அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் அதிர்ஷ்டமிக்கவர் துரைமுருகன் பேச்சு

Added : ஆக 28, 2018 | கருத்துகள் (14)
Advertisement
ஸ்டாலின் அதிர்ஷ்டமிக்கவர் துரைமுருகன் பேச்சு

சென்னை, சென்னையில் நடந்த பொதுக்குழுவில் தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் பேசியதாவது:கருணாநிதி, சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்து, தலைவர் பதவியை ஏற்கவில்லை. சிலுவையை சுமந்து வந்து, தலைவர் பதவி ஏற்றார். ஏராளமான பிரச்னைகள், கட்சிக்குள் இருந்தன. அனைத்தையும் அவர் கடந்தார். ஆனால், சிறு சலசலப்பும் இல்லாமல், மனக்குறை இல்லாமல், ஒட்டுமொத்தமாக உங்களை தலைவராக்கி உள்ளனர். அமைதியாக நீங்கள் பதவி ஏற்றுள்ளீர்கள். நீங்கள், உங்கள் தந்தையை விட அதிர்ஷ்டமிக்கவர்.தி.மு.க., பெரிய ஆல மரம். அடையாறு ஆல மரம் என, ஒன்று உண்டு. சுனாமி நேரத்தில், அதன் அடி மரம் விழுந்து விட்டது. அடி மரம் விழுந்து விட்டால், அனைத்தும் விழுந்திருக்க வேண்டும்; விழவில்லை. அதன் விழுதுகள் வளர்ந்து, அடி மரம் போலாகி இன்றும் நிற்கிறது. அதன் விழுதுகள் மண்ணில் புதைந்து, உறுதியானதே காரணம்.அதுபோல, தி.மு.க.,வின் அடி மரமான தலைவர் இன்று விழுந்து போனாலும், அதன் விழுதான நீங்கள், அடி மரமாக தாங்கியுள்ளீர்கள். தி.மு.க.,வும் அடையாறு ஆல மரம் போல் வியாபித்து, உறுதியாக நிற்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat Krish - Singapore,சிங்கப்பூர்
29-ஆக-201820:34:18 IST Report Abuse
Venkat Krish ஸ்டாலின் அதிர்ஷ்டம் தான் பதவி ஏற்க போறது தெரிஞ்சவுடனேயே தயாளு அம்மாளை அப்போல்லோ வில் படுக்கவைத்துவிட்டதே?. அதிர்ஷ்ட பிறவி தான். பட் ஏன் அப்போல்லோ?. காவிரி ஏன் இல்லை?.
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
29-ஆக-201817:10:59 IST Report Abuse
அம்பி ஐயர் அப்போ ''அழகிரி அதிர்ஷ்டம் கெட்டவர்...'' என்ற தொனி வருகிறதே.... நமக்கேன் வம்பு....
Rate this:
Share this comment
Cancel
swami - chennai,இந்தியா
29-ஆக-201816:59:37 IST Report Abuse
swami துரைமுருகனுக்கு ரொம்ப குசும்பு. சந்தடி சாக்குல இந்த பதவி ஓ சி ல கெடச்ச அல்வான்னு சொல்லிட்டாரு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X