கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.,வுக்கு எதிராக அறைகூவல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில்
பா.ஜ.,வுக்கு எதிராக அறைகூவல்

சென்னை : கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற, எதிர்க்கட்சி தலைவர்கள், 'பா.ஜ., அரசை நீக்க, மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்' என, அறைகூவல் விடுத்தனர்.

கருணாநிதி, நினைவேந்தல், கூட்டத்தில் ,பா.ஜ.,எதிராக, அறைகூவல்


மறைந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, புகழ் அஞ்சலி செலுத்துவதற்காக, தி.மு.க., சார்பில், 'தெற்கில் உதித்தெழுந்த சூரியன்' என்ற தலைப்பில், சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நினைவேந்தல் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் தலைமை வகித்தார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து, பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அவர்கள் பேசியதாவது:

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி:


காங்கிரஸ் ஆட்சி யில், நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்ட போது, அதை எதிர்த்து, தி.மு.க.,வும், ஜனசங்கமும் போராடின. 'எமர் ஜென்சி'க்கு எதிரான போராட்டத்தில், கருணாநிதி முக்கிய பங்காற்றினார்.

அவர் தேசியத் தலைவர். அதன் காரணமாக தான், எம்.பி.,யாக இல்லாத ஒருவருக்கு, லோக்சபா, ராஜ்யசபா என, இரண்டிலும் அஞ்சலி செலுத்தப் பட்டு, ஒத்தி வைக்கப் பட்டது. மத்தியில், கூட்டணி ஆட்சியை உருவாக்குவதில், கருணாநிதி முன்னோடியாக திகழ்ந்தார். வாஜ்பாயுடன் நல்ல நட்பு வைத்திருந்தார். சிறந்த தோழமை கட்சி தலைவராக இருந்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார்:


சமூக நீதிக்காகவும், சம உரிமைக்காகவும், கருணாநிதி பாடுபட்டார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களுக்காகவும், விதவை கள் மறுமணம், தீண்டாமை ஒழிப்புக்காகவும் பாடுபட்டார். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல் படுத்தினார்.

பெண்களுக்கு, 30 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க செய்தார். மகளிர் சுய உதவி குழுக்களை, முதன் முதலாக, தமிழகத்தில் ஏற்படுத்தினார். கருணாநிதியின் லட்சிய கனவுகளை, ஸ்டாலின் நிறைவேற்றுவார்.

இந்திய கம்யூ., தேசிய செயலர் ராஜா:


சமூக நீதிக்காக போராடிய போராளி. அவருக்கு மரணம் கிடையாது.

தமிழ் வாழ்கிற வரை, அவரது நினைவு வாழும். 'மெட்ராஸ்' என்பது, 'சென்னை' என மாற, காரணமாக இருந்தவர்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி:


சிறந்த எழுத்தாளராக, கவிஞராக, அனைவரையும் ஈர்க்கக்கூடிய பேச்சாளராக, தமிழக மக்களுக்காக, தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். தமிழர்கள், எங்கு பாதிக்கப்பட்டாலும், கருணாநிதியின் குரல் ஒலித்தது. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்தியவர்.

புதுச்சேரி மாநிலத்தில், கவர்னர் கிரண்பேடி, தினமும் கொடுக்கும் தொல்லையை பார்க்கும் போது,'கருணாநிதியின் மாநில சுயாட்சி கொள்கையை கொண்டு வர வேண்டும்' என, விரும்புகிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுக்கு உள்ள உரிமையை, யாரும்பறிக்கக் கூடாது என, போராடி வெற்றி பெற்றவர், கருணாநிதி.

முன்னாள் பிரதமர் தேவகவுடா:


வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியதில், முக்கிய பங்காற்றியவர், கருணாநிதி. ஜனநாயகத் திற்கும், கூட்டாட்சிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்ட போதெல்லாம், அதை காக்க, துணை நின்றவர்.

அரை நுாற்றாண்டு காலமாக, திராவிட இயக்கத்தை முன்னெடுத்து சென்றவர். நான் பிரதமராக உதவியவர். என் அரசு மட்டுமின்றி, கூட்டணி அரசு நிலைத்தன்மை உடையதாக இருக்க, கருணாநிதி உறுதுணையாக இருந்தார். அவரது ஆட்சி காலத்தில், பல தேசிய முடிவுகள், தமிழ்நாடு பவனில் எடுக்கப்பட்டன.

திரிணமுல் காங்., - எம்.பி., டெரிக் ஓ பிரைன்:


கூட்டாட்சி தத்துவத்தின் மன்னனாக, கருணாநிதி திகழ்ந்தார். மாநில சுயாட்சி, மத்திய கூட்டாட்சிக்கு, முன்னுரிமை தந்தார். மத்திய அரசின் மொழி திணிப்பை எதிர்த்தார். 'அனைத்து மொழிகளுக்கும் சமமான உரிமை, மரியாதை வேண்டும்' என, போராடினார்.

லோக்சபா தேர்தலில், கூட்டாட்சி கொள்கைகளை பின்பற்றும் அனைத்து கட்சிகளும், பா.ஜ.,வை தோற்கடிக்க, ஒன்று சேர வேண்டும். அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றாக இணைந்து, இந்தியாவை, பா.ஜ.,விடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

சீதாராம் யெச்சூரி:


நவீன இந்தியா, நவீன தமிழகம் உருவாக, கருணாநிதி பாடுபட்டார். சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றுக்காக உழைத்தார். சுய மரியாதைக்காகவும், பெண்களுக்கு சம உரிமை கிடைக்கவும் போராடினார்.

Advertisement

இன்று, இந்தியாவின் பன்முகத் தன்மையை அழிக்கும் வகையில், கல்வியில் கூட, ஒரே மத சிந்தாந்தத்தை புகுத்தும் போக்கு நடந்து வருகிறது. அரசியலில், மதத்தை புகுத்தக் கூடாது.

மாநிலங்களில் அறிவிக்கப்படாத, அவசர நிலை தான், தற்போது நிலவி வருகிறது. இது, வேதனைக் குரியது. மக்களின் அடிப்படை உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்படுவதை, ஒருபோதும் ஏற்க முடியாது. குறிப்பாக, தமிழகம் ஏற்காது.ஜனநாயகத்தின் தந்தை, கருணாநிதி. அவர் அனைவரையும் நேசித்தார். அவரது சிந்தனையை முன்னெடுத்து செல்லும் பொறுப்பு, ஸ்டாலினுக்கு வந்துள்ளது.

தற்போது, நாம் மிகப்பெரிய பிரச்னையை எதிர்கொண்டுள்ளோம். ஜாதி, மத அடிப்படையில், மக்கள் பிளவு படுத் தப்பட்டு உள்ளனர். பெரும் வளர்ச்சி உருவாகி இருப்பதாக, போலி பிம்பம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் அமைதி நிலவ,வளர்ச்சி பெற,நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து, பாசிச ஆட்சியை அகற்றுவோம்.

தற்போது, இந்தியாவில் வாழும் சிறுபான்மை யினரை பாகுபடுத்தி பார்க்கும் வகையில், விஷ வித்துக்கள் விதைக்கப்படுகின்றன. இந்திய மக்கள், மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் வேறு படுத்தப்படுகின்றனர்; இந்நிலை மாற வேண்டும். என காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறினார்.

காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்:


கருணாநிதி, தனித்துவம் வாய்ந்தவர்; பன்முகத் தன்மை கொண்டவர்; தலைமை பண்புக்கு, தலை சிறந்தவர். நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் போராடினார்.காங்., - தி.மு.க., இடையே, ஏதேனும் பிரச்னை என்றால், நான் நேரடியாக கருணாநிதியை சந்திப்பேன். அவர் ஆலோசனையை கேட்பேன். ஏனெனில், கருணாநிதியின் குடும்பத்தில் ஒருவராக, நான் இருந்துள்ளேன்.

பா.ஜ., அரசில் இடம்பெற்றிருந்த போதும், தன் கொள்கைகளை விட்டு கொடுத்ததில்லை. கருணாநிதிக்கும், சோனியாவுக்கும் இடையே, இணக்கமான சூழல் எப்போதும் இருந்துள்ளது.

தற்போது, நாட்டில் எமர்ஜென்சியை விட, மோசமான சூழல் உள்ளது. மாநில உரிமைகள் அனைத்தையும், பா.ஜ., அரசு பறித்து வருகிறது. லோக்சபாவில், பா.ஜ.,விற்கு தனிப் பெரும் பான்மை உள்ளது. ராஜ்யசபாவில், பெரும் பான்மை இல்லை. எனவே, அவர்கள், எந்த மசோதாவை கொண்டு வந்தாலும், மரபுகளை மீறி, லோக்சபாவில் நிறைவேற்று கின்றனர்.

ஒவ்வொரு மசோதாவும், பணத்தை குறி வைத்தே, தாக்கல் செய்யப்படுகின்றன. ஊட கம், தகவல் அறியும் உரிமை சட்டம் உட்பட, அனைத்தும் முடக்கப்படுகின்றன. இதற்கு எதிராக,அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.Advertisement

வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.SUDARSANAM - Chennai,இந்தியா
05-செப்-201812:07:33 IST Report Abuse

R.SUDARSANAMஇது என்ன கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டமா அல்லது பாரதீயஜனதாவை குறைகூறும் கூட்டமா

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-செப்-201805:11:19 IST Report Abuse

J.V. Iyerசிலருக்கு எதை எங்கு பேசவேண்டும் என்று தெரியும். அவர்களை ஒருவர் திரு நிதின் கட்கரி. மற்றவர்கள் இங்கு பொய் அரசியல் நாகரீகம் தெரியாமல் பேசுவது அவர்களின் திருட்டுத்தனத்தை காட்டுகிறது. அவர்கள் வளர்ந்த விதத்தை, படிப்பறிவை காட்டுகிறது. சீ? இதை அனுமதித்த சுடாலின் எப்படிப்பட்ட மனிதர் என்பதை மக்களுக்கு புலப்படுத்துகிறது. சே.. மக்கள் இவர்களை ஒதுக்குவது நியாயமானதே...

Rate this:
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஆக-201820:28:56 IST Report Abuse

Sriram VIn the condolence meet, why they are talking about politics, DMK does not know the ethics and values, people should teach them a lesson

Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
31-ஆக-201821:30:29 IST Report Abuse

கல்யாணராமன் சு.@Sriram V, it is not just DMK, but even supposedly-educated politicans like Sitaram Yechury, Derek O'Brien, GHulam Nabi Azad were talking politics. these guys have lost their marbles and stooped to a really low-level politics............classic example of disaster caused by hate politics without any agenda...

Rate this:
மேலும் 58 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X