கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கோயில் சொத்து மட்டும் வேண்டுமா: இளவரசர் கோபம்

Added : ஆக 29, 2018 | கருத்துகள் (87)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கேரளா, திருவனந்தபுரம், பத்மநாபசாமி கோவில், சொத்துக்கள், வெள்ளம், சீரமைப்பு பணி

திருவனந்தபுரம்: கேரள வெள்ள சீரமைப்பு பணிகளுக்கு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் சொத்துக்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற கருத்துக்கு திருவிதாங்கூர் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


ரூ.1 லட்சம் கோடி சொத்து

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள ரகசிய பாதாள அறைகள் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி திறக்கப்பட்டன. அவற்றில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் ஆபரணங்கள் உள்ளது தெரிய வந்தது. கோவில் பாதுகாப்பு மற்றும் சொத்துக்கள் குறித்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து விசாரித்து வருகிறது.


கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு பின், சீரமைப்பு பணிகளுக்கு


பத்மநாபசாமி கோவில் சொத்துக்களை பயன்படுத்தலாம் என்ற கருத்து சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.


சுப்ரீம் கோர்ட் முடிவு எடுக்கட்டும்

இந்த கோவிலுடன் தொடர்புடைய திருவிதாங்கூர் அரசு குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஆதித்ய வர்மாவிடம் இது குறித்து கேட்ட போது அவர் கூறியதாவது:


சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள கோவில் சொத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதோடு நின்று விட கூடாது. சர்ச், மசூதி உள்ளிட்ட பிற வழிபாட்டு தலங்களுக்கு உரிய சொத்துக்களையும் இதற்கு பயன்படுத்தலாம் என்ற எண்ணம் வர வேண்டும். இந்த விஷயத்தில் கேரள அரசு தனது கருத்தை வெளியிட வேண்டும். அப்போது தான் அரச குடும்பம் தனது நிலையை தெரிவிக்க முடியும். இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் ஒரு முடிவு எடுக்கட்டும். மற்றவர்கள் கூறுவது போல பத்மநாபசாமி கோவில் பாதாள அறைகளில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், ஆபரணங்கள் இல்லை. ஆயிரம் கிலோ தங்க நகைகள் தான் உள்ளன என எங்கள் முன்னோர் கூறியுள்ளனர்.


இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement
வாசகர் கருத்து (87)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yogeendra Bhaarati VP - coimbatore,இந்தியா
05-செப்-201813:07:45 IST Report Abuse
Yogeendra Bhaarati VP எல்லாவற்றையும் அழகாகப் பேசிவிட்டு, சுப்ரீம் கோர்ட் முடிவு எடுக்கட்டும் என்று பேசியது, அவருடைய குழந்தைத்தனமான அறியாமையைக் காட்டுகிறது.
Rate this:
Share this comment
Cancel
samkey - tanjore,இந்தியா
03-செப்-201810:30:35 IST Report Abuse
samkey அந்த இளவரசர் படத்தை வெளியிட்டு இருக்கலாம். மேன்மக்கள் மேன்மக்களே. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தும் அவைகளை ஆட்டய போடாமல் கோவிலிலேயே வைத்து பாதுகாத்து வந்ததற்கு. கேரளாவில் சிவப்பு தலிபான்களின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்து கோவில்களே குறி வைத்து தாக்கப் படுகின்றன.இந்துக்களின் நம்பிக்கைகளில் அரசு தேவையில்லாமல் தலையிடுகிறது. எவன் வீட்டு சொத்தை எவன் பிடுங்குவது? போய் சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தை மீட்டும் அதனை பயன்படுத்துங்கள். கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தை மீட்டு பயன்படுத்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
31-ஆக-201812:15:15 IST Report Abuse
Bhaskaran இளவரசர் சொன்னதைப்போல Church மற்றும் மசூதியில் உள்ளசொத்துக்களையும் பயன்படுத்தலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X