இடுக்கியில் நிலச்சரிவுக்கு காரணம் என்ன அமெரிக்க வல்லுநர்கள் குழு ஆய்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இடுக்கியில் நிலச்சரிவுக்கு காரணம் என்ன அமெரிக்க வல்லுநர்கள் குழு ஆய்வு

Updated : ஆக 30, 2018 | Added : ஆக 29, 2018 | கருத்துகள் (7)
Advertisement
இடுக்கி, நிலச்சரிவு,  அமெரிக்க வல்லுநர்கள் குழு ,ஆய்வு

கம்பம்: இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளுக்கான காரணத்தை கண்டறிய அமெரிக்க புவியியல் வல்லுநர் குழு செப். 2 முதல் செப்.10 வரை ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் இடுக்கி மாவட்டம்கடுமையாக பாதிக்கப் பட்டது. இங்கு ஆண்டு சராசரியாக ஆயிரத்து 835 மி.மீ., மழை தான்பதிவாகும்.ஆனால் இந்தாண்டு ஆக. 1 முதல் 22 வரை 3 ஆயிரத்து 565 மி.மீ., மழை கொட்டித்தீர்த்தது. கடந்த ஜூன் முதல் தற்போது வரை ஆயிரத்து800 நிலச்சரிவுகள்ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இதில் ஆயிரத்து 200 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.150 கி.மீ., தேசிய நெடுஞ் சாலைகள் பயன் படுத்த முடியாததாகமாறியது.


ஆய்வுக்கு வருகை

நிலச்சரிவுகள் ஏற்பட காரணம் என்ன, எதிர்காலங்களில் தவிர்க்க என்ன செய்ய வேண்டும், வீடுகள் கட்டுவதற்கான வழிமுறைகள் போன்றவற்றிற்கு பரிந்துரைகள் தருமாறு, தேசிய புவியியல் கழகத்துடன் கேரள புவியியல் துறை ஆலோசனை மேற்கொண்டது. அதன் பேரில் அமெரிக்க தேசிய அறிவியல் பவுண்டேஷன் (யூ.எஸ்.நேஷனல் சயின்ஸ் பவுண்டேஷன்) என்ற அமைப்பு, இடுக்கிமாவட்டத்தில் புவியியல் ஆய்வு மேற்கொள்ள வல்லுநர் குழுவை அனுப்புகிறது. செப். 2 முதல் 10 வரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு தொடர்பாக இந்தக்குழு ஆய்வுசெய்து, மாநில அரசிற்கு பரிந்துரைகள்செய்ய உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srivasukam Sri - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஆக-201813:02:48 IST Report Abuse
Srivasukam Sri yaru americanai allow pandradhu, indiavil yarum illaiya, avvalavu mosamava poitadhu india nilamai
Rate this:
Share this comment
Cancel
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
30-ஆக-201810:24:38 IST Report Abuse
Mohan Sundarrajarao avargal solvathai ivargal ketkapogiraargalaa, enna ?
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
30-ஆக-201810:05:42 IST Report Abuse
Anand கேரளாவில் மழை பெய்ததற்க்கு காரணம் தமிழகம் மூலமாக மோடி செய்த சூழ்ச்சியே. எப்பூடி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X