பதிவு செய்த நாள் :
2019,லோக்சபா தேர்தல்,அமித் ஷா,வியூகம்

அடுத்த லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் எட்டு மாதங்களே உள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்க, பா.ஜ., தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இம்முறை, 350 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற, அக்கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா இலக்கு நிர்ணயித்து உள்ளார். அத்துடன், தே.ஜ., கூட்டணியில், புதிய கட்சிகளை சேர்க்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
லோக்சபாவுக்கு, 2014ல் நடந்த தேர்தலில், 336 இடங்களில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. இதில், 282 தொகுதிகளில் வென்று, 30 ஆண்டுகளுக்கு பின், தனி பெரும்பான்மை பெற்ற கட்சி என்ற பெயரையும், பா.ஜ., பெற்றது.குஜராத், ராஜஸ்தான், டில்லி, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், முழுமையாக வெற்றி பெற்ற, பா.ஜ., ஒன்பது வட மாநிலங்களில், மொத்தமுள்ள, ௨௦௭ தொகுதிகளில், ௧௯௦ இடங்களை பிடித்து சாதனை படைத்தது. அதிலும், உத்தர பிரதேசத்தில், ௮௦ தொகுதிகளில், ௭௧ல் வென்றது.
இந்நிலையில், அடுத்த எட்டு மாதங்களில், லோக்சபாவுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்க, பா.ஜ., தினமும் ஆலோசனை நடத்தி, வியூகம் வகுத்து வருகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை அமைப்பதில், பிரதமர் நரேந்திர மோடியும், சி யின் தேசிய தலைவர், அமித் ஷாவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த தேர்தலை விட, அடுத்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என, பா.ஜ., விரும்புகிறது. ௩௫௦ இடங்களில், பா.ஜ., தனித்து வெற்றி பெற, அமித் ஷா இலக்கு நிர்ணயித்துள்ளார். அதாவது, கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விட, ௨௪ சதவீதம் கூடுதலாக வெற்றி பெற, இலக்கு நிர்ணயித்துள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலுக்கு பின், பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பெரும்பாலானவற்றில், பா.ஜ., வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு, மோடி - அமித் ஷா அமைத்த வியூகமே காரணம் என, கருதப்படுகிறது.அடுத்த லோக்சபா தேர்தலில், இந்த வெற்றி தொடருவது எளிதல்ல என்றாலும், சாத்தியம் இல்லை எனக் கூற முடியாது.
உத்தர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை, இம்முறையும் பெறுவது சற்று கடினம் தான். இதை சரி செய்ய, புதிதாக, ௧௧௫ தொகுதிகளில் கவனம் செலுத்த, கட்சியினருக்கு, அமித் ஷா உத்தரவிட்டு உள்ளார்.
நாட்டின் கிழக்கு, வட கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில், இந்த தொகுதிகள் அமைந்துள்ளன. குறிப்பாக, மத்திய அமைச்சர்கள், ரவிசங்கர் பிரசாத், ஜே.பி.நட்டா, மனோஜ் சின்ஹா, தர்மேந்திர பிரதான், பியுஷ் கோயல் ஆகியோருக்கு, தலா, ஐந்து தொகுதிகளை, அமித் ஷா ஒதுக்கி உள்ளார். இந்த தொகுதிகளில், பா.ஜ.,வை வெற்றி பெற வைப்பது, அவர்களின் பொறுப்பு என, கூறியுள்ளார்.
அதே போல், தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளை,

அடுத்த தேர்தலிலும் தக்க வைக்கும் முயற்சியில், அமித் ஷா ஈடுபட்டுள்ளார். கூட்டணியில் இருந்து, தெலுங்கு தேசம் வெளியேறி விட்டது. லோக்சபாவில், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்தது. அதனால், கூட்டணியில் தெலுங்கு தேசம் மீண்டும் இடம் பெறுவது, நடக்காத காரியம்.
இதையடுத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ் குமார் ஆகியோரை சந்தித்து பேசி, கூட்டணியில் தக்க வைக்கும் முயற்சியில், அமித் ஷா ஈடுபட்டுள்ளார். அகாலிதளம் தலைவர்களை, இது தொடர்பாக, அமித் ஷா ஏற்கனவே சந்தித்து பேசி உள்ளார்.
கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் வெளியேறியதை சரிகட்ட, புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியிலும், பா.ஜ., ஈடுபட்டுள்ளது.சமீபத்தில் நடந்த ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலில், இது வெளிப்படையாக தெரிந்தது. ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தள தலைவருமான, நவீன் பட்நாயக்கை, பிரதமர் மோடியே நேரடியாக தொடர்பு கொண்டு பேசி, தே.ஜ., கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தர கோரினார்.
ஒடிசாவில் பிரதான எதிரி, காங்., என்பதால், பா.ஜ.,வை ஆதரிப்பதில், நவீன்

பட்நாயக்குக்கு எந்த பாதிப்பும் வரப் போவதில்லை. அதே போல், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியும், பா.ஜ.,வை நெருங்கி வருகிறது. தேர்தலின் போது, கூட்டணியில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி இடம் பெறாவிட்டால், தேர்தலுக்கு பின், அதன் ஆதரவை பெற, பா.ஜ., திட்டமிட்டு உள்ளது.
இது பற்றி, கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைப்பதை லட்சியமாக, அமித் ஷா கொண்டுள்ளார். இதில், அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். ஆட்சியை தக்க வைத்து, காங்., இல்லாத பாரதத்தை ஏற்படுத்தும், பிரதமரின் கனவையும், அவர் நனவாக்குவார்' என்றார்.

பிற்படுத்தப்பட்டோரை ஈர்க்க வியூகம்


நாட்டில், 2011ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இதர பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை, ௪௧ சதவீதமாக உள்ளது. அதனால், தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் ஆதரவை பெற, பா.ஜ., திட்டமிட்டு உள்ளது. இதற்காகவே, தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷனுக்கு, அரசியல் சாசன அந்தஸ்தை, மத்திய அரசு சமீபத்தில் வழங்கியது. பிரதமர் மோடியே, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர்களின் ஆதரவை பெறுவது எளிது என, பா.ஜ., கருதுகிறது.
அதே போல், அரசின் சமூக நலத் திட்டங்கள் அனைத்தும், தாழ்த்தப்பட்டோரை சென்றடையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.மேலும், மத்திய அரசின் நலத்திட்டங்கள் மூலம் பயன் அடைந்த, 22 லட்சம் பயனாளிகளை ஒருங்கிணைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இவர்களை, பா.ஜ., தொண்டர்கள் நேரடியாக சந்தித்து பேசவும் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan - karaikudi,இந்தியா
25-ஆக-201822:48:36 IST Report Abuse

Viswanathan என்ன ஒரு பேராசை , மக்கள் பணி செய்ய துடிக்கின்றார் ( மக்கள் பணி என்றால் என்ன ? அதிகாரத்தில் அமர பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை தண்டிப்பது )

Rate this:
அப்பாவி - coimbatore,இந்தியா
25-ஆக-201822:21:54 IST Report Abuse

அப்பாவிநீங்க கூட்டு வை பொரியல் வை. எங்களுக்கு(தமிழர்களுக்கு) கவலை இல்லை. ஆனா உனக்கு மரண அடி தான். WE ARE WAITING

Rate this:
அப்பாவி - coimbatore,இந்தியா
25-ஆக-201820:33:19 IST Report Abuse

அப்பாவிநீங்க தான் இந்த ஆட்சியை பிரமாதமா பண்ணி இருக்கீங்க. அப்ப எதுக்கு கூட்டணி? உங்களுக்கு நல்ல தெரியும் பசங்களை தவிர ஒரு பயலும் உங்களுக்கு ஒட்டு போடமாட்டங்கா.

Rate this:
மேலும் 94 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X