பசுவதைக்கான தண்டனையே கேரள வெள்ளம் : பா.ஜ., எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு | Dinamalar

பசுவதைக்கான தண்டனையே கேரள வெள்ளம் : பா.ஜ., எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு

Updated : ஆக 27, 2018 | Added : ஆக 27, 2018 | கருத்துகள் (110)
Advertisement
கேரளா வெள்ளம், பசுவதை,முன்னாள் பாஜக அமைச்சர், பசன்கவுடா பாட்டில் யட்னால், கர்நாடகா, கேரளா மக்கள்,கேரளா நிவாரண முகாம், கர்நாடக பாஜக எம்எல்ஏ, Kerala floods, Cow slaughter,, former BJP minister, Bhasan Gowda
patil yatnal, Karnataka, Kerala people, Kerala relief camp, Karnataka bjp MLA,

பெங்களூரு : கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா, இன்னும் முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. நிவாரண பணிகளும், அதற்காக நிதி திரட்டும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. லட்ச கணக்கான மக்கள் இன்னும் வீடு திரும்ப முடியாமல் நிவாரண முகாம்களிலேயே தங்கி உள்ளனர்.

இந்நிலையில் கேரள வெள்ளம் குறித்து கர்நாடக பா.ஜ., எம்.எல்.ஏ., பசன்கவுடா பாட்டீல் யட்னால் பேசிய உள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரளா வெள்ளம் குறித்து பேசிய அவர், கேரளாவில் பசுக்கள் கொல்லப்படுவதற்காக அளிக்கப்பட்ட தண்டனை தான் இந்த வெள்ளம். இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தியதால் தான் கேரளா பாதிக்கப்பட்டுள்ளது. பசுவதை என்பது இந்துக்களின் மத உணர்வுக்கு எதிரானது.
மற்ற மதத்தின் உணர்வுகளை யாரும் காயப்படுத்த கூடாது. அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பதை கேரளாவில் இப்போது பார்க்கிறோம். அவர்கள் வெளிப்படையாக பசுக்களை கொன்றனர். ஓராண்டிற்குள்ளாகவே அவர்கள் இந்த நிலைக்கு வந்து விட்டனர். இந்து மதத்தை காயப்படுத்துபவர்கள் இது போன்று தான் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சரான யட்னால், சமீபத்திய கர்நாடக தேர்தலின் போதும், தான் வெற்ற பெற்றதற்கு இந்துக்கள் தான் காரணம் என்றும், இந்துக்களின் முன்னேற்றத்திற்கே தான் பாடுபட உள்ளதாகவும், இஸ்லாமியர்களுக்கு இல்லை என்றும் பேசி சர்ச்சையில் சிக்கியவர். சில ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.,வில் இருந்து விலகி இவர், கர்நாடக தேர்தலுக்கு முன் தான் மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (110)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஆக-201804:27:16 IST Report Abuse
ரபேல் ஊழல் நாயகன் மோடி: குஜராத் பூகம்பத்திற்கும் , உத்தரகண்ட் வெள்ளத்திற்கும் யார் காரணம்
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
28-ஆக-201820:14:23 IST Report Abuse
Pannadai Pandianஜிக்னேஷ் மேவாணி ........
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
27-ஆக-201818:41:57 IST Report Abuse
Pugazh V AR என்கிற புது ஐ டியில் வரும் அரூராங் சொல்றார் :: கேரளாவில் 1% தான் சைவர்களாம். மிகவும் தவறான பொய்யான தகவல். சாரி. இங்கே 36 கோவில்களில் வெள்ளம் புகுந்தது. 76 அர்ச்சகர்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இப்பவும் வீடு பழைய நிலைக்கு வரவில்லை. இதில் பலரும் என் நண்பர்கள். சும்மா வாசகர்கள் தகவலுக்காக.
Rate this:
Share this comment
sridhar - Chennai,இந்தியா
27-ஆக-201820:42:48 IST Report Abuse
sridharசர்ச், மசூதிகளில் எந்த பாதிப்பும் என்று சேர்த்து விடுவதுதானே....
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
27-ஆக-201818:20:59 IST Report Abuse
S.Baliah Seer .பசுவை இந்து மதத்தோடு தொடர்பு படுத்தி பேசுபவர்கள் ஒன்று மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல் அறிவே இல்லாத அரை வேக்காடாக இருக்க வேண்டும். பசுவை கோமாதா என்பதும்,யானையை விக்னேஸ்வரா என்பதும் சிலருடைய விருப்பம். அதை மற்றவர் மீது திணிக்க நினைப்பது அறியாமையின் உச்ச கட்டம். பசுவின் பாலைக் குடித்துவிட்டு,அதன் கன்றுக்கு துரோகம் இழைப்பவர்கள் இந்தியாவின் ஒருபகுதி மக்களை வெள்ளத்துக்கும், பசு மாமிசம் உண்பதற்கும் தொடர்பு படுத்திப் பேசுவது வக்கிரம். பசுவதை பற்றி பேசுபவன் முதலில் அதன் பாலை களவாடி உண்ணக்கூடாது. மாட்டுக்கறி புசிப்பவனுக்கு அது காளையா அல்லது பசுவா என்று தெரியாது. ஆனால் பால் குடிப்பவனுக்கு அது பசுவிடம் இருந்துதான் பிடுங்கப்பட்டது என்று தெரியும்.முன்னவனை விட ,பின்னவனே பெரிய குற்றவாளி.
Rate this:
Share this comment
RR Iyengar - Bangalore,இந்தியா
27-ஆக-201818:47:19 IST Report Abuse
RR Iyengarஎங்கள் நாட்டில் எங்களின் நம்பிக்கையை கேலி செய்ய நீ யார் ... உனக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது ... நீ வேண்டுமானால் எம் தர்மத்தின் பெருமை அறியாமல் இருக்கலாம் ... இந்த உலகம் தோன்றி பல லட்சம் கோடி வருடங்களாகின்றன ... அதை நீ சொம்படிக்கும் மதங்களே ஒப்புக்கொள்கின்றன ... 2018 /1800 வருடத்திற்கு முன்பும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களை பெருமையாக நினைத்து நீ உளறுவதாக இருந்தால் உன் வீட்டில் மட்டும் உளறவும் ... காலங்காலமாக வரும் நம்பிக்கைகளை சிதைத்து மனிதர்களால் உருவாக்கப்பட்ட அந்நிய மதங்களை வளர்த்தெடுக்க பாடுபட்டவர்களின் கருத்தை தான் நீயும் சொல்கிறாய் ... இந்த உலகில் தெய்வத்தை நேரடியாக வணங்கும் இனம் எம் இனம் மட்டுமே ... மற்றவர்கள் ஏஜென்ட்கள் மூலமாகவே தெய்வத்தை வழிபடுகிறார்கள் ... இதெற்கெல்லாம் எங்களிடம் ஏராளமான ஆதாரங்கள் இருக்கிறது...
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
27-ஆக-201820:09:12 IST Report Abuse
Darmavanஉளறலின் உச்சம்....
Rate this:
Share this comment
sankar - trichy,இந்தியா
28-ஆக-201801:19:17 IST Report Abuse
sankarஉயிரை திருடுபவனும் (பசுவை கொல்பவனும் ) உடையதாய் ஈடுபவனும் ஒன்றா ??? மதம் மாற்றம் கூடாது என்று ஏன் சொல்கிறோம் என்பதற்கு நீ பேசுவது தான் உதாரணம் . ஒரு வீட்டில் ஒரு ஹிந்து கிறிஸ்டின் முஸ்லீம் எப்படி ஒன்றா வாழ முடியும் ??? ஒரு கிளாசில் டீச்சரின் பாடத்தை கவனியாது விளையாடுவது என் விருப்பம் என்று மாணவன் சொல்ல முடியுமா . அதே போல் ஒரு இசுலாமிய நாட்டில் ஹிந்துக்கள் குங்குமம் விபூதி வைக்க முடியுமா (அரேபியா ) . அது சரி என்றால் நீங்கள் பசுவதை செய்வதை எதிர்ப்பதும் சரிதான் . இந்துக்களுக்கு சகிப்பு தன்மை அதிகம் . உங்கள் செயல்களை சகித்துக்கொள்கிறார்கள் . சகித்து கொள்ளுமாம் அளவில்தான் உங்கள் செயல் இருந்தால் அதை சரியாய் செய்ய வேண்டியதும் நீங்கள்தான்...
Rate this:
Share this comment
28-ஆக-201804:23:30 IST Report Abuse
ரபேல் ஊழல் நாயகன் மோடி:@RR Iyengar - bangalore,இந்தியா: அப்ப மாடு மேய்க்க போகவேண்டியது தானே. இங்க ஏன் வாந்தி எடுக்கிற ....
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
28-ஆக-201820:21:57 IST Report Abuse
Pannadai Pandianமாடு மேய்க்க அதான் உன்னை வச்சுருக்காரே, அப்பா அவரு ஏன் மாடு மேய்க்கணும் ???...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X