பொது செய்தி

இந்தியா

மல்லையாவுக்கு சிறையில் வசதிகள்; வீடியோவை சமர்ப்பித்தது இந்தியா

Added : ஆக 25, 2018 | கருத்துகள் (50)
Advertisement
India,Vijay Mallya,இந்தியா,மல்லையா,விஜய் மல்லையா

புதுடில்லி: பண மோசடி வழக்கில் தப்பியோடிய பிரபல தொழிலபதிபர் விஜய் மல்லையாவுக்கு, மும்பை ஆர்த்தர் சாலையில் வழங்கப்பட உள்ள வசதிகள் குறித்த, எட்டு நிமிடங்கள் அடங்கிய, 'வீடியோ'வை, லண்டன் கோர்ட்டில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

வங்கிகளில் கடன் வாங்கி, 9,000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாமீது வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து, 2016 மார்ச் மாதம், பிரிட்டன் நாட்டின் லண்டன் நகருக்கு தப்பியோடினார். வழக்குகள் விசாரணைக்காக அவரை நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

லண்டனில் உள்ள நீதிமன்றத்தில், இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. 'நாடு கடத்தப்பட்டால், மல்லையா, மஹாராஷ்டிர மாநிலம் மும்பை ஆர்த்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்படுவார்' என, மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், 'அந்த சிறையில், போதிய வசதிகள் இல்லை' என்று மல்லையா சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சிறையில் உள்ள வசதிகள் குறித்த தகவல்களை தாக்கல் செய்யும்படி, லண்டன் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மல்லையாவை அடைக்க திட்டமிட்டுள்ள, பாதுகாப்பு அதிகம் உள்ள, 12ம் எண் சிறை வளாகத்தில் உள்ள வசதிகள் குறித்த, எட்டு நிமிட வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ, லண்டன் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை, செப்., 12ல் மீண்டும் நடக்க உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
25-ஆக-201822:17:21 IST Report Abuse
adalarasan நம்ம காங்கிரஸ் தலைவர் வேறு இன்று, வெளிநாட்டிலேயே, இந்தியா சிறை சரி இல்லை என்று கூறிவிட்டார்…? நம்ம கேஸ் ஜெயிச்சமாதிரிதான்…?
Rate this:
Share this comment
Cancel
Kailash - Chennai,இந்தியா
25-ஆக-201818:47:11 IST Report Abuse
Kailash நமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதா? முன்னால் இந்தியாவை ஆண்ட அவர்களுக்கு இன்னமுமா பயம் ஒரு இந்திய குற்றவாளியை பிடிக்க இந்திய சிறையில் உள்ள அவனுக்கு செய்ய கூடிய வசதிகளை அந்த நாட்டுக்கு அந்த கோர்ட் நீதிபதிகளுக்கு காண்பித்து ஒப்புதல் பெற்ற பிறகு அவனை இங்கே கொண்டு வந்து அதே வசதியை செய்து தருகிறோம் என்று கெஞ்சிய பிறகு அனுப்புவார்களாம் இந்த அரசாங்கத்திற்கு குருமூர்த்தி சொன்ன சமாச்சாரம் இருக்கிறதா? ஒரு வேளை வசதி குறைவு என்று அவர் கருதினால் திரும்ப அவரை அந்த நாட்டுக்கே அனுப்பி விடுகிறோம் என்று மறைமுகமாக ஒப்புதல் அளித்திருக்குமா? சட்டத்தை மீறியவனுக்கு சட்டப்படி நடக்க தேவையில்லை.. அங்குள்ள தீவிரவாத கும்பலை தொடர்பு கொண்டு அவனை கடத்தி மறைமுகமாக பார்சலில் அனுப்பி இந்தியாவுக்கு கொண்டு வர துணிவு இருக்கிறதா? மொசாத் அமைப்பு அப்படி செய்யும்... குருமூர்த்தி சொன்ன அந்த சமாச்சாரம் இஸ்ரேல் நாட்டுக்கு இருக்கிறது....
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
25-ஆக-201817:21:49 IST Report Abuse
jagan இந்திய வக்கீல்கள் திறமை அவ்ளோதான் ...அங்க போய் வாதாடாம சாஷ்டாங்க நமஸ்காரம் செஞ்சிருப்பாங்க ...இட ஒதுக்கீடு எனும் கேன்சர் எப்பிடி எல்லாம் நாட்டை தாக்குது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X