தடாலடி: 'பா.ஜ., - அ.தி.மு.க., அரசுகளை ஒழிப்போம்': ஸ்டாலின் சூளுரை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தடாலடி,பா.ஜ.,அ.தி.மு.க.,அரசு,ஒழிப்போம், ஸ்டாலின், DMKThalaivarStalin

தி.மு.க., தலைவராக போட்டியின்றி தேர்வான ஸ்டாலின், கட்சியின் இரண்டாவது தலைவராக, நேற்று பதவியேற்றார். அப்போது,பொதுக்குழுவில் பேசிய அவர், 'பா.ஜ., - அ.தி.மு.க., அரசுகளை ஒழிப்போம்' என, சூளுரைத்தார். எந்தக் கட்சியுடன், தி.மு.க., கூட்டணி அமைக்கும் என, சில நாட்களாக நீடித்த குழப்பத்தை, அவரது பேச்சு தகர்த்தெறிந்தது.

தி.மு.க., தலைவராக, கருணாநிதி, 50 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்தார். ஆகஸ்ட், 7ல், அவர் இறந்ததை அடுத்து, கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப் பட்டது.தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர்பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து, யாரும் போட்டியிடவில்லை.

இந்நிலையில், தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நடந்தது. இதில், கட்சியின் தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக, பொதுச்செயலர் அன்பழகன் அறிவித்தார். அப்போது, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

முயற்சிப்பேன்


கட்சியின் இரண்டாவதுதலைவராக பொறுப்பேற்ற, ஸ்டாலின் பேசியதாவது: நான் கருணாநிதி இல்லை; அவர் போல பேசத் தெரியாது; பேசவும் முடியாது. ஆனால், எதையும் முயன்று பார்க்கக் கூடிய துணிவு உடையவன்.'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என, நான் வாழ்ந்ததாக, கருணாநிதி என்னை பாராட்டி எழுதினார். உழைப்பு, உழைப்பு, உழைப்பு என, என் பெயருக்கு விளக்கமும் சொல்லி, உச்சி முகர்ந்தார்.

என்னை விட, தனி மனிதனை விட, தி.மு.க.,வும், உதயசூரியன் சின்னமும் பெரியது. சுயமரியாதை என்ற, முதுகெலும்பில்லாத மாநில அரசையும்,சமத்துவத்தையும், சமூக நீதியையும், பகுத்தறிவுசிந்தனைகளையும் சிதைக்கும், மத்திய அரசையும் பார்க்கும் போது, வேதனைதருகிறது.இன்றைக்கு நிலவும் அரசியல், சமூக சூழ்நிலைகள், சுயமரியாதை கொள்கை களுக்கு ஏற்பட்டுள்ளஆபத்தாகவும், பெரும்சவாலாகவும் உள்ளன.கல்வி, கலை, இலக்கியம், மதம் போன்ற வற்றின் அடிப்படைகளை எல்லாம், அதிகார பலத்தால், மத வெறியால் அழிக்க, மத்திய அரசு முயன்று வருகிறது.ஒரு அழகான எதிர்கால கனவு கண்டேன். நம் கட்சி, நம் தமிழினம், நம் நாடு, நம் உலகம், இவை அனைத்தும் புத்தம் புதியதாய், பேரழகாய் மகிழ்ச்சி யில் வாழும் கனவு அது. கால மாற்றங்களுக்கு ஏற்ப, தம்மை மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து துவங்கட்டும்.

இன்றுநீங்கள் பார்க்கும், கேட்கும் ஸ்டாலின் ஆகிய நான்,புதியதாக பிறக்கிறேன்.ஆணையும், பெண்ணை யும் சமமாக மதித்தல், திருநங்கையர், மாற்றுத் திறனாளிகளுக்கு சம உரிமை பெற்று தருதல், தனி மனித மற்றும் ஊடக கருத்து சுதந்திரத்தை மீட்டெடுத்தல், பிற மொழிகளை அழித்து, இந்தியா முழுவதற்கும், மதச்சாயம் பூச நினைக்கும் கட்சிகளை எதிர்த்தல், இவை எல்லாம், என் நீண்ட கனவின் சில துகள்கள்.

இந்தக் கனவை,முழுமையாக மெய்ப்பிக்க நான் துடிக்கிறேன். என்னால் மட்டும் முடியாது. தொண்டர்கள் இல்லாமல், இந்த பெருங்கனவைமெய்ப்பிக்க முடியாது. இந்தியா முழுவதும், காவி வண்ணம் அடிக்க நினைக்கும், மோடி

அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும். முதுகெலும்பில்லாத, இந்த மாநில அரசை துாக்கி எறிய வேண்டும்.

நாம் அனைவரும் சேர்ந்து தான் செயல்படுத்த வேண்டும். இந்த அழைப்பு, தென்றலை தீண்ட அல்ல; தீயைத் தாண்டுவதற்கானது. ஓடுவோம் ஓடுவோம், வாழ்க்கை நெறிமுறைகளின் ஓரத்திற்கே ஓடுவோம். நம் சொந்த நலன்களை மறந்து, தமிழகத்தின், தமிழ் மக்களின் நன்மைகளுக்காக உழைப்போம்; வெற்றி அடையும் வரை உழைப்போம்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

தகர்த்தெறிந்தார்


மறைந்த கருணாநிதிக்கு, சென்னையில் நாளை புகழஞ்சலி கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா உட்பட, பல தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பர் என, தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அழைப்பிதழில், அமித் ஷாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதனால், தி.மு.க., - பா.ஜ., இடையே கூட்டணி மலருமா என்ற கேள்வியும், இரு கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் எழுந்தது.

இதற்கிடையில், 'கூட்டத்திற்கு அமித் ஷா வரவில்லை; அவருக்கு பதிலாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்பார்' என, நேற்று முன்தினம்,

தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசைசவுந்தரராஜன் அறிவித்தார்.இந்நிலையில், ஸ்டாலின் தலைவரான பின் பேசிய முதல் பேச்சில், 'மத்திய அரசுக்கு பாடம் புகட்டுவோம்' என,சூளுரைத்ததால், தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்பது தெளிவாகியுள்ளது.

மேலும், யாருடன், தி.மு.க., கூட்டணி அமைக்கும் என, நீடித்த குழப்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, யூகங்களை தகர்த்தெறிந்து உள்ளார்.

'செயல் தலைவர் இனி இல்லை'


சென்னை, அறிவாலயத்தில் நடைபெற்ற, தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* அ.தி.மு.க., ஆட்சியை அப்புறப்படுத்துவோம்; ஸ்டாலினை முதல்வராக, அரியணையில் அமர்த்துவோம். தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் மீண்டும் செலுத்துவோம். அதுவரை, அயராது உழைக்க சூளுரை மேற்கொள்ள வேண்டும்

* கட்சியின் மாவட்ட எல்லைகளில் மாற்றம்; கட்சி விதிகளில் திருத்தம் செய்தல் மற்றும் மாவட்ட தலைநகரில், கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகங்கள் செயல்படுவது உறுதி
செய்யப்படும்

* கருணாநிதிக்கு, மத்திய அரசு,'பாரத ரத்னா'விருது வழங்க வேண்டும்.இவை உட்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஸ்டாலின், இதுவரை வகித்து வந்த செயல் தலைவர் பதவி என்பது இனி கிடையாது. அந்த பதவிக்கான கட்சி விதியின், நான்காவது பிரிவு நீக்கப்பட்டதாகவும், பொதுச்செயலர் அன்பழகன்அறிவித்தார். மேலும், கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்டோர் மறைவுக்கு, கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி யில் மரணம் அடைந்த, 248 பேர், கேரளாவில் வெள்ளத்தில் பலியான, 400 பேர் மற்றும் துாத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் களுக்கும், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (151)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஆக-201820:41:15 IST Report Abuse

ஸ்ரீயாரு, யாரைப் பாத்து சவால் விடறதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாமா ? புதிய தலைவரே ! ஏதோ, அண்ணா உறுவாக்குன மடத்த உங்க அப்பா ஆட்டையப் போட்டு 50 வருஷம் தலைவரா இருந்தாரு. அவர் கோமால இருக்கும் போது கூட அந்தப் பதவிய உங்களுக்குத் தரல. ஆள் போனதுக்கு அப்பறம் நோகாம வந்து பதவில உட்காந்திருக்கற நீங்க எங்க ? 1980-ல ஆரம்பிச்ச பா.ஜ.க. வுல ஆரம்பிச்சதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் 38 வருஷத்துல மொத்தம் 10 தலைவர்கள் பாத்தாச்சு. 70 வருஷமா இருக்கற கட்சில இப்பத்தான் இரண்டாவது தலைவரா வந்து இருக்கீங்க. எது ஜனநாயகக் கட்சி ? சரி இருக்கட்டும். தி.மு.க ஆரம்பிச்சு 30 வருஷம் கழிச்சு உருவான கட்சி பா.ஜ.க. இன்னைக்கு அந்தக் கட்சியோட அடிமட்ட தொண்டன் பிரதமரா இருக்காரு அடி மட்டத் தொண்டன் ஜனாதிபதியா இருக்காரு துனை ஜனாதிபதியா இருக்காரு. அந்தக் கட்சி இந்தியாவில் 15 மாநிலத்துல தனியா ஆட்சில இருக்கு. 4 மாநிலத்துல கூட்டணி ஆட்சி நடத்துது. அது மட்டுமல்ல உலகத்துலயே பெரிய கட்சியா கின்னஸ்ல பதிவாகியிருக்கு. கிட்டத்தட்ட 345 MP க்கள் உள்ள கட்சி - (272 + 73). 1500 MLA க்கள் உள்ள கட்சி. அப்படிப்பட்ட கட்சிய ஒரே ஒரு லோக்சபா உறுப்பினர் கூட இல்லாத உங்கள் கட்சி அழித்து விடுமா ? சரி கட்சிய விட்டுடுவோம். 14 வருஷம் முதல்வர், நாலு வருஷம் பிரதமரா இருந்த மோடியோட சொத்து என்ன தெரியுமா ? இந்த நாடு மட்டும்தான். அவரோட குடும்பம் எப்படி இருக்குன்னு நாட்டுக்கே தெரியும். ஆனா, மைனாரிட்டியா தமிழ்நாட்ட ஆண்ட உங்க குடும்பம் இன்னைக்கு எப்படி இருக்கு ? முரசொலி மாறன் - தயாநிதி - அழகிரி - கனிமொழி - ன்னு எல்லாருக்கும் பதவிகள பங்கு போட்டுக் கொடுத்த குடும்பக் கட்சி உங்களோடது. அது மட்டுமா ? உதயநிதி ஸ்டாலின் தயாநிதி அழகிரி கயல்விழி ன்னு அடுத்தடுத்து நண்டு சிண்டெல்லாம் பதவிக்கு வரிசையா நிக்குது. அஞ்சுவாட்டி முதலமைச்சர் ஆயிட்டு 500 தலைமுறை உட்காந்து சாப்படற அளவுக்கு சொத்து சேத்தாச்சு. டிவி சேனல் மட்டும் 45 இருக்கு. போதாததுக்கு Sun Direct, SCV-ன்னு ஒவ்வொரு குடிமகனும் மாசா மாசம் உங்க குடும்பத்துக்கு கப்பம் கட்டியே ஆகனும்ங்கற அளவுக்கு கொண்டு வந்தாச்சு. அசையா சொத்துக்கள் கணக்கேயில்ல. அசையும் சொத்துக்கள்னா, லம்போகினில இருந்து ஹம்மர் வரைக்கும் உங்க கிட்ட இல்லாத காரே இல்ல. இப்படி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம மக்கள் பணத்த திருடி சொகுசு வாழ்க்கை வாழற நீங்க, மோடிய எதுக்கப் போறீங்களா ? அவர் பேரச் சொல்ற தகுதி கூட உங்களுக்குக் கிடையாது. மைக் கெடைச்சா எதை வேணும்னாலும் பேசிசிடறதா ? இன்னைக்கி ஒரு தெருமுனைக் கூட்டம் போட்டா கூட காசு குடுத்து கூட்டத்த கூட்டற கேவலமான நெலமைல தி.மு.க இருக்கு. ஆனா, மோடிக்காக உயிரைக் கூட குடுக்க கோடிக்கணக்கான இளைஞர்கள் இங்க இருக்காங்க. அது தான் அவரோட சொத்து. 2019 மட்டுமல்ல 2024-லயும் கூட அவர் தான் பிரதமர். இந்தியா மட்டும் அல்ல, கூடிய விரைவில் தமிழ்நாட்டுக்கும் காவி பெயிண்ட் அடிச்சே தீருவோம். ஏன்னா, நாங்க நேர்மையா வளர்ந்துகிட்டு இருக்கோம். நீங்க வேகமா அழிஞ்சிகிட்டு இருக்கீங்க.

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
30-ஆக-201801:36:59 IST Report Abuse

Panneerselvam Chinnasamyஅவர்கள் கட்சியில் ஒரே தலைவரை திரும்ப திரும்ப தேர்ந்தெடுத்தார்கள்...அவர்மீது அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்ததால்... அவர் ஒன்றும் கட்சியில் தேர்தலே நடத்தாமல் பதவியில் இல்லை... இரண்டாவது உங்களை யாராவது sundirect டிவி கனெக்சன்தான் வாங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்களா? ஏன் வடநாட்டு dishtv , airtel வாங்கிக்கொள்ளுங்கள்..அவன்மட்டும் சும்மா கனக்சன் கொடுக்கிறானா? கையிலே காசு வாயிலே வடைதான் எங்கே போனாலும்... என்னமோ உங்க வீட்டு காசை யாரோ அடித்து பிடுங்கியதுபோல் ஏன் இந்த நீலி வேஷம்... ......

Rate this:
Kunjumani - Chennai.,இந்தியா
29-ஆக-201820:38:36 IST Report Abuse

Kunjumaniதல நீங்கள் பாஜகவை, மோடி ஆட்சியை ஒழிப்பேன் என்று சொல்வதும் நான் திமுகவை அழிப்பேன் என்று சொல்வதும் ஒன்றே. என்னால் ஒரு ஆணியும் புடுங்கமுடியாது வேண்டுமானால் திமுகவை அழிப்பேன் என்று கூவலாம்.

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
30-ஆக-201801:40:15 IST Report Abuse

Panneerselvam Chinnasamyமத்திய அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்றுதான் சொன்னாரே தவிர ஒழிப்போம் அழிப்போம் என்றெல்லாம் சொல்லவில்லை... ரொம்ப பயந்துவிட்டீர்கள் போலிருக்கிறது......

Rate this:
29-ஆக-201820:32:49 IST Report Abuse

ARUN.POINT.BLANKsudalai unkitta ethanai MP irukaanga??

Rate this:
மேலும் 146 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X