தீன் மூர்த்தி பவனை தொடாதீர்கள்' : பிரதமருக்கு மன்மோகன் கடிதம் Dinamalar
பதிவு செய்த நாள் :
தீன் மூர்த்தி பவனை தொடாதீர்கள்' :
பிரதமருக்கு மன்மோகன் சிங் கடிதம்

புதுடில்லி: 'ஜவஹர்லால் நேரு, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கே சொந்தமானவர்; அவரது நினைவு இல்லத்தில், மாற்றங்கள் செய்யாதீர்கள்' என, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கூறியுள்ளார்.

தீன் மூர்த்தி பவனை தொடாதீர்கள்' : பிரதமருக்கு மன்மோகன் கடிதம்

நம் நாடு சுதந்திரம் பெற்ற பின், முதல் பிரதமராக, ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். அவர், ஆங்கிலேயரால் கட்டப்பட்ட, தீன் மூர்த்தி பவனில் வசித்து வந்தார். கடந்த, 1964ல், இறக்கும் வரை, அந்த இல்லத்திலேயே வசித்து வந்தார்.

அவர் மறைவுக்கு பின், அந்த இல்லம், ஜவஹர்லால் நேரு நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. அங்கு, அவரது நினைவாக அருங்காட்சியகமும், நுாலகமும்அமைக்கப்பட்டன.இந்நிலையில், தீன் மூர்த்தி பவனை, முன்னாள் பிரதமர்கள் அனைவருக்கும் பொதுவான நினைவு இல்லமாக மாற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது; இதற்கு, காங்., தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்., மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:நாட்டின்முதல் பிரதமரின் நினைவாக, தீன் மூர்த்தி பவன் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் எந்தவிதமான மாற்றமும் செய்யக் கூடாது. எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.ஜவஹர்லால் நேரு, காங்கிரஸ்

Advertisement

கட்சிக்கு மட்டும் சொந்தமானவரல்ல; இந்த நாட்டுக்கே சொந்தமானவர். அவரது நினைவு இல்லத்தை பாதுகாப்பது, நம் வரலாற்றையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் விஷயம்.வாஜ்பாய், ஆறு ஆண்டுகள் பிரதமராக இருந்தபோது கூட, தீன் மூர்த்தி பவனில் மாற்றங்கள் செய்ய நினைக்கவில்லை. ஆனால், இந்த அரசு, அதை செய்ய நினைப்பது வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு, அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
28-ஆக-201816:56:09 IST Report Abuse

அம்பி ஐயர்முன்னாள் பிரதமர்களுக்கு நினைவிடம் அமைப்பது போல முன்னாள் ஜனாதிபதிகள்.... முன்னாள் முதலமைச்சர்கள்.... முன்னாள் கவர்னர்கள்..... முன்னாள் மத்திய மாநில மந்திரிகள்..... மற்றும் மேலவை....கீழவை உறுப்பினர்கள்.... ராஜ்யசபா உறுப்பினர்கள்.... முன்னாள் வார்டு கவுன்சிலர்கள் வரை..... எல்லோருக்கும் அவர்கள் செத்தபின் அவர்கள் வாழ்ந்த வீட்டை நினைவிடம் ஆக்க வேண்டும்...... அப்போது தான்... சமூக நீதி ''பேணிக் காக்கப்படும்...'' இதற்காக அனைத்து மத்திய மாநில அரசுகளும் முன்வர வேண்டும்....

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
28-ஆக-201816:52:53 IST Report Abuse

Endrum Indianஏற்கனவே காங்கிரஸ் அதல பாதாளத்தில் இதிலே தீன் மூர்த்தி பவனில் எல்லா பிரதமர்கள் நினைவுகள் என்றால் முஸ்லீம் நேரு கூட ஒரு பிரதமர் என்று அவரின் புகழ் ஜோதி மங்கிவிடும் என்ற பயத்தில் தான் இதெல்லாம் நடக்கின்றது. மற்றும் தன்னுடைய சொத்து என்று தீன் மூர்த்தி பவனை பப்பு வரை வைத்துக் கொண்டிருப்பதால் தான் இந்த பயம் அவர்கள் மனதில் எழுகின்றது ஆகவே தான் இந்த எதிர்ப்பு.

Rate this:

வினோத்,அறந்தை..அது என்னடா தீன் மூர்த்தி பவன்,ஒன்னு தீன் பவன்னு வை..இல்ல மூர்த்திபவன் னு வை...சந்தானம் தல தளபதி சலூன் மாதிரியா....

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X