பதிவு செய்த நாள் :
ஆர்.எஸ்.எஸ்., கருத்தரங்கம்
ராகுல், யெச்சூரிக்கு அழைப்பு

ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் சார்பில் நடத்தப்படும் கருத்தரங்கில் பங்கேற்கும்படி, காங்கிரஸ் தலைவர் ராகுல், மார்க்., கம்யூ., பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., கருத்தரங்கம் ராகுல், யெச்சூரிக்கு அழைப்பு

'மத்தியில் ஆளும், பா.ஜ., அரசுக்கு கொள்கைகளை வகுத்து தரும் அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் செயல்படுகிறது' என, பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது.சமீபத்தில் வெளிநாடுகளில் நடந்த கூட்டங்களிலும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை விமர்சித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் கடுமையாக பேசினார்.


இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில், 'பாரதத்தின் எதிர்காலம் - ஆர்.எஸ்.எஸ்., கண்ணோட்டம்' என்ற பெயரில், செப்., ௧௭ முதல், மூன்று நாள் கருத்தரங்கம் டில்லியில் நடத்தப்பட உள்ளது.இந்தக்கருத்தரங்கில் பங்கேற்கும்படி, காங்கிரஸ் தலைவர் ராகுல், மார்க்., கம்யூ., பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தங்கள் அமைப்பு, அரசியலுக்கு அப்பாற்பட்ட, சமூக மற்றும் கலாசார அமைப்பு என, ஆர்.எஸ்.எஸ்., தொடர்ந்து கூறி வருகிறது. அதை நிரூபிப்பதற்கான வாய்ப்பாக இந்தக் கருத்தரங்கை, ஆர்.எஸ்.எஸ்., பயன்படுத்தியுள்ளது.இது குறித்து அமைப்பின் தலைமை பிரசாரக், அருண் குமார், கூறியதாவது:உலகின் மிகவும் தனிச்சிறப்புள்ள, சிறந்த நாடாக இந்தியா மாறியுள்ளது. அதே நேரத்தில், நம்நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது குறித்தும், ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் உள்ளிட்டவை குறித்தும், இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.ஆர்.எஸ்.எஸ்.,

Advertisement

அமைப்பின் கண்ணோட்டத்தில், இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை, அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேச உள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.அதன்படி தான், காங்கிரஸ் தலைவர் ராகுல், மார்க்., கம்யூ., பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு எதிராக கருத்துகளை கூறி வரும் நிலையில், இந்தக் கருத்தரங்கில் ராகுல், யெச்சூரி ஆகியோர் பங்கேற்பரா... என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. RAGHURAMAN - BENGALURU ,இந்தியா
30-ஆக-201819:12:06 IST Report Abuse

S. RAGHURAMANஸ்ரீ அவர்களின் கட்டுரையை படித்துவிட்டு இரண்டு விருந்தாளிகளும் கருத்தரங்கில் கலந்து கொண்டால், கருத்தரங்கு முழுவதும் பங்கு கொள்வது மட்டுமல்லாமல் முடிந்த பிறகு பாரத் மாதாகீ ஜெய் என்ற கோஷத்துடன் வெளியே வருவார்கள். சமீபத்தில் பாரூக் அப்துல்லாவின் கோஷத்தை நாம் கேட்டோம்.

Rate this:
Sudarsanr - Muscat,ஓமன்
28-ஆக-201821:25:15 IST Report Abuse

Sudarsanrஸ்ரீ அவர்களே அருமை. உண்மையை தெளிவாக, கோர்வையாக கூறியுள்ளீர்கள். நன்றி.

Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
28-ஆக-201816:43:08 IST Report Abuse

Loganathaiyyanஇன்னும் இந்த அழைப்பு தன்னிடம் வரவில்லை என்று பப்பு சொல்லியாச்சே.

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X