பதிவு செய்த நாள் :
கைது!
மோடியை கொல்ல சதி செய்த வரவர ராவ்...
நாடு முழுவதும் நக்சல் வீடுகளில் சோதனை

ஐதராபாத், : பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய கும்பலு டன் தொடர்புடைய, நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த வரவர ராவ்,78, ஐதராபாதில் நேற்று, போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, நாடு முழுவதும், நக்சலைட் அமைப்புகளுடன் தொடர்புடையோர் வீடு களில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

 பிரதமர், மோடி, கொல்ல ,சதி ,வரவர ராவ்,கைது, நாடு, நக்சல், அதிரடிசோதனை, Maoists


மஹாராஷ்டிரா மாநிலம், புனேயைச் சேர்ந்த போலீசார், தடை செய்யப்பட்ட நக்சலைட் அமைப்புடன் தொடர்புடைய ஐந்து பேரை, மும்பை, நாக்பூர், டில்லி நகரங்களில், ஜூனில் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட, ரோனா ஜேகப் வில்சன் வீட்டில், அதிரடி சோதனை நடத்திய போலீசார், முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.

தோட்டாக்கள்


அந்த கடிதத்தில், பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதும், எட்டு கோடி ரூபாய் மதிப்பில், எம் - 4 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் வாங்க முடிவு செய்திருப்பதும் தெரிய வந்தது.'மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்டதை போல், பிரதமர் மோடியை படுகொலை செய்ய வேண்டும்' என, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது,

நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி யது. நக்சலைட் அமைப்பு, இதற்குமுன் நடத்திய பல்வேறு தாக்குதல்கள், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, வரவர ராவ் மற்றும் சுரேந்திர காட்லிங் ஆகியோர் வழிகாட்டுதல்படி நடந்ததாக தெரியவந்தது.

நிதி


நக்சல் அமைப்புக்கு தேவையான நிதியை, வரவர ராவ் ஏற்பாடு செய்துள்ளதாகவும், அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.இந்த விவகாரம் தொடர்பாக, தீவிர விசாரணை நடத்தி வந்த புனே போலீசார், தெலுங்கானா தலைநகர் ஐதராபாதுக்கு சென்று, கொலை சதியில் சம்பந்தப்பட்டோரை பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், ஐதராபாத் நகரில் நேற்று, வரவர ராவை, புனே போலீசார் கைது செய்தனர். மேலும், வரவர ராவுடன் தொடர்புடைய, 2 பத்திரிகையாளர் கள் உட்பட, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர், கல்லுாரியில் ஆங்கில பேராசிரியராக உள்ளார்.

கைது செய்யப் பட்ட இரு பத்திரிகையாளர்களில் ஒருவரான, தெகுல கிரந்தி யிடம் கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில், நக்சலைட் அமைப்புடன் தொடர்புள்ள பல்வேறு ஆவணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட வரவர ராவ், செகந்திராபாதில் உள்ள மருத்துவமனைக்கு, பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.அவர், புனே அழைத்துச் செல்லப்பட்டு, உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என, கூறப்படுகிறது.

Advertisement

'சதியில் தொடர்பில்லை'


ஐதராபாதை சேர்ந்த பெண்கள் முன்னேற்ற அமைப்பு தலைவர், சந்தியா கூறியதாவது:பொய் குற்றசாட்டுகளை கூறி, வரவர ராவை கைது செய்துள்ள, மஹாராஷ்டிரா மாநில போலீசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. ஐதராபாதில், தன் வீட்டில் வசித்து வரும் சாதாரண நபர், பிரதமரை கொல்ல, எவ்வாறு சதி திட்டம் தீட்ட முடியும். வரவர ராவுக்கு எதிராக வழக்கை ஜோடித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
வரவர ராவ் நிருபர்களிடம் கூறுகையில், ''எனக்கும், மோடிக்கு எதிரான சதித் திட்டத்திற் கும் சம்பந்தம் இல்லை,'' என்றார்.இருப்பினும், போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ள, வில்சன், காட்லிங் ஆகியோரை தனக்கு தெரியும் என, அவர் கூறியுள்ளார்.

மும்பை, ராஞ்சியில் அதிரடி சோதனை


பிரதமர் மோடிக்கு எதிரான சதி திட்டத்தில் தொடர்பிருப்பதாக, ஐதராபாதை சேர்ந்த, வரவர ராவ் கைது செய்யப்பட்டுள்ள நிலை யில், ராஞ்சி, டில்லி, பரீதாபாத், மும்பை நகரங்களில்,8 இடங்களில், புனே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, நக்சலைட் அமைப்புடன் தொடர்பு டைய பலரை கைது செய்தனர்.

ஜூனில், நக்சலைட் அமைப்புடன் தொடர்புள்ள வர்களாக கைது செய்யப்பட்ட 5 பேர் சார்பில், நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த, வழக்கறிஞர் வெர்னான் கோன்ஸால் வஸ், மும்பை நகரில், போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

புனேயைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில், ஸ்டான் ஸ்வாமி என்பவர் வீட்டில் சோதனை நடத்தி, அவரை கைது செய்தது.கைது செய்ய பட்டோர் வீடுகளில் இருந்து, முக்கிய ஆவணங்கள், லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bala somasekaran - Santiago,சிலி
31-ஆக-201801:20:37 IST Report Abuse

bala somasekaranநாட்டிற்கு எதிராக ஆயுதம் ஏந்துபவரும் அதற்க்கு ஆதரவு தெரிவிப்பதும் தீவிரவாதம் தான்...நாட்டிற்கு எதிரான தீவிரவாதமும் சொத்து தகராறுல பங்காளி குடும்பத்தை வேரறுக்குற குணமும் ஒன்றுதான்... 2000 மேலான வீரர்கள் இந்த தீவிரவாதிகளால் கொல்ல பட்டுள்ளனர்... கண்மூடித்தனமாக தீவிரவாதிகளை ஆதரிக்காதீர்கள்... நக்க்ஸலைட்கள் சீனாவின் கை கூலிகள்...

Rate this:
Sandru - Chennai,இந்தியா
30-ஆக-201813:20:03 IST Report Abuse

Sandruகடந்த நான்கு ஆண்டுகளாக இவர்கள் குஜராத் கொள்ளை கும்பல்களுக்கு துணை போனதை தவிர வேறு எந்த ஆணியையும் பிடுங்கவில்லை . தேர்தல் நெருங்குவதால் மக்களை மீண்டும் முட்டாளாக்கும் முயற்சியாக இன்னும் பல புதிய திரை கதைகளை வெளியிடுவார்கள். கிளைமாக்ஸ் காட்சியை தேர்தல் முடிவுகளின் போது மக்கள் காணலாம்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
29-ஆக-201819:39:40 IST Report Abuse

Pugazh Vபிற கட்சி யினரின் கேள்விகள் கருத்துக்களை படிக்க கூட மாட்டார்கள். பதில் / விளக்கம் எதுவும் இருக்காது. அதனால் இந்த பீஜேபீ வாசகங உடனே பிற கட்சியினரை உடனே அவர்களின் மதத்தை மாற்றி விடுவார்கள் இனத்தை கேவலப்படுத்துவார்கள். மொழியை அவமானப்படுத்துவார்கள். பச்சை, பாவாடை அரபி, வாடிகன், திரவியம் என்றெல்லாம் எழுதினால் அதுக்கு பேர் அரசியல் விவாதமாம், கருத்துகளாம்.

Rate this:
மேலும் 41 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X