பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
99.3 சதவீத செல்லாத ரூபாய் நோட்டுகள்
ரிசர்வ் வங்கிக்கு திரும்பியதாக அறிவிப்பு

புதுடில்லி : 'செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில், 99.3 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளன' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

99.3 சதவீதம்,செல்லாத ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கி,அறிவிப்பு


'புழக்கத்தில் இருந்த, 500 மற்றும்1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, 2016 நவம்பர், 8ல் அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக புதிய, 500 மற்றும்2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளை வங்கிகளில் திருப்பி செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு திருப்பி செலுத்தப்பட்ட பழைய, செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 மற்றும்

1,000 ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி நடந்து வந்தது. 'ஏற்கனவே புழக்கத்தில் இருந்த இந்த நோட்டு களில், 99.3 சதவீதம் திரும்பியுள்ளன' என, ரிசர்வ் வங்கி தற்போது தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், செல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்து கூறப்பட்டுள்ளதாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளி யானபோது,ரூ. 15.42 லட்சம் கோடி மதிப்புள்ள, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. திருப்பி செலுத்தப்பட்ட அந்த நோட்டுகளை எண்ணும் பணி மிகவும் துல்லியமாக நடந்தது. அனைத்து நோட்டுகளையும் எண்ணும், சரி பார்க் கும் பணிகள் முழுமையாக முடிந்தன.

அதன்படி, 15.31 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள செல்லாத ரூபாய் நோட்டுகள் திரும்பியுள்ளன. அதாவது, 99.3 சதவீத நோட்டுகள் திரும்பி உள்ளன.

Advertisement

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், புதிய, 500 மற்றும் 2,௦௦௦ ரூபாய் நோட்டுகள் மற்றும் பிற ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க, 2016 - 17ம் ஆண்டில், 7,965 கோடி ரூபாய் செலவிடப் பட்டது.

அதற்கு முந்தைய ஆண்டு, 3421 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. அதேபோல், 2017 - 18 ம் ஆண்டில், 4912 கோடி ரூபாய் செலவில், புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.இவ்வாறு ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
01-செப்-201801:56:20 IST Report Abuse

Murthyமறுபடியும் எண்ணிப்பாருங்கள் நூறு சதவீதம் திரும்பி வந்திருக்கும்.......

Rate this:
Bneutral - Chandigarh,இந்தியா
30-ஆக-201823:19:43 IST Report Abuse

BneutralWhom ever opposing this.. keep oppose.. thats the victory of this process Right people knows what it is... wrong people don't need of explanation.. no one cares about their comments

Rate this:
Viswanathan - karaikudi,இந்தியா
30-ஆக-201821:48:30 IST Report Abuse

Viswanathan பண மதிப்பிழப்பு ஒரு நல்ல நடவடிக்கை . இதை அகில இந்தியா அளவில் பாட புத்தகத்தில் சேர்த்தால் வருங்கால அரசியல்வாதியை வருபவனுக்கு , கள்ள பண ஒழிப்பை எப்படி பரிபூரணமாக நிறை வேற்றி நாட்டில் பாலும் தேனும் ஓடுவதாக பிரச்சாரம் செய்யலாம் , கியூவில் மக்களை மணிக்கணக்கில் ,, அல்ல , அல்ல நாட்கணக்கில் நிற்க வைத்து வேடிக்கை பார்க்கலாம் , இது வரை பிறக்காத இந்தியா , புதிய இந்தியாவாக பிறந்து விட்டது என்று மேடை தோறும் விளக்கலாம் . அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி மக்களுக்கு பொருளாதாரத்தை புரிய வைக்கலாம்

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X