சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரசுக்கு தொடர்பில்லை: ராகுல்

Updated : ஆக 25, 2018 | Added : ஆக 25, 2018 | கருத்துகள் (79)
Advertisement
காங்கிரஸ், ராகுல், பாஜக, எதிர்க்கட்சிகள்,  2019 லோக்சபா தேர்தல், காங்கிரஸ் தலைவர் ராகுல் , லண்டன் மாணவர்கள்,  பாரதிய ஜனதா, ராகுல் காந்தி , 
Congress, Rahul, BJP, Opposition, 2019 Lok Sabha election, Congress leader Rahul, London students, Bharatiya Janata, Rahul Gandhi,

லண்டன்: கடந்த, 1984 ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் ஈடுபடவில்லை என அக்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

லண்டனில் மாணவர்களிடம் கலந்துரையாடிய ராகுல், அடுத்த தேர்தலில் நேரடியான மோதல் இருக்கும். ஒரு புறம் பா.ஜ.,வும் மறுபுறம் மற்ற எதிர்கட்சிகள் அனைத்தும் இருக்கும். இந்திய அரசியல் சாசன அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதே இதற்கு காரணம்.
நாட்டில் விஷம் பரவுவதை தடுக்க வேண்டும் என்பதை நானும் மற்றும் எதிர்கட்சிகளும் ஒப்பு கொண்டுள்ளோம். பாரதிய ஜனதாவை வீழ்த்துவதே காங்கிரஸ் முக்கிய நோக்கம். இதன் மூலம் அரசியல் சாசன அமைப்புகள் ஆக்கிரமிக்கப்படுவது தடுக்கப்படும் என்றார்.

அப்போது, சீக்கியர் கலவரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு ராகுல் அளித்த பதில்: இந்த விவகாரத்தில் நான் தெளிவாக உள்ளேன். இது மிகப்பெரிய துயரம். வேதனையளிக்கும் சம்பவம். கலவரத்தில் காங்கிரஸ் ஈடுபட்டது என நீங்கள் சொல்லலாம். ஆனால், அதனை நான் ஏற்க மாட்டேன். நிச்சயம் அது வன்முறை தான். துயர சம்பவம் தான்.எங்களின் கொள்கையின் முக்கிய நோக்கம் அமைதி. வன்முறையால் பாதிக்கப்பட்டவன் நான். இதனால், யார் மீதும் எந்தவடிவில் வன்முறை நிகழ்த்தப்பட்டாலும் அதற்கு கண்டனம் தெரிவிப்பேன் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Palanivelu - Toronto,கனடா
26-ஆக-201805:32:35 IST Report Abuse
K.Palanivelu வெளிநாடு சென்று தாயக அரசியலை பேசி இஷ்டத்துக்கு புளுகிக் கொண்டிருக்கிறார். பின்னர் சீக்கியர்களை இந்திரா கொலைக்குப்பின்னர் பெருவாரியாக கொன்றது யார்? இவருக்கு வெளிநாடு செல்ல விசா கொடுத்ததே மிகப்பெரும் தவறு. அரசு அடுத்தமுறையாவது எச்சரிக்கையாக இருக்குமா?
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-ஆக-201804:24:54 IST Report Abuse
J.V. Iyer செய்வதெல்லாம் செய்துவிட்டு பிறகு முழு சோற்றில் பூசணிக்காயை மறைக்கிறார்கள். கான்-கிரேஸ் செய்த அட்டூழியங்கள் உலகம் அறிந்ததே. மக்கள் எதையும் மறக்கவில்லை, மன்னிக்கவில்லை. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவருக்கு பொய்யை தவிர வேறு பேசத்தெரியாது.
Rate this:
Share this comment
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
26-ஆக-201800:01:18 IST Report Abuse
sumutha - chennai // நாட்டில் விஷம் பரவுவதை தடுக்க வேண்டும் என்பதை நானும் மற்றும் எதிர்கட்சிகளும் ஒப்பு கொண்டுள்ளோம்.// கட்டிப்பிடிச்சு கண்ணடிக்கும்போது ஒனக்கு தெரியலையான்னு அங்க இருந்த யாருமேவா கேக்கலை?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X