அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., தலைவராக ஸ்டாலின் தேர்வு: அன்பழகன் அறிவித்தார்

Added : ஆக 28, 2018 | கருத்துகள் (147)
Advertisement
 தி.மு.க., தலைவர், ஸ்டாலின், தேர்வு, D.M.K,DMK,M.K.Stalin,Stalin

சென்னை: திமுக பொதுக்குழுவில் தி.மு.க., தலைவராக ஸ்டாலின் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை அறிவாலயத்தில் இன்று ( 28 ம் தேதி) காலை 9 மணியளவில் தி.மு.க., பொதுக்குழு துவங்கியது. பொது செயலர் அன்பழகன் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் , பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கட்சியின் தலைவர், பொருளாளர் பொறுப்புகளுக்கு நேற்று முன்தினம் (26 ம்தேதி) காலை முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டன. பரிசீலனைக்கு பின்னர் பொது செயலரிடம் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இன்று முறைப்படி திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பொது செயலர் அன்பழகன் அறிவித்தார். ஸ்டாலின் தலைவராக ஆர்.எஸ்.பாரதி முன்மொழிந்தார். டி.கே.எஸ். இளங்கோவன் வழிமொழிந்தார்.


தலைவர்களுக்கு இரங்கல்


முன்னதாக கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி சுர்ஜித்சிங் பர்னாலா, கோபிஅன்னன் ஆகியோரது மறைவுக்கும், இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அறிவாலயம் வருவதற்கு முன்னர் ஸ்டாலின் கோபாலபுரத்தில் வசித்து வரும் தனது, தாய் தயாளுவிடம் ஆசி பெற்றார்.

Advertisement
வாசகர் கருத்து (147)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
29-ஆக-201804:00:27 IST Report Abuse
ManiS Time starts now for DMK. Until Anbazhagan and Duraimurugan were there, No severe demolitions. Without them, He is nothing.
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
29-ஆக-201802:17:29 IST Report Abuse
Rpalnivelu மிஸ்டர் நம்பர் டூ ( பேராசிரியர் ) பெர்மனென்ட் நம்பர் டூ தானா? பெர்மனென்ட் நாமம் தானா?
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
28-ஆக-201821:15:39 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) எப்படியும் கட்சி விளங்காமல் போகும் வௌக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சலம் எதுக்கு ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X