பங்காளிக்காக வரிந்து கட்டிய எம்.எல்.ஏ., : 'பொதுமக்கள் எக்கேடு கெட்டா எனக்கென்ன?'

Added : ஆக 29, 2018
Advertisement
தோழி ைஷலு வீட்டில், ஓணம் பண்டிகை கொண்டாட, சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம், காரணமாக, பண்டிகை களையிழந்தாலும், பாரம்பரிய முறைப்படி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என உற்சாகம் பெருக்கெடுத்த நிலையில், சித்ராவும், மித்ராவும், சற்றே ஓய்வெடுத்தனர்.''சொன்ன பேச்சு கேட்காத அதிகாரிகளை பழிவாங்கிட்டார்னு பேசிக்கறாங்க,''
MLA,எம்.எல்.ஏ. சித்ரா, மித்ரா

தோழி ைஷலு வீட்டில், ஓணம் பண்டிகை கொண்டாட, சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம், காரணமாக, பண்டிகை களையிழந்தாலும், பாரம்பரிய முறைப்படி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என உற்சாகம் பெருக்கெடுத்த நிலையில், சித்ராவும், மித்ராவும், சற்றே ஓய்வெடுத்தனர்.

''சொன்ன பேச்சு கேட்காத அதிகாரிகளை பழிவாங்கிட்டார்னு பேசிக்கறாங்க,'' ஆரம்பித்தாள் மித்ரா.

''என்ன மித்து சொல்ற, ஒண்ணும் புரியலையே,'' என்றாள் சித்ரா.

''பலருக்கும் புரியாதுக்கா. 'சவுத்' எம்.எல்.ஏ., ஒரு ஆட்டம் ஆடினாரு தெரியுமா,''

''என்னடி, ஏகத்துக்கும் 'பில்டப்' பண்றே. சீக்கிரம் விஷயத்தை சொல்லுடி''

''நொய்யல் கரையில், மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஏற்பாடு செஞ்ச, 'பிளாஸ்டிக்' விழிப்புணர்வு நிகழ்ச்சி பேனரில், அவரோட பேர் இல்லையாம். அதுக்காக, அதிகாரிகிட்ட 'தையத்தக்கா'ன்னு குதிச்சாராம்''

''பெரிசா... பேசியிருப்பாரே''

'ஆமாக்கா, 'யார் அப்பன் வீட்டு காசுல விழா நடத்தறீங்க. கவர்மென்ட் காசுதானே..அப்படின்னா, என்ற பேர ஏன் போடல? 'கழட்டுங்க பேனரை' என்று 'காச்மூச்'சுனு சத்தம் போட்டுட்டாரு. கலெக்டர், அமைச்சர் வந்துதான், சமாதானம் செஞ்சாங்களாம்,''

''திருப்பூரில், ஆயிரத்தெட்டு பிரச்னை இருக்கு. அதுக்காக, அதிகாரிங்களை திட்டினா பரவாயில்லை. இந்த சின்ன மேட்டரில், 'சவுத்' இப்படி நடந்திருக்கக்கூடாது, நீ என்ன சொல்றே மித்து?''

''ஆமாங்க்கா, 'சவுத்'தின் கோபத்துக்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா?''

''சொன்னாதாண்டி தெரியும்..!''

''ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, 'செப்டிக் டேங்க்' லாரியில, சாயக்கழிவுநீர் கொண்டு போயி, விவசாய நிலத்துல விட்டதை, மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிங்க பிடிச்சாங்க. அந்த கம்பெனிய மூடியாச்சு. லாரியோட 'பர் மிட்'டும் ரத்தாகிடுச்சு''

''சம்பந்தப்பட்ட சாய ஆலை உரிமையாளர், 'சவுத்'துக்கு பங்காளியாம். அதனால, விஷயத்த பெரிசு பண்ண வேணாம்னு, விட்டுட்டாங்க. இப்போ, இந்த நுால் கிடைச்ச உடனேயே, அதிகாரியை பட்டமா பறக்க விட்டுட்டாரு. இது அந்த 'சவுத்'துக்கும், 'நாயகமான' அதிகாரிக்கு மட்டுமே தெரியுமாம்,'' என்றாள் மித்ரா.

''ஓ.. இதுதான் மேட்டரா? நெருப்பில்லாம, புகையாதுன்னு சொல்வாங்களே. அது... இதுதானோ!. பொது இடத்தில, அதிகாரியை மனிதாபிமானம் இல்லாம, இப்படியா திட்டுவாங்கடி,''

''அக்கா... நீங்க இப்படி சொன்னதும், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிங்க புலம்பல் நினைவுக்கு
வந்துருச்சு,''

''ஓ.. அவரை சொல்றியா? நீ சொன்ன துறையோட தலைமை அதிகாரி, ஒவ்வொரு திட்டத்திலும், அதிகாரிகளை வாட்டி வதக்கி, சும்மா, 'கறந்து' எடுத்துடறாராம். அவரோட தொந்தரவு தாங்க முடியலைனு, பி.டி.ஓ.,க்கள் புலம்பிட்டு இருக்காங்க. அதுமட்டுமில்ல, உதவி இயக்குனர் நிலையில இருக்கறவங்களையும் விட்டு வைக்கலயாம்''

''கலெக்டர் பி.ஏ.,வா இருந்தவர துாக்கி, நுாறு நாள் திட்டத்துல போட்டிருக்காரு. அங்க இருந்தவரை, கலெக்டர் பி.ஏ.,வா மாத்தியிருக்காரு. அவருக்கு தேவை, ஒவ்வொரு பிரிவுல இருந்து
'நல்லா' வேலை நடக்கணும். இல்லைனா, இப்படித்தான் 'புட்பால்' பிளேயரா மாறி, விளையாடறாராம்,''

''கரெக்டா... சொல்றீங்க. அதே 'தலைமை' அதிகாரிக்கு, அதே துறையில இருக்கற, பொறியியல் பிரிவு அதிகாரி, தன்னோட காரையே பரிசா கொடுத்திருக்கார்ன்னு, டி.ஆர்.டி.ஏ., முழுக்க ஒரே பேச்சா இருக்குதாம்,''

''ஏப்பா... விலை உயர்ந்த காரை, யாராச்சும் 'சும்மா' கொடுப்பாங்களா? எல்லாம், ஒரு பிஸினஸ். அதுக்கு மேல வர்றதால, துாக்கி கொடுத்துட்டாரு. இவ்ளோ தெரிஞ்சும், பெரிய அதிகாரி எதையும் கண்டுக்காம இருக்காரே,''

அப்போது, ஒருவர் ஜூஸ் கொண்டு வரவே, இருவரும் குடித்து கொண்டே பேச்சை தொடர்ந்தனர்.

''தேர்தலில் ஓட்டுப்போட பணம் கொடுத்து ஆட்கள் கூட்டிட்டு வர்றது தெரியும். ஆனா... இங்க,'' என்ற மித்ரா, காலியான டம்ளரை கீழே வைத்தாள்.

''என்னடி, ஆனா.. ஆவன்னா... போடறே. முழுசா சொல்லு,''

''கூட்டுறவு வீட்டு வசதி சங்க எலக்ஷனில், மதுக்கடை 'பார்' ஊழியர்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டில் வசிக்கும் பிளாட்பாரவாசிகள் என பலரையும், தலைக்கு 500 ரூபாய், மூணுவேளை சாப்பாடு, 'குவார்ட்டர்'ன்னு கொடுத்து கூட்டிட்டு வந்து, ஜமாய்ச்சுட்டாங்க தெரியுமா?''

''ஓட்டுக்கு கொடுத்த காலம் போய், இப்ப மனுத்தாக்கலுக்கு பணம் கொடுத்து ஆட்களை திரட்டும் நிலை வந்து விட்டது. அது சரி... தேர்தல் அதிகாரி மனு வாங்கலன்னு ஆர்ப்பாட்டம் நடத்துனாங்களே, அதில், தோழர்கள் பலரை காணலையே!,'' என்றாள் மித்ரா.

''சங்கத்தில் உள்ள, 11 டைரக்டர்களில், தோழர்களில் ரெண்டு பிரிவுக்கும் தலா ஒரு பதவி என்று முதல்ல பேசியிருக்காங்க. 'ஓ.கே.,'ன்னு சொல்லி, ஒரு பிரிவு சமாதானமாயி, கெளம்பிட்டாங்க,''

''ஆனா... இன்னொரு பிரிவு, மனுத்தாக்கல் செஞ்சிட்டு அதன் பின், பேசிக்கலாம் என்று பிடி கொடுக்காமல் விட்டுட்டாங்க. இதனால்தான் மனுத்தாக்கல் நேரம் முடிந்த பின் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கும் வரலையாம்,'' என்றாள் சித்ரா.

''அதுசரி போன தடவை எலக்ஷன் ரத்தாகும் அளவுக்கு போராட்டம் நடத்திய உடன்பிறப்புகள் இந்த தடவை, தலையே காட்டலயே. அதுக்கு காரணம் என்னங்க்கா?'' மித்ரா.

''அர்பன் பேங்கில், உடன்பிறப்புகளை கழட்டி விட்டு தோழர்கள் பதவி வாங்கிட்டாங்க. அங்கு நடந்த போராட்டத்துல உடன்பிறப்பு மட்டும் கலந்துக்கிட்டாங்க. அந்த டென்ஷனில், இந்த தடவ உ.பி.,'ஸ், எட்டியே பார்க்கவில்லை,'' என்றாள் சித்ரா.

அப்போது, கறுப்பு நிறத்தில், ஒரு சொகுசு கார் உள்ளே வந்து நின்றது. இறங்கியவர்களை பார்த்து,

''ஹலோ அங்கிள், ஆன்ட்டி எப்டியிருக்கீங்க?'' என்று மித்ரா கேட்டதும், அவர்களும் பதில் சொல்லி விட்டு நகர்ந்தனர்.

''மித்து... இதே கலரில் உள்ள ஒரு கார் பற்றிய மர்மம் இன்னும் விலகவில்லை தெரியுமா? குமரன் சிலை அருகே சென்னை ரெஜிஸ்ட்ரேஷன் கார் ஒரு வாரமாக நின்றிருந்தது. இதைப்பார்த்திட்ட, மக்கள், நார்த் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர்,''

''விசாரணையில், வேலம்பாளையம் ஸ்டேஷன் ஏட்டு, ஒருத்தர், காரை நிறுத்தி சென்றது தெரிந்தது. இது சம்பந்தமாக, 'நார்த்' அதிகாரிகளை, விசாரிக்குமாறு, கமிஷனர் சொல்லி ஒரு வாரமாச்சு. இன்னி வரைக்கும் விசாரணை நடக்கலயாம். ஆனா, அது ஏட்டோட கார் இல்லை. அவருக்கு தெரிஞ்சவரோட காருன்னு சிலர் சொல்றாங்களாம்,''

''ஏக்கா.. இதென்ன கூத்தா இருக்குது. தெரிஞ்சவங்க வீட்லயோ, இல்லாட்டி, ஏதாவது ஸ்டாண்டிலோ நிறுத்தியிருக்கலாம். அதை விட்டுட்டு, பப்ளிக் பிளேஸில், கார் நிறுத்த வேண்டிய அவசியம்தான் என்னன்னு, விசாரிக்க வேண்டியது போலீசோட கடமை இல்லையா,''

''அவங்க, எங்க கடமையை செய்றாங்க. இப்ப பாரு. ஊட்டியில் இருந்து, திருப்பூருக்கு 'டிரான்ஸ்
பரில்' வந்த ஒரு அதிகாரி, ரொம்ப மகிழ்ச்சியில் இருக்காராம். 10 வருஷத்துக்கு முன்னாடி, இங்க வேலை செஞ்ச அவர், பழைய ஆட்களை எல்லாம் 'ஒரு ரவுண்ட்' பாத்துட்டாராம்,''

''அந்த காலகட்டத்திலயே 'வசூல் மன்னன்'னு பேர் எடுத்தவராம். இப்படி, புரமோஷனில் வந்து, தனக்கு விசுவாசமுள்ள ஆட்களை வச்சு, ஒரு 'டீம்' ரெடி பண்ணிட்டு, 'தீயா வேலை செய்ய ஆரம்பிச்சுட்டாராம்,''

''ஏக்கா... இந்த 'யானையின் அரசன்' அதிகாரியைத்தான் சொல்றீங்களா?''

''ஏண்டி... இதை கண்டுபிடிக்க இவ்ளோ நேரமாச்சா. பக்கத்தில் இருக்கிற, உடுமலையில் 'ஏதோ.. சிக்னல்' மேட்டரில், 'லம்பா' சுருட்டிட்டாங்களாம் தெரியுமா?''

''ஓ... தெரியுமே. அங்கே, சில மாசமா, சிக்னல ஒழுங்கா பராமரிக்காமல், 'இ.பி.,' லைன் கட்டாகி சும்மா நிக்குதாம். காரணம் பற்றி விசாரித்தால், முன்னாடி இருந்த, ஒரு அதிகாரிட்ட, இ.பி.,க்கு கட்ட, 50 ஆயிரம் பணத்தை, தனியார் நிறுவனம் கொடுத்துருக்கு. ஆனா, நம்ம ஆள், அதை 'சுருட்டிட்டு' போயிட்டாராம். இதனால், சிக்னல் இப்ப சிக்கலில் இருக்காம்,''

''ஓ.. புரியுதுங்கா. சிகாகோவில் கம்பீரமா பேசுன அந்த மகான் பேரை வைச்சு கிட்ட அதிகாரிதானே, இப்படி பண்றது,''

''கரெக்டா.. சொல்லிட்டியே... சரி பரவாயில்லை விடு. 24 மணி நேரம் சரக்கு, லாட்டரி, கஞ்சா.. இந்த வரிசையில, இப்ப 'லேட்டஸ்ட்டா' 'மசாஜ் சென்டரும்' சேர்ந்துடுச்சாம். அதுவும் 'ஆன்லைனில்' ரொம்ப ஜோரா நடக்குதாம்,''

''ஏன்க்கா.. எங்கெங்க நடக்குதாம்?''

''வீரபாண்டி, நொச்சிபாளையம், அவிநாசி, பல்லடம்.. இப்படி சிட்டி, ரூரல் பகுதியில், வெளுத்து கட்றாங் களாம். நம்ம போலீஸ் வழக்கம் போல, 'அப்டியெல்லாம் இல்ல'னு சொல்றாங்க,'' என்று சித்ரா சொன்னதும், ''ஏய்.. வாங்கடி சாப்பிடலாம்,'' என ைஷலு அழைக்கவும், இருவரும், டைனிங் ஹால் நோக்கி நகர்ந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X