உப்பு அதிகமானால் தப்பு!| Dinamalar

உப்பு அதிகமானால் தப்பு!

Added : ஆக 29, 2018
 உப்பு அதிகமானால் தப்பு!

உப்பு அதிகமானால் தப்பு!
மது அன்றாட உணவில் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நாக்கினால் உணரப்படும் உப்பின் சுவை, மற்ற சுவைகளை விட நமக்கு சந்தோஷத்தை தரும். உணவின் ருசியை உப்பு அதிமாக்குகிறது. குறைந்த அளவே உப்பை சாப்பிட்டு பழகினால் நாவில் உள்ள நுண்நரம்புகள் அதற்கேற்றார் போல் மாறிக்கொள்கின்றன. எனவே குறைந்த அளவில் உப்பு இருந்த போதிலும், சுவையாக உணர முடியும்.

விளைவுகள்

உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் அதிகமாவதால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக கோளாறு ஏற்படலாம். அதிக உப்பால் ரத்த நாளத்தின் உள்சுவரில் கொழுப்பு படிவதால் உள்சுவரின் செயல்திறன் குறைகிறது. உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது உப்பு கூடுதலாக தீய விளைவை தரும். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், பெண்களை விட ஆண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவர். உணவிற்காக எடுக்கும் உப்பு அளவை பாதியாக குறைத்தால் ரத்த அழுத்தமும் குறையும். உப்பு அதிகரிக்கும் பட்சத்தில் வயிற்றுப்புண், இருதய சுவரில் வீக்கம், சிறுநீரக கோளாறு, சிறுநீரக கல் நோய் ஏற்படும். ரத்தத்திலும் உப்பு சத்து அதிகரிக்கும். எலும்பின் அடர்த்தியும் குறையும். சில நோய்கள் தாக்கும் போது உப்பு சத்து அதிகரிப்பால் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புண்டு. மேலும் ரத்தத்தில் யூரியா மற்றும் யூரியா அமில சத்துக்களும் அதிகரிக்கும்.


உணவுக்கு தேவையான உப்பு

நமக்கு தேவையான சோடியத்தின் அளவு ஒரு நாளுக்கு 2.3 கிராம். இது ஒரு தேக்கரண்டி அளவாகும். இந்த அளவிற்கு மேல் உப்பு எடுக்கும் போது பாதிப்பு ஏற்படும். பதப்படுத்திய, வேக வைத்த உணவுகள், சூப், ஊறுகாய்கள், கருவாடு, மாமிச உணவு, அப்பளம், வடகம், சோடா மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றில் உப்புசத்து அதிகமிருக்கும். பல வீடுகளில் சாதம் சமைக்கும் போதே உப்பு சேர்க்கின்றனர். அது தவறு. சாம்பாரில் பாதியளவு உப்பு போட்டால் போதும். சமைக்கும் போது உப்பு சேர்க்க வேண்டும் என்றால் சோடியம் குறைவாக கலந்த உப்பை சேர்க்கலாம். வெங்காயம், வெள்ளை பூண்டு, எலுமிச்சை பழங்கள் உணவில் சேர்க்கலாம். பழம் மற்றும் காய்கறிகளில் உப்பு அளவு குறைவாக இருப்பதால், அவற்றை தயக்கமின்றி சாப்பிடலாம். பதப்படுத்திய உணவு, குளிரூட்டிய உணவை தவிர்ப்பது நல்லது. இவற்றை வாங்கும்போது உப்பு அளவை பார்த்து வாங்க வேண்டும். சுத்திகரித்த குடிநீரில் கால்சியத்தை எடுத்து விட்டு, சோடியம் கலக்கின்றனர். இதனால் தண்ணீர் குடிக்கும் போது நமது உடலில் மறைமுகமாக உப்பு சேர்கிறது. பன், ரொட்டி தயாரிப்பில் சோடியம் - பை - கார்பனேட் சேர்க்கிறார்கள். எனவே இவற்றை வாங்கும் போது அதில் எவ்வளவு சோடியம் இருக்கிறது என அறியவேண்டும். உப்பு சேர்க்கப்படாத ரொட்டி, பிஸ்கட் நல்லது. கோதுமை, அரிசி உணவில் உப்பு இல்லை. உருளை கிழங்கு, பாஸ்தாவில் உப்பு இருக்காது. குறைந்தளவு உப்பு உள்ள உணவுகள் பீன்ஸ், பால், ஐஸ்கிரீம் ஆகும். இதில் உப்பு கலக்காதவை தயிர், மோர், நெய், ஆலிவ் ஆயில், கான் ஆயில், இனிப்பு வகைகளில் தேன், ஜாம், ஜெல்லி, காபி, டீ மற்றும் குளிர்பான வகைகள் ஆகும். தக்காளி ஜூஸ் மற்றும் பழரசத்தில் உப்பு குறைவாக இருக்கும்.மாரடைப்பிற்கு பாதைரத்தநாளத்தில் உட்சுவர்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் இருதய ரத்த நாளத்தில் உறையும் தன்மை கூடுவதால் ரத்த குழாய் அடைபட்டு, மாரடைப்பு ஏற்படும். இதே போன்று மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும் போது பக்கவாதமும் வரலாம். சில நேரம் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மூளை செயல் (கோமா) இழந்துவிடும்.
மனிதனின் உடல் உறுப்புகளில் முக்கியமானது சிறுநீரகம். இதன் செயல்திறன் வயது அதிகரிக்க அதிகரிக்க குறையும். 80 வயதில் சிறுநீரக செயல்பாடு, 30 வயது சிறுநீரக செயல்பாடை விட குறைவாக தான் இருக்கும். இச்சூழலில் அதிகமான உப்பு எடுக்கும் போது அவை உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளை துாண்டிவிட்டு உடம்பில் சிறுநீரகங்கள் நீரை வெளியேற்றும் தன்மை குறைகிறது. இதனால் கால், உடல் வீக்கம் ஏற்படும். ரத்தநாளங்களில் விரியும் தன்மையை அதிக உப்பு குறைக்கும். உதாரணமாக சிறுநீரகத்தில் எந்த உறுப்புகளை எடுத்தாலும் சற்று அதிகமாக வேலைசெய்யும் போது, அதற்கு சராசரியை விட அதிக ரத்த அளவு தேவைப்படுகிறது. ரத்தநாளங்கள் விரிந்து கொடுப்பதால் தான் அதிக ரத்தம் உறுப்புகளில் சேரமுடியும். அதிக உப்பு இது போன்று விரியும் தன்மையை தடுக்கிறது.உணவுகட்டுப்பாடு அவசியம்உப்பு சத்து என்பது அன்றாட உடல் ஆரோக்கியத்திற்கு, உடல் செயல்முறைகளுக்கு மிக முக்கியமானது. உதாரணமாக சோடியம் சத்து தான் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களில் நடக்கும் செயல்களுக்கு முக்கியமானது. இருப்பினும் அதே சோடியம் சத்தை அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் பாதிக்கப்படும். அந்த பாதிப்பு சர்க்கரை நோய் போல் வெளியில் தெரியாமலேயே இருந்து விடும். முக்கிய நிலையில் சிறுநீரக கோளாறு அல்லது ரத்த கொதிப்பாக மாறிவிடுகிறது. ரத்த கொதிப்பிற்கு மாத்திரைகள் எடுக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். அளவுக்கு அதிகமாக உப்பு சாப்பிடும் பழக்கம் இருந்தால் நீங்கள் ரத்தகொதிப்பு மாத்திரைகள் சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் குறையாது. எனவே உணவு கட்டுப்பாடு என்பது சர்க்கரை நோய்க்கு மட்டுமின்றி ரத்த அழுத்த நோய்க்கும் முக்கியமானதாகும். குழந்தை பருவத்தில் இருந்தே உணவில் உப்பின் அளவை குறைப்பதால் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு குறையும்.-டாக்டர்.சங்குமணிஅரசு பொது, சர்க்கரை நோய் நிபுணர் மதுரை. sangudr@yahoo.com

100 கிராம் பொருளில் இருக்கும் உப்பு அளவு (மில்லிகிராம்)மைதா மாவு 10கேழ்வரகு, கொள்ளு, அரிசி, அவல் 11முழு கோதுமை 17பட்டாணி 20கோதுமை ரவை 21பாசிப்பயறு 27பாசிப்பருப்பு, துவரம்பருப்பு 28கருப்பு கொண்டை கடலை 37வெள்ளை கொண்டை கடலை 37கடலைப்பருப்பு 73சுரைக்காய், பீர்க்கை 2கத்தரி, பாகற்காய் 3பெரிய வெங்காயம் 4வெண்டை 7சேனைக்கிழங்கு 9கொத்தவரங்காய் 10வெள்ளரி 10உருளை 11வாழைக்காய் 15வாழைப்பூ 20புடலை 25கேரட் 35காலிபிளவர் 53சிவப்பு முள்ளங்கி 63கொத்தமல்லி தழை 58பீட்ரூட் 59பொன்னாங்கண்ணிமுருங்கை கீரைகள் 70வெந்தய கீரை 76தண்டு கீரை 230மாதுளை 1ஆரஞ்ச் 4கொய்யா பழம், சப்போட்டா 5பப்பாளி, பேரிக்காய் 6நாவல்பழம் 26மாம்பழம், தர்பூசணி 27ஆப்பிள் 28வெள்ளை முள்ளங்கி 33அன்னாசி 34வாழைப்பழம் 36பசும்பால் 73எருமை பால் 19தயிர் 32We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X