'பிம்ஸ்டெக்' நாடுகளுடன் பணியாற்ற மோடி உறுதி Dinamalar
பதிவு செய்த நாள் :
'பிம்ஸ்டெக்' நாடுகளுடன் பணியாற்ற மோடி உறுதி

காத்மாண்டு : 'இந்தியா, 'பிம்ஸ்டெக்' நாடுகளுடன் இணைந்து பணியாற்றும்' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிம்ஸ்டெக்,நாடுகளுடன்,பணியாற்ற,மோடி,உறுதி


வங்காள விரிகுடா ஒட்டியுள்ள, இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், 'பிம்ஸ்டெக்' அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. பிம்ஸ்டெக் நாடுகளின், நான்காவது மாநாடு, நேபாள தலைநகர்,காத்மாண்டுவில் நேற்று துவங்கியது.

வரவேற்பு:


இதில்,பங்கேற்பதற்காக, மோடி, காத்மாண்டுக்கு சென்றார். காத்மாண்டு

விமானநிலையத்தில், அவரை, நேபாள அமைச்சர் கள் வரவேற்றனர். பின், பிம்ஸ்டெக் மாநாட்டை, நேபாள பிரதமர் கே.பி.சர்மாஒலி, துவக்கி வைத்தார்.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: பிம்ஸ் டெக் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற, இந்தியா கடமைப்பட்டு உள்ளது. இந்த நாடுகள், ஒருங்கிணைந்து செயல்படுவது மிகவும் முக்கியம்.

இந்தியா உட்பட, பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் அனைத்தும், பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல் போன்ற சர்வதேச குற்றங்களால் பாதிக்கப் பட்டுள்ளன. போதைப் பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பான, பிம்ஸ்டெக் அளவில் மாநாடு நடத்த, இந்தியா தயாராக உள்ளது.

இருதரப்பு உறவு


பிமஸ்டெக் நாடுகளிடையே, துாதரக உறவு மட்டுமின்றி, நாகரிகம், வரலாறு, கலை,

Advertisement

மொழி, உணவு மற்றும், கலாசார ரீதியான உறவுகளால், நாம் வலிமையாக ஒன்றுபட்டுள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மாநாட்டில் வங்தேச பிரதமர், ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் சிரிசேன, தாய்லாந்து, பூடான், மியான்மர் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்று உள்னர். மாநாட்டில் பங்கேற்றுள்ள இலங்கை அதிபர், சிரிசேனாவை, பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். இருவரும், இருதரப்பு உறவு களை வலுப்படுத்துவது பற்றி ஆலோசித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
31-ஆக-201821:29:29 IST Report Abuse

Pugazh Vஇவர் அங்கே போய் இணைந்து செயலாற்ற விருப்பம் னு சொல்வார் ஆனால் அவரோட தமிழக ரசிகர்கள், இலங்கை யையும் திட்டுவாங்க, தாய்லாந்து அதிபரின் மதத்தினரை பாவாடை என்பார்கள்.. வங்கதேச அதிபரின் இனத்தவரை பச்சகுல்லா என்பார்கள். விசித்திரமான கட்சி பா

Rate this:
AXN PRABHU - Chennai ,இந்தியா
31-ஆக-201809:19:19 IST Report Abuse

AXN PRABHUபிம்ஸ்டெக் நாடுகளில் உள்ள அனைத்து நாடுகளும் சீன ஆதரவை கடைபிடிக்கும் நாடுகள், இந்தியாவை இந்த நாடுகள் ஒரு வல்லரசாகவோ தொழில் மற்றும் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாகவோ மதிப்பதில்லை. இந்தியாவும் இந்த நாடுகள் என்ன செய்தாலும் , மென்மையாக நடந்து அவைகளுக்கு அடிவருட மட்டுமே செய்கிறது. அப்படி அந்த நாடுகளை தாஜா செய்து போகவில்லை என்றால் அவைகள் சீனாவுக்கு ராணுவ மையங்களை வைக்க அதிக இடம் தந்து விடுவார்கள் என்கிற பயம். உண்மையில் பிம்ஸ்டெக் நாடுகள் இந்தியாவை மிரட்டி தான் இதுவரை நடந்து வந்துள்ளன. நட்பு நாடுகளாகக்கூட அவை இந்தியாவை மதிப்பதில்லை. இதுதான் உண்மை நிலை.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
31-ஆக-201808:33:28 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇருவரும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி ஆலோசித்தனர். ஏதாவது தமிழக மீனவர்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா ...

Rate this:
AXN PRABHU - Chennai ,இந்தியா
31-ஆக-201809:12:22 IST Report Abuse

AXN PRABHUதமிழர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் தலையெடுக்க முடியாமல் தடுப்பது எப்படி என்று ( வழக்கம்போல ) பேசினார்கள்....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X