ஆர்.எஸ்.எஸ்., மாநாட்டுக்கு போகாதீங்க: ராகுலுக்கு கார்கே எச்சரிக்கை

Added : ஆக 31, 2018 | கருத்துகள் (78)
Advertisement
mallikarjun kharge,rahul gandhi,RSS,ஆர்.எஸ்.எஸ்., மாநாடு,போகாதீங்க,ராகுல்,ராகுல் காந்தி,கார்கே,எச்சரிக்கை

புதுடில்லி : 'ஆர்.எஸ்.எஸ்., மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு வந்தால், அதை ஏற்க வேண்டாம்' என, காங்., தலைவர் ராகுலுக்கு, அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் மாநாடு, டில்லி விஞ்ஞான் பவனில், அடுத்த மாதம், நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள, காங்., தலைவர், ராகுல், மார்க்சிஸ்ட் பொது செயலாளர், சீதாராம் யச்சூரி உட்பட, அனைத்து கட்சியினருக்கும், அழைப்பு விடுக்க, ஆர்.எஸ்.எஸ்., முடிவு செய்துள்ளதாக, ஊடகங்களில், செய்தி வெளியானது. இதையடுத்து, 'ஆர்.எஸ்.எஸ்., மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு வந்தால், அதை ஏற்க வேண்டாம்' என, ராகுலுக்கு, மல்லிகார்ஜுன் கார்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, காங்., உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில், மல்லிகார்ஜுன் கார்கே கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்., என்பது விஷம். அந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதன் மூலம், விஷத்தை வலுக்கட்டாயமாக அருந்த வைக்க வேண்டும் என, பொறி வைக்கப்படுகிறது. அதை, ராகுல் அருந்த வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ்., மாநாட்டில், கலந்து கொள்ள ராகுலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும், அவர் கலந்து கொள்ள மட்டார் என, தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
31-ஆக-201817:51:23 IST Report Abuse
Sathya Dhara போலி மதச்சார்பின்மை TRAITORS .......SHOULD BE THROWN OUT OF THIS HOLY LAND.
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
31-ஆக-201815:21:43 IST Report Abuse
Anand மாநாட்டுக்கு போகவேண்டாம், ஏனென்றால் அங்கு தேச ஒற்றுமை, நலன் பற்றி போதிக்கப்படும், நமக்கு சரிப்பட்டு வராது, முதலுக்கே வேட்டுவைத்துவிடும். வேண்டுமானால் பட்டாயாவிற்கு போ, அதுதான் நமக்கு உகந்தது.
Rate this:
Share this comment
Cancel
kadhiravan - thiruvaroor,இந்தியா
31-ஆக-201815:12:25 IST Report Abuse
kadhiravan ராகுல் ஜி..,அவர்கள் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை வெள்ளைக்காரனுக்கு காட்டிக்கொடுத்த இயக்கத்தினர்..,அவர்களின் கண்ணுக்குள்ளே விரல்விட்டு ஆட்டும் பலர் உள்ளனர்.., அதில் நீங்களும்.,யெச்சூரியும் அடக்கம்..,அங்கு செல்வது உசிதமல்ல.
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
31-ஆக-201815:46:18 IST Report Abuse
Chowkidar NandaIndiaஎன்னது, கண்ணுக்குள்ள விரல் விட்டு ஆட்டுவாரா, பார்த்து விரல் கோணிக்க போகுது. உங்க கட்சி சின்னம் வேற கை. அப்புறம் விரல் எதுவும் இல்லாம வெறும் கையை காட்ட போயி, விழற ஓட்டும் விழாம போயிட போகுது, பார்த்து....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X