத்து .........அப்பா சொல்வாராக்கும் ...எல்லாம் நேரம்பா
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஆக-201817:12:46 IST Report Abuse
Endrum Indian அழகிரி இவ்வளவு intelligent ஆ நம்பமுடியவில்லை, நம்பமுடியவில்லை.
Rate this:
Cancel
24-ஆக-201816:42:10 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) அண்ணா இருக்குபோது திமுகவில் நான்காவது இடத்தில இருந்த கருணாநிதி தந்திரத்தால் முதல் இடம் பெற்றார் , தன் குடும்பத்தை கழகமாக்கினார் , அந்த குடும்பத்தாலே திமுக அழியும், ஸ்டாலினை விட திறமையானவர்கள் திமுகவில் இருக்கின்றனர்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X