பொருளாதார ஆலோசகருக்கே தெரியாமல் பணமதிப்பிழப்பு : சிதம்பரம்| Dinamalar

பொருளாதார ஆலோசகருக்கே தெரியாமல் பணமதிப்பிழப்பு : சிதம்பரம்

Added : ஆக 29, 2018 | கருத்துகள் (86)
Advertisement
பொருளாதார ஆலோசகர், பணமதிப்பிழப்பு, சிதம்பரம், சுகாதார காப்பீடு

புதுடில்லி : டில்லியில் தேசிய மாணவர் அமைப்பின் விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கடுமையாக விமர்த்து பேசினார்.
விழாவில் பேசிய அவர், உலகின் ஒரு பொருளாதார நிபுணர் கூட பணமதிப்பிழப்பு நடவடிக்கை நல்லது என கூறவில்லை. பிரதமர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்ட அன்று நாட்டின் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன் கேரளாவில் இருந்தார். பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட்டது குறித்து அவருக்கே தெரியாது. பொருளாதார ஆலோசகருக்கே தெரியவில்லை என்றால் அந்த பொருளாதாரம் எப்படி இருக்கும்?
இந்தியாவிற்கு சரியான முன்னுதாரணம் என்பது ஐரோப்பாவில் உள்ளதை போல் அதிக மருத்துவமனைகளை, பல்நோக்கு மருத்துவமனைகளை, மாவட்ட அளவிலான மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் ஆகியவற்றை அமைக்க வேண்டும். கூடுதல் டாக்டர்கள், நர்ஸ்கள், இலவச பொது சுகாதார காப்பீடு வழங்க வேண்டும். அது தான் 130 கோடி மக்களை நீங்கள் நடத்தும் சரியான முறை.

சுகாதார காப்பீடு திட்டத்தில், உங்களால் முன்மாதியாக ஆக முடியாது. சுகாதார காப்பீடு என்பது உலகம் முழுவதும் தோல்வியடைந்த ஒன்று. அமெரிக்காவிலேயே ஒபாமா கேர் திட்டம் பெரும் கேள்விக்குரியதாக தான் உள்ளது. மன்மோகன் சிங் ஆட்சியில் பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. மன்மோகன் சிங்கிடம், அதிபர் ஒபாமா அமர்ந்து பொருளாதாரம் குறித்த ஆலோசனைகளை கேட்டதை நான் பார்த்திருக்கிறேன். மன்மோகன் சிங் சொன்னதை எல்லாம் ஒபாமா ஏற்றுக் கொள்ள மாட்டார். பெரிய பொருளாதாரத்தை எவ்வாறு கையாள்வது என பொருளாதாரம் பற்றிய ஒவ்வொன்றையும் பற்றி கேட்டு தெரிந்து கொண்டார் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Dubai,இந்தியா
29-ஆக-201818:25:19 IST Report Abuse
Murugan ரெண்டு வருஷமா பொலம்பறத பார்த்தா... டேமேஜ் ரொம்ப அதிகம் போலருக்கே? முன்னாடியே தெரிஞ்சிருந்தா மாத்தியிருப்பார் பாவம்....
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
29-ஆக-201819:54:01 IST Report Abuse
Nallavan Nallavanநாம் நீளமான வரிசைகளில் பணம் மாற்றக் காத்திருந்த பொழுது, சில செல்வந்தர்களுக்கு ஆக்சிஸ் வாங்கி மாற்றிக்கொடுத்தது ..... இதற்கென குறிப்பிட்ட கிளைகள், ரகசிய கவுண்ட்டர்களுடன் செய்யப்பட்டன ...... அதன் உரிமம் ஏன் ரத்து செய்யப்படக் கூடாது என்கிற வகையில் வாத விவாதங்கள் சூடு பறந்தன ..... ரிசர்வ் வங்கியும் ஆகட்டும் பார்க்கலாம் என்றது ..... அதுக்கப்புறம் என்ன ஆச்சு ? மத்தியில் பாஜக அரசு மனது வைத்தால் சிவகங்கைச் சீமானின் பழைய ஆயிரம், ஐந்நூறு நோட்டுக்களும் மாற்றப்பட்டு விடும் ...... காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத அளவுக்கு நேர்மையாளர்கள் பாஜக -வினர் என்று நான் சொல்லத் தயாராக இல்லை .........
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran Ramasamy - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஆக-201818:18:45 IST Report Abuse
Bhaskaran Ramasamy பொது மக்களாகிய எங்களுக்கே ஒரு பிரச்சனையும் இல்லை, நீ போய்கிட்டே இரு
Rate this:
Share this comment
Cancel
N S Sankaran - Chennai,இந்தியா
29-ஆக-201818:11:08 IST Report Abuse
N S Sankaran ப சி பெரிய கேடி, அங்கங்கே உளவாளிகளை வைத்திருக்கிறார் என்று தெரிந்து தான் பொருளாதார ஆலோசகரும் கூட சொல்லாமல் செய்தார்கள். நீயும் உன் மகனும் இன்னும் சுதந்திரமாக உலாவுவதிலிருந்தே தெரிகிறது உன்னுடைய கயவாளித்தனம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X