அயோத்தி நிலம் தொடர்பாக ஈராக் தலைவர் திடீர் உத்தரவு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
அயோத்தி நிலம் தொடர்பாக
ஈராக் தலைவர் திடீர் உத்தரவு

லக்னோ : 'உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை, ராமர் கோவில் கட்டுவதற்கு ஒப்படைக்கக் கூடாது' என, ஈராக்கைச் சேர்ந்த, ஷியா முஸ்லிம் பிரிவு தலைவர், சிஸ்தானி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அயோத்தி, நிலம்,ஈராக்,தலைவர், திடீர், உத்தரவு


உத்தர பிரதேசத்தில் உள்ளது அயோத்தி. இங்குள்ள சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஹிந்து கடவுளான ராமர் பிறந்த இடம் என, ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது.அதே நேரத்தில், அந்த இடத்தில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதால், அந்த இடம் தங்களுக்கே சொந்தம் என, முஸ்லிம்கள் தரப்பில் கூறபடுகிறது.

இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில், 26 ஆண்டுகளில் முதல் முறையாக, வெளிநாட்டைச் சேர்ந்த, முஸ்லிம் அமைப்பின் தலைவர் கருத்துதெரிவித்துள்ளார்.


ஷியா பிரிவு முஸ்லிம்களின் தலைவராகக் கருதப்படும், அயதுல்லா அலி அல் - சிஸ்தானி, 'பத்வா' எனப்படும் உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், 'சர்ச்சைக்குரிய இடத்தை, ராமர் கோவில் கட்டுவதற்காக ஒப்படைக்கக் கூடாது' என, கூறியுள்ளார்.

இந்த உத்தரவு குறித்து, உத்தர பிரதேச ஷியா வக்பு வாரியத் தலைவர், வாசிம் ரிஸ்வி கூறியதாவது: பாபர் மசூதி வழக்கு மனுதாரர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என, எங்களுக்கு தொடர்ந்து நெருக்குதல் வருகிறது. அதன் ஒரு பகுதி தான், சிஸ்தானியின் இந்த உத்தரவு.

இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டே, உ.பி., ஷியா வக்பு வாரியம் செயல்படும். இதுபோன்ற உத்தரவுகளுக்கு அடிபணியமாட்டோம்.

Advertisement

எங்கள் சமூக தலைவரின்இந்த ஆலோசனையை ஏற்கப் போவதில்லை.இந்தப் பிரச்னையில், அவருக்கு தவறான தகவல்களை சிலர் கொடுத்து உள்ளனர். ராமர் கோவில் என்பது, ஹிந்துக்களின் நம்பிக்கை யாக உள்ளது. அதை மதிக்கும் அதே நேரத்தில், நாட்டின் வளர்ச்சியை நாங்கள் பார்க்கிறோம்.

ஹிந்துக்களின் உரிமையில், முஸ்லிம்கள் தலையிடக் கூடாது. உலகெங்கும் உள்ளவர் கள் எதிர்த்தாலும், உ.பி., ஷியா வக்பு வாரியம் தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murali - Chennai,இந்தியா
01-செப்-201815:42:28 IST Report Abuse

muraliரிஷ்வான் நீ இங்குள்ள இந்து முஸ்லீம் இருவர்க்கும் சண்டை மூட்டி குளிர் காய நினைக்கும் பிறவி.

Rate this:
SATHIK BASHA - SINGAPORE,இந்தியா
01-செப்-201809:23:48 IST Report Abuse

SATHIK BASHAஉங்க நாட்டில் உள்ள வேலையை பாரு. இங்க நாங்க பாத்துக்குறோம்.

Rate this:
Anandan - chennai,இந்தியா
30-ஆக-201803:20:42 IST Report Abuse

Anandan, உங்க நாட்டில் உள்ள வேலையை பாரு. இங்க நாங்க பாத்துக்குறோம்.

Rate this:
மேலும் 78 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X