பதிவு செய்த நாள் :
தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில்   மாற்றமில்லை! ...

தமிழகத்தில் அமலில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீடு முறைக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த இடஒதுக்கீடு முறை செல்லுமா என்பது குறித்த இறுதித் தீர்ப்பு, வரும் நவம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 69 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம், அமலில் உள்ளது.இந்த சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, தமிழகத்தைச் சேர்ந்த மாணவியர் சஞ்சனா மற்றும் அன்னபூரணி ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:இந்திரா சாஹ்னி வழக்கில், மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி, 50 சதவீதத்துக்கும் மேல், இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.ஆனால், 69 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், தமிழக அரசு, 1993ல் சட்டம் இயற்றி, அதை, 1994 முதல்அமல்படுத்திஉள்ளது.
தற்போது நடக்கும், 2018 - 2019ம் கல்விஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில், 50 சதவீத பொது இடங்களுக்குள் சேருவதற்கு, எங்களுக்கு வாய்ப்பு உள்ளது.ஆனால், தமிழகத்தில், 69 சதவீத

இடஒதுக்கீடு உள்ளதால், பொது இடங்களில் எங்களுக்கான வாய்ப்பு பறிபோயுள்ளது.பல்வேறு காரணங்களால், 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட இடங்களில் பல, நிரப்பப்படவில்லை; அவை, மத்திய தொகுப்புக்கு திருப்பி தரப்பட்டுள்ளன.அதே நேரத்தில், மதிப்பெண் தகுதி இருந்தும், ௬௯ சதவீத இடஒதுக்கீட்டால், எங்களுக்கு மருத்துவம் பயிலும் வாய்ப்புகிடைக்கவில்லை.
தமிழகத்தில், 69 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கு, சட்டசபையின் அனுமதி

பெறவில்லை; அரசியலமைப்பு சட்டத்திலும் திருத்தம் செய்யவில்லை.உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதாகவும், அது உள்ளது. அதனால், 69 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். மருத்துவப் படிப்பில் கூடுதல் இடங்களை ஒதுக்கி, எங்களுக்கு படிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதிகள், அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு முன், நேற்று

விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர், கே.எம்.விஜயன்,வழக்கறிஞர் சிவபால முருகன் ஆகியோர், மனுதாரர் சார்பாக ஆஜராகி வாதிட்டனர்.'மண்டல் கமிஷன் தீர்ப்பில், 50 சதவீதத்துக்கு மேல், இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என, கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில், 69 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுவதால், தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு பறிபோகிறது' என, வாதிடப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட அமர்வு, 69 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் தமிழக அரசு சட்டத்துக்கு, தடை விதிக்க மறுத்தது; அது தொடர்பான மனுவையும் தள்ளுபடி செய்தது. 'கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும்' என்ற, மாணவியரின் கோரிக்கையையும் நிராகரித்தது.இது தொடர்பாக நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:இந்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டாலும், தமிழக அரசின் சட்டம் செல்லுமா என்பது தொடர்பாக விசாரிக்கப்படும்.இது தொடர்பாக, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வின் விசாரணை தேவையா என்பது குறித்து, நவம்பரில் விசாரித்து, இறுதி தீர்ப்பு அளிக்கப்படும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
29-ஆக-201814:30:58 IST Report Abuse

Pugazh V/69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட இடங்களில் பல, நிரப்பப்படவில்லை அவை, மத்திய தொகுப்புக்கு திருப்பி தரப்பட்டுள்ளன./ இதுதான் சட்டம். சட்டப்படி தான் நடந்திருக்கிறது. When the reserved seats are not filed, such vacancies suhail be de-reserved and combined with general quota. பிறகென்ன பாதிப்பு?

Rate this:
Sridharan R. Ramanuja Dasan - Toronto,இந்தியா
28-ஆக-201821:26:06 IST Report Abuse

Sridharan R. Ramanuja DasanIs this followed in Political parties like DMk?

Rate this:
GMM - KA,இந்தியா
28-ஆக-201820:28:04 IST Report Abuse

GMMe based reservation for education and job is not equally providing to all listed communities. e is formed by the group of people for trade and to arrange the marriage relation. But, political parties are using as vote bank. Majority populated es are getting education,job, political and minister posts. The ECI has to find a way for less populated es.

Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X