பொது செய்தி

இந்தியா

ரபேல் ஒப்பந்தம் : ரூ.5000 கோடி நஷ்டஈடு கேட்டு அம்பானி வழக்கு

Added : ஆக 26, 2018 | கருத்துகள் (47)
Advertisement
அனில் அம்பானி, நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை, ரபேல் ஒப்பந்தம், காங்கிரஸ், நஷ்டஈடு

ஆமதாபாத் : ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை, தவறான தகவல் பரப்புவதாக கூறி, ரூ.5000 கோடி நஷ்டஈடு கேட்டு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டுடனான ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முந்தைய காங்., அரசு நிர்ணயித்த தொகையை விட இரு மடங்கு அதிக தொகைக்கு, தற்போதைய மத்திய அரசு ஒப்பந்தத்தை மாற்றியிருப்பதாகவும், இதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை மீது,ரூ.5000 கோடி நஷ்ட ஈடு கேட்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் ஆமதாபாத் சிவில் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் வெளியான கட்டுரை எங்கள் நிறுவனத்துக்கு களங்கமும் அவதூறும் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்த மாதம் 7ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஆக-201816:45:01 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஊழல் நடந்திருக்கிறது என்று பொய்ச்சொல்லியாவது மக்களை ஏமாற்றி பிழைக்கலாம் என்று நினைத்தால் உடனே வழக்கு போட்டுவிடுகிறார்கள். இப்படி செய்தால் நாங்கள் எப்படித்தான் பிழைப்பது - இத்தாலி காங்கிரஸ் ஆட்கள்.
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
27-ஆக-201812:37:45 IST Report Abuse
yila உங்க விமான கம்பெனி எங்கே இருக்குங்க? கொஞ்சம் காட்டுங்க? கம்பெனியே இல்லாம விமானம் தயாரிப்பா?
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
27-ஆக-201801:15:07 IST Report Abuse
Anandan இவரே கம்பனி நடத்த முடியாம கடனாகி அண்ணனுக்கு வைத்தவர் இவருக்கு 5000 கோடி இழப்பீடா? சிரிப்பு சிரிப்பா வருது. இப்படி பட்ட ஆளுக்கு இந்த காண்ட்ராக்ட் கொடுத்திருக்கும் இந்த அடிமை கட்சியை என்னவென்று சொல்வது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X