வாசகர்களுக்கு நன்றி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாசகர்களுக்கு நன்றி

Updated : ஆக 30, 2018 | Added : ஆக 28, 2018 | கருத்துகள் (167)
Advertisement
 20ம் ,ஆண்டில், உங்கள், தினமலர்.காம்

தினமலர்.காம் வாசகர்களே!உங்கள் அபிமான நமது இணையதளம் 20ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்நன்னாளில் சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.


நடுநிலை:


தினமலர் நாளிதழின் இணையதளமான தினமலர் டாட் காம் 20 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. 24 மணி நேரமும் சுடச்சுட செய்திகள், படங்கள், விடியோக்களை பதிவேற்றி வரும் தினமலர் டாட் காம் தளத்துக்கு 202 நாடுகளை சேர்ந்த 37 லட்சம் வாசகர்கள் வருகை தருகின்றனர். மாதம் தோறும் 8 கோடி பக்கங்களை வாசிக்கின்றனர். உலக அளவில் தமிழ் இணைய செய்தி தளங்களில் நம்பர் 1 இடம் வகிக்கும் தினமலர் டாட் காம் இந்த வளர்ச்சிக்கு காரணமான சர்வதேச தமிழ் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளது.

தினமலர்.காம் என்றுமே நடுநிலையானது. நாங்கள் பா.ஜ.,வுக்கோ காங்.,கிற்கோ அல்லது வேறு எந்தக் கட்சிக்கோ கூஜா துாக்குவதில்லை. எந்த விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து அறிந்த பிறகு தான் செய்தியாக வெளியிடுகிறோம். எதுவாக இருந்தாலும் ஏற்கனவே நடந்தைவிட நன்றாக நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம். வாசர்களின் கருத்துகளை வெளியிடுவதிலும் இதையே கடைப்பிடிக்கிறோம்.தினமலர்.காம், யாரும் லாவணி பாடும் இடம் அல்ல. வாசகர் கருத்துகளை கருத்துகளாக மட்டுமே பார்க்கிறோம். தனி மனித தாக்குதல்களுக்கு இங்கு இடம் இல்லை. தனி மனித தாக்குதல் நடத்த விரும்புவோர், அதை பேஸ்புக்கில் செய்து கொள்ளலாம்.அதே போலத் தான் மதங்கள் விஷயத்திலும். யாருக்குமே தங்கள் மதமே உயர்வானது என்று எழுத உரிமை உண்டு. ஆனால், பிற மதங்கள், நம்பிக்கைகளை குறை கூறவோ, தாக்கி எழுதவோ யாருக்கும் உரிமை இல்லை. அதற்கு தினமலர்.காம் இடம் கொடுக்காது.


ஏற்கப்படும் கருத்துகள்:


வாசர்களின் 90 சதவீத கருத்துகள், அப்படியே தான் பிரசுரிக்கப்படுகின்றன. தேவையற்ற வார்த்கைகளை மட்டுமே தவிர்க்கிறோம். வார்த்தைகளை எடுக்கும்போது, அர்த்தம் மாறாமல் பார்த்துக்கொள்கிறோம். சில கருத்துகளில் டைப்பிங் தவறு இருந்தாலும் திருத்துகிறோம். மற்றபடி வாசகர்களின் கருத்துகளை திருத்துவது எங்கள் நோக்கம் அல்ல. கருத்துகள் முழுமையாக வர வேண்டும் என நினைக்கும் வாசகர்கள், முதலில் தங்கள் உண்மை பெயரில், போட்டோவுடன் எழுதுங்கள். தைரியத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், உங்கள் கருத்து மற்றவர் மனதை புண்படுத்தும், கோபத்தை வரவழைக்கும் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே தான் சில கருத்துகளை தவிர்க்கிறோம். உண்மை பெயர், போட்டோவுடன் எழுதுவதை நாங்கள் வரவேற்கிறோம். அதெல்லாம் முடியாது என்றால், தங்கள் பெயரை ஆதார் அடையாள எண்ணுடன் பதிவு செய்து கொள்ள தயாராக வேண்டி வரும். தங்கள் சுயத்தை மறைத்துக்கொண்டால், எவ்வளவு பெரிய கருத்து சொன்னாலும், தைரியமில்லாதவர்கள் கருத்துகளுக்கு மதிப்பு இருக்காது. இதை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறோம்.
தினமும் 3000க்கும் மேற்பட்ட கருத்துகளை படித்து, யார் மனமும் புண்படாமல் வெளியிடுகிறோம். சமுதாயத்தில் வெறுப்பு பரவ, தினமலர்.காம் காரணமாக இருக்கக் கூடாது. இது எங்களுக்கு விடப்பட்ட சவால் மற்றும் பொறுப்பு. இதை கட்டிக் காப்பாற்றவே கண்ணும் கருத்துமாக கருத்துகளை பார்க்கிறோம்.நமது வாசகர்களுக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. நமது சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும். ஜாதி, மதங்களை விட நாடு மட்டுமே முக்கியம். மக்கள் நலன் அடிப்படையில் தான் வாசகர்களின் கருத்துகள் இருக்க வேண்டும். இதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆக்கப்பூர்வமான வாசர்களின் ஆலோசனைகளை வரவேற்கிறோம்.தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் வாசகர்களுக்கு எங்களது இதயம் கனிந்த கோடானு கோடி நன்றிகள்.-எல்.ஆதிமூலம்.


20ம் ஆண்டில்

தமிழ் கூறும் நல்லுலகிற்கு, தமிழகம் உள்பட, உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் எடுத்துச் செல்லும் சீரிய பணியில் ஈடுபட்டுள்ள உங்கள் அபிமான தினமலர்.காம் இணையதளம் இன்று (ஆக.29) 20ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

1999ம் ஆண்டு துவக்கப்பட்டபோது, தினமலர்.காம் இணையதளத்தளத்திடம், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் எதிர்பார்ப்பு ஏராளம். அவை அத்தனையையும் சிறப்பாகவும், வேகமாகவும், புதுமையாகவும், வித்தியாசமாகவும், நவீனமாகவும் நிறைவேற்றி வருகிறது.

உலகம் முழுவதும் பரவி உள்ள வெகு சில இனங்களில் தமிழர்களுக்கு தனி இடம் உண்டு. தாய் மண்ணின் நிகழ்வுகளை அவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தனித்தடம் பதித்துள்ளது தினமலர்.காம். அதன் சிறப்புகள் தான் என்னென்ன? இதோ...


தினமலர்.காம் பயோ-டேட்டா

பெயர் - தினமலர்.காம்
பிறந்த தேதி - ஆக.29, 1999
வயது - 20
தாய் பெயர் - தமிழன்னை
பிடித்த இடம் - உலக தமிழர் நெஞ்சம்
கல்வித் தகுதி - தமிழ்...தமிழ்...தமிழ்...
ரேங்க் - நம்பர் ஒன்
பணி - உலக நடப்புகளை உடனுக்குடன் உலக தமிழர்களிடம் சேர்ப்பது
உறவுகள் - 202 நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ( ஆதாரம்: கூகுள் அனலிடிக்ஸ்)
வடிவங்கள் - டிஜிட்டல் (டெஸ்க்டாப், மொபைல்), தினமலர் ஆப் (ஆண்டிராய்டு, ஐபோன்ஸ், ஐபேட்), வீடியோ செய்திகள், தினமலர் ஐபேப்பர், தினமும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள்
பிரிவுகள் - அன்றாட நிகழ்வுகள், சினிமா, ஆன்மிகம் (கோயில்கள்), விளையாட்டு, வர்த்தகம், கல்விமலர், விவசாயம், வேலைவாய்ப்பு, மாணவர்களுக்கான பட்டம், புத்தகங்கள், போட்டோ கேலரி, வாராந்திர பகுதிகள், காலண்டர் (தனி ஆப்), வெளிநாட்டு வாழ் தமிழர் செய்திகள்
சிறப்பு அம்சம் - 360 டிகிரி கோணத்தில் கோயில்களின் தரிசனம்
செயல்படும் நேரம் - 365 நாள், 24 மணி நேரம்
வாசகர் கருத்து எண்ணிக்கை - தினமும் சராசரி 3000
இயங்கும் சமூகவலைதளங்கள் - பேஸ்புக், டுவிட்டர், யூடியூப், கூகுள் பிளஸ்.
படிப்போர் எண்ணிக்கை - மாதம் 37 லட்சம் (ஆதாரம்: காம்ஸ்கோர்: வாசகர் எண்ணிக்கையை கணக்கிடும் அமைப்பு)
வாசகர் செலவிடும் நேரம் - ஒவ்வொரு முறை வரும்போதும் 6.4 நிமிடங்கள் (தமிழகத்தில் அடிக்கடி மற்றும் அதிக நேரம் படிக்கப்படும் இணையதளம். ஆதாரம்: காம்ஸ்கோர்)
படிக்கப்படும் பக்கங்கள் - ஒவ்வொரு மாதமும் 8 கோடி பக்கங்கள் (ஆதாரம்: சிமிலர் வெப் - உலகம் முழுவதும் உள்ள பெரிய இணையதளங்கள் பற்றி ஆய்வு செய்யும் இணையதளம்)லட்சியம் - தமிழுக்காகவும் உலக தமிழர் நலனுக்காகவும் தொடர்ந்து உழைப்பது
எதிர்பார்ப்பு - உலக தமிழர்களின் தொடர்ந்த ஒத்துழைப்பு
நன்றி சொல்ல விரும்புவது - வாசகர்கள், விளம்பரதாரர்கள், தொழில்நுட்பம் வழங்குவோர் மற்றும் இணையதள மார்க்கெட்டில் தொடர்ந்து நம்பர் ஒன் ஆக நாங்கள் இருப்பதற்கு ஆதரவு தரும் அனைவருக்கும்.

Advertisement
வாசகர் கருத்து (167)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஆக-201815:30:51 IST Report Abuse
NaushadBabjohn முஸ்லிம்களையும் முஸ்லிம்களின் தலைவர்களையும் தரக்குறைவாக விமர்ச்சித்தால் அப்படியே அச்சு பிசகாமல் பிரசுரம்ஆகும் இது நடுநிலை காங்கிரஸை அதன் தலைவர்களை தாக்கி அசிங்கமாக எழுதினால் ஒருஎழுத்துகூட மாறாமல் பதிவுவரும் இது நடுநிலை மோடியை விமர்ச்சித்தால் ,பீஜேபியை விமரிசித்தால் அர் எஸ்எஸ்ஸைவிமர்சித்தால்,அப்டியே எடிட்ஆகிவிடும் இல்லையென்றால் விமர்சனமே வராது இதுநடுநிலை.இதுதா் தினமலரின் நடுநிலை என்றால் அப்படி ஒரு நடுநிலை தேவையில்லை.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
31-ஆக-201817:14:40 IST Report Abuse
Nallavan Nallavanநீங்கள் உண்மையை உணர மறுக்கிறீர்கள் .......
Rate this:
Share this comment
Cancel
எஸ்.பொன்னப்பன் - Tambaram,இந்தியா
30-ஆக-201815:02:52 IST Report Abuse
எஸ்.பொன்னப்பன்  மனமார்ந்த ...வாழ்த்துக்கள் பாராட்டுக்கள், தினமலர்
Rate this:
Share this comment
Cancel
AXN PRABHU - Chennai ,இந்தியா
30-ஆக-201814:43:31 IST Report Abuse
AXN PRABHU தினமலருக்கு இருபதாம் ஆண்டின் நிறைவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். தினமலர் தனது வாசகர்களுக்கு தங்களின் கருத்துக்களை பதிவிடும் வசதி செய்தி இருப்பது பாராட்ட தகுந்த ஒன்று. பெரும்பாலான கருத்துகள் செய்தியோடு சம்பந்தப்பட்டு இருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஒரு செய்தி பற்றி இரண்டு வேறுபட்ட நிலைகளை கொண்டவர்கள் கருத்து பகிர்வதும் பதில் கருத்து இடுவதும் படிப்பவர்க்கு சுவாரஸ்யம். அதையே சமயம் , தினமலர் ஒரு கட்சி சார்பு உள்ளவராகள் கருத்தில் எவ்வளவு கீழ் தரமான மரியாதை குறைவான கண்ணியமற்ற வார்த்தைகளை ஒரு தனிமனிதரைப்பற்றியோ அல்லது ஒரு இனத்தை பற்றியோ அல்லது ஒரு மதத்தை பற்றியோ கூறினாலும் அதை அப்படியே பதிவிடுவது தினமலர் வாசகர் கருத்தில் ஒரு பெரும் குறையாக உள்ளது. இதை தினமலர் தவிர்க்கலாம். இந்த குறையை சரி செய்தால் ஆரோக்கியமான கருத்து விவாதங்களும் கருத்து பரிமாற்றங்களும் நிகழ வாய்ப்புகள் அதிகம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X