கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'டூவீலர்' பின் சீட் பயணிக்கும்'ஹெல்மெட்' கட்டாயம் 'ஐகோர்ட்டில் அரசு உறுதி

Added : ஆக 25, 2018 | கருத்துகள் (13)
Advertisement
'டூவீலர்' பின் சீட் பயணிக்கும்'ஹெல்மெட்' கட்டாயம் 'ஐகோர்ட்டில் அரசு உறுதி

சென்னை, 'இரு சக்கர வாகனங்களில், பின் இருக்கையில் பயணிப்போரும், 'ஹெல்மெட்' அணிவதை, கட்டாயமாக்கும் விதிகள் அமல்படுத்தப்படும்' என, தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.சென்னை கொரட்டூரை சேர்ந்த, கே.கே.ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனு:மோட்டார் சட்ட விதிகளின் படி, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர், 'சீட் பெல்ட்' அணிய வேண்டும்; இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும், ஹெல்மெட் அணிய வேண்டும்.ஆனால், இந்த விதிகளை, தமிழக அரசு முறையாக அமல்படுத்தவில்லை. எனவே, இந்த விதிகளை அமல்படுத்த, அரசுக்குஉத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு, நீதிபதி எஸ்.மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தியது குறித்து, காவல் துறை தரப்பில், கூடுதல் தலைமை வழக்கறிஞர், அறிக்கை தாக்கல் செய்தார்.அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், 'ஹெல்மெட் அணியாத, இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது மட்டும், காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்போர் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை' என, சுட்டிக்காட்டினர்.இதையடுத்து, 'இரு சக்கர வாகனங்களில், பின் இருக்கையில் பயணிப்போரும், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும், மோட்டார் வாகன சட்ட விதிகள் அமல்படுத்தப்படும்' என, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார்.மேலும், 'இது தொடர்பாக, பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் வழியாக, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' எனவும் தெரிவித்தார்.இது தவிர, ஹெல்மெட் அணியாமல், பின் இருக்கையில் பயணித்தோர் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, தனி அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து, ஆக., 31க்கு, வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
டி.ஜி.பி., உத்தரவு!'ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனம் ஓட்டியோர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து சென்றோர் மீது, பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றி, உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும்' என, போலீசாருக்கு, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார். கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்ட, 2015 ஜூலை, 1ல் இருந்து, இதுவரை, தமிழகம் முழுவதும், ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனம் ஓட்டியோர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து சென்றோர் மீது, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; அந்த தகவல்களை, உடனடியாக, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, அறிக்கையாக அளிக்கும்படி. டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
POORMAN - ERODE,இந்தியா
26-ஆக-201811:35:32 IST Report Abuse
POORMAN மொதல்ல இந்த நீதி மன்றம் சாலைகள் , சுத்தமாக குண்டும் குழியும் இல்லாத பிறகு ஹெல்மெட் சட்டத்தை அமல் படுத்த சொல்லட்டும்.
Rate this:
Share this comment
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
26-ஆக-201817:31:46 IST Report Abuse
Mohan Sundarrajaraoஆமா. கரிக்கட்டு....
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
25-ஆக-201821:46:00 IST Report Abuse
ManiS we can exclude the one with our helmet. But the one who placed the helmet on petrol tank and one who riding by speaking cell phones to be punished without any points from them. Driving rules were never followed in India. Very bad and pathetic in North.
Rate this:
Share this comment
Cancel
25-ஆக-201816:06:18 IST Report Abuse
ganesh,trichy மக்களின் உயிர் மீது அரசுக்கு அவ்வளவு அக்கறை. அது சரி. இந்த டாஸ்மாக், சிகரெட், பீடி, பான்பராக் - இதெல்லாம் என்ன? Govt. மக்களுக்கும் கொடுக்கும் ஊட்ட சத்துகளா? இதுவும் சாவை நோக்கி தானே கொண்டு செல்கிறது. உங்க ஆட்சியிலே எங்கள மென்டலா அலையவிட்டு இருக்கீங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X