பொது செய்தி

இந்தியா

உலகின் பழமையான மொழி தமிழ்: பிரதமர் பேச்சு

Added : ஆக 26, 2018 | கருத்துகள் (111)
Share
Advertisement
புதுடில்லி: உலகிலேயே பழமையான மொழி தமிழ் என்பதில் தேசம் பெருமை கொள்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.வாழ்த்துமன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் பேசியதாவது: உலகிலேயே பழமையான மொழி தமிழ் என்பதில் தேசம் பெருமை கொள்கிறது. சமஸ்கிருதம் நமது கலாசாரத்துடன் இணைந்தது. அது இந்தியாவின் உயர்ந்த மொழி.சமஸ்கிருத வாரத்தை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்து
பிரதமர் மோடி, மன்கி பாத்,  பெண்கள்,தமிழ், இந்தியா, கேரளா, மக்கள்

புதுடில்லி: உலகிலேயே பழமையான மொழி தமிழ் என்பதில் தேசம் பெருமை கொள்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.


வாழ்த்து

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் பேசியதாவது: உலகிலேயே பழமையான மொழி தமிழ் என்பதில் தேசம் பெருமை கொள்கிறது. சமஸ்கிருதம் நமது கலாசாரத்துடன் இணைந்தது. அது இந்தியாவின் உயர்ந்த மொழி.சமஸ்கிருத வாரத்தை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.ஆசிரியர்களே நமது எதிர்காலத்தை வடிவமைக்கின்றனர். ஆசிரியர்களும், அறிவும் விலை மதிப்பற்றவை. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். பெற்றோருக்கு பின் ஆசிரியர்கள் தான் நம்மை புரிந்து கொள்கின்றனர்.


நம்பிக்கை

சோகமான நேரத்தில் கேரளாவுக்கு ஆதரவாக அனைத்து மக்களும் உள்ளனர். இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீண்டு வர வேண்டி கொள்கிறோம். இயற்கை சீற்றங்கள் பேரழிவை ஏற்படுத்தினாலும், மக்களிடம் ஒற்றுமையை கொண்டு வர ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.கேரளாவில் உண்மையான கதாநாயகர்களாக முப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள், மக்களை காப்பாற்றவும், உதவவும் எந்தவொரு வாய்ப்பையும் தவறவிடவில்லை. கேரளா மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


தேசப்பக்தர்

நல்ல நிர்வாகத்தை அறிமுகப்படுத்திய வாஜ்பாயை நாடு என்றும் நினைவில் வைத்திருக்கும். நாட்டின் வளர்ச்சிக்கு உண்மையான பங்களிப்பை அளித்துள்ளார். சிறந்த தேசபக்தர். அவரை பற்றிபேச வேண்டும் என நிறைய கடிதங்கள் வந்துள்ளன. அவரது மறைவு செய்தியை கேட்ட மக்கள் வருத்தப்பட்டனர்.


சட்டத்தில் திருத்தம்

பெண்களுக்கு எதிராக நடக்கும் எந்த அநீதியையும் சமூகம் பொறுத்து கொள்ள முடியாது. இதனை கருத்தில் கொண்டு தான் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் குற்றச்செயல் திருத்த மசோதாவில் மாற்றம் செய்யப்பட்டது. முத்தலாக் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் இன்னும்நிறைவேற்றப்படவில்லை. இந்த நேரத்தில், முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக தேசம் உள்ளது. அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வேன்.

மழைகால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. சமூக நீதி இளைஞர் நலனுக்கு உகந்ததாக அமைந்தது. ஆசிய விளையாட்டு போட்டிகளை கோடிக்கணக்கான மக்கள் கவனித்து வருகின்றனர். அங்கு பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (111)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
27-ஆக-201807:57:27 IST Report Abuse
Kuppuswamykesavan //////Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா 26-ஆக்-2018 16:54 1. சமஸ்கிருதம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் வடபகுதியில் உருவாக்கப் பட்ட மொழி. அதற்கு முந்திய மொழி பிராகிருத மொழி. பல் வேறு மலை வாசி மக்களால் பேசப் பட்ட கூட்டு மொழிகள் - இந்தக் கூட்டு மொழிக்கு இலக்கணமில்லை. அன்று பாணினியென்ற மொழி அறிஞரால் இலக்கணம் அறிமுகப்படுத்தப் பட்டு ஒருப் புதிய மொழி உருவாக்கம் கண்டதால் சமஸ்கிருதம் என்றுப் பெயரிடப்பட்டது. இந்த வடமொழியில் சமஸ்கிருதமென்றால் தூய்மைப் படுத்ததென்றுப் பொருள். (With the introduction of grammar in prakrithi language in 500 B.C, Sanskrit was born. Sanskrit means purified.) 2. சமஸ்கிருதம் இந்தியக் கலாசாரத்துடன் இணைந்தது என்பதை மட்டும் ஏற்றுக்கொள்வதில் தயக்கமில்லை. ஆனால் அது இந்தியாவின் உயர்ந்த மொழி என்பதை சொல்வதற்கு முன் மோடி அவர்கள் தமிழர்களின் சைவ சித்தாந்த்தத்தின் அறிய நூட்களான திருமுறைகள் மற்றும் அதில் அடங்கியுள்ள திருவாசகம் திருப்புகழ் போன்ற நூட்களை தமிழ் எப்படிக் கண்டதென்று அறிந்தால் அந்தத் தமிழே இந்தியாவின் உயர்ந்த மொழியாகப் போற்றப்படும். இதுதான் உண்மை. 3. இங்கே இன்னொருக் கேள்வியும் உருவாகின்றது. ஹிந்து மதம் மிகப் பழமையான மதமென்று சொல்கின்றோம். இந்தப் பழமையான மதம் சம்ஸ்கிருத மொழி வருகைக்கு முன் எந்த மொழியில் இயங்கியதென்றக் கேள்வியும் எழுகின்றதே. இதற்க்கு விடைக் காண முடியுமா?.////// - ஐயா, ஆதியில், நம் இந்தியாவில் வாழ்ந்து வந்த, பல ஆயிரம் தெய்வங்களையும், பல ஆயிரம் மொழிகள் பேசும் மக்களையும், பல ஆயிரம் வழிபாட்டு முறைகளையும், ஒன்றாக இணைத்து, இந்து மதம் என ஒருங்கிணத்தவராக, உலக மகா ஆன்மீக பெரியவர், ஆதிசங்கரரைத்தான் கூறுவார்கள், இன்றைய ஆன்மீக அன்பர்கள். அதாவது, நீரானது, பல கால்வாய்கள், பல ஆறுகள், பல நதிகள் என உருமாற்றம் அடைந்து, ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து தங்கி, அது கடல் என அழைக்கப்படுவது போல, எனவும் நாம் கூறலாம். ஆதியில், இந்து மதத்தின், யதார்த்த நிலை, இப்படித்தான் அமைந்தது எனலாங்க.
Rate this:
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
27-ஆக-201807:38:52 IST Report Abuse
Kuppuswamykesavan ////jayakumar - Vellore,இந்தியா 26-ஆக்-2018 22:58......//// - ஐயா, பொதுவாக, கறுப்பு பணத்தால் உருவான நிறுவனங்களோ, நபர்களோ, அவர்களுக்கு தோதான கட்சியின் ஆட்சி, 2019-இல், மத்தியில் வருவதற்கு கடுமையாக உழைப்பார்கள் தானே?. ஏன்னா?, அப்பத்தான், மீண்டும் ஒரு முறை, கறுபணங்களை சம்பாரிக்க முடியும், தானும் தன் குடும்பத்தினர்களும் சுக போகமாக வாழ முடியும், இன்னும் பல தலைமுறைகளுக்காக கறுப்பு பணங்கள் சேர்த்திட முடியும். அதனால் தான், சில என்ஜிஓக்கள் ஆசாமிகள், ஹவாலா ஆசாமிகள், கள்ளகடத்தல் ஆசாமிகள், ஊழல் ஆசாமிகள், கொள்ளையிடும் ஆசாமிகள், வரி ஏய்க்கும் ஆசாமிகள், தேச துரோக ஆசாமிகள், அன்னிய மதங்களின் ஆசாமிகள், அப்படிப்பட்ட, கறுப்பு பணம் சம்பாரிக்க, தோதாக உதவுவுகிற, தலைவர்களையும், அதன் கட்சியையும், மிக தீவிரமாக, இன்றைக்கு ஆதரிக்கிறார்கள் எனலாம்.
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
27-ஆக-201800:25:26 IST Report Abuse
Amal Anandan ஒட்டு வாங்க என்னவெல்லாம் பேச வேண்டி இருக்கிறது? நல்ல நடிகர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X