இந்திராவும், ராஜிவும் மாரடைப்பால் இறந்தார்கள்

Added : ஆக 26, 2018 | கருத்துகள் (77)
Advertisement
ராகுல், சிரோன்மணி அகாலிதளம், சீக்கிய படுகொலை

புதுடில்லி : இங்கிலாந்து சென்றுள்ள காங்., தலைவர் ராகுல், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் 1984 ம் ஆண்டு நடந்த சீக்கிய படுகொலை சம்பவம் குறித்து பேசினார். அப்போது அவர், எனக்கு எந்த குழப்பமும் இல்லை சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மிகவும் வலி நிறைந்தது. அதில் காங்.,கு க்கு தொடர்பு உள்ளது என கூறுவதை என்னால் ஏற்க முடியாது. வன்முறை சம்பவம், பின்னர் கலவரமாக மாற்றி உள்ளது என்றார்.
இதற்கு சிரோமணி அகாலிதளம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறுகையில், ராகுலின் இந்த கருத்து, காயத்தில் உப்பை தடவுவதை போல் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் சீக்கிய படுகொலை நடக்கவும் இல்லை, சீக்கியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று கூட ராகுல் சொல்வார். இதன் மூலம் சீக்கிய இனபடுகொலையில் தொடர்புடைய காங்., தலைவர்களை ராகுல் காப்பாற்ற நினைக்கிறார்.
ராகுலின் பாட்டி சீக்கியர்களை அழித்தார். அவரது தந்தை பஞ்சாப்பை துண்டாக்கினார். ராகுலின் தந்தை படைகளை அனுப்பி ஆயிரக்கணக்கான சீக்கியர்களை கொன்றார். இந்த இன படுகொலை தான் அவர்கள் பஞ்சாப்பிற்கு தந்தது. குழந்தை தனமான அரசியல் மற்றும் முதிர்ச்சியின்மை காரணமாக காங்., தலைவர் நாட்டிற்கு பொய் சொல்கிறார் என்றார்.
மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ராகுலின் மூளையில் எனது மூளையை வைத்து சொல்கிறேன். அவரது கூற்றுபடி சீக்கிய படுகொலை நடக்கவே இல்லை என்றால், எனது கூற்றுப்படி அவரது தந்தையும், பாட்டியும் படுகொலை செய்யப்படவே இல்லை. அவர்கள் இருவரும் சாதாரண மாரடைப்பாலேயே உயிரிழந்தனர் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 2014 ம் ஆண்டு டிவி சேனல் ஒன்றிற்கு ராகுல் அளித்த பேட்டியில், சீக்கிய படுகொலையில் காங்., தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக பேசிய வீடியோ மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் தலைவர் சோனியா ஆகியோர் சீக்கிய இனபடுகொலைக்காக மன்னிப்புக் கேட்ட வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
27-ஆக-201812:35:06 IST Report Abuse
Nallavan Nallavan பப்புவின் வடிகட்டிய பொய்க்குச் சரியான பதிலடி கொடுத்தார் ....
Rate this:
Share this comment
Cancel
வீர சொம்பு கேசரி - New Delhi,இந்தியா
27-ஆக-201801:47:13 IST Report Abuse
வீர சொம்பு கேசரி அப்போ மகாத்மா காந்தி பாத்ரூமில் தவறி விழுந்து செத்தாரா?
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
27-ஆக-201815:03:21 IST Report Abuse
Nallavan Nallavanஅறிவாளியே ..... அவரது பேச்சுக்கு இவர் பதிலடி கொடுத்துள்ளார் ..... அவ்வளவே .......
Rate this:
Share this comment
வீர சொம்பு கேசரி - New Delhi,இந்தியா
28-ஆக-201800:30:07 IST Report Abuse
வீர சொம்பு கேசரிகோட்ஸே கோவிலிலிருந்து அதை எழுதியிருந்தேன் அறிவாளியே....
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
28-ஆக-201814:58:15 IST Report Abuse
Nallavan Nallavanதெரியாதா, படித்தவுடனேயே அதை புரிந்துகொண்டேன் புத்திசாலியே ........
Rate this:
Share this comment
Cancel
prem - Madurai ,இந்தியா
26-ஆக-201818:20:35 IST Report Abuse
prem என்னது.... இந்திராவும். ராஜீவும் செத்துட்டாங்களா....? பப்புவின் மைண்ட் வாய்ஸ்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X