சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பாரபட்சமின்றி மது விற்பனை செய்ய
ஊழியர்களுக்கு, 'டாஸ்மாக்' எச்சரிக்கை

அனைத்து நிறுவனங்களின் மது வகைகளை யும், பாரபட்சமின்றி விற்கும்படி, ஊழியர்களை, 'டாஸ் மாக்' எச்சரித்து உள்ளது.

 பாரபட்சமின்றி, மது, விற்பனை, செய்ய ,ஊழியர்களுக்கு, 'டாஸ்மாக்' ,எச்சரிக்கை

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 11 தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மது வகை கள்; ஏழு நிறுவனங்களிடம், பீர் கொள்முதல் செய்கிறது. மொத்தம் உள்ள, 4,700 கடைகளில், மாதம்தோறும் சராசரியாக, 25 லட்சம் பெட்டிகள் பீர்; 50 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனையாகின்றன.


கடந்த ஆண்டு வரை, மது வகைகள் கொள் முதலில், சசிகலா குடும்பத்தினரின், 'மிடாஸ்' நிறுவனத்திடம் இருந்து, மாதத்திற்கு, 12 லட்சம் பெட்டிகளும்; தி.மு.க., ஆதரவாளர் களின் ஐந்து

நிறுவனங்களில் இருந்து, ஆறு லட்சம் பெட்டிகளும் வாங்கப்பட்டன.இதனால், மேற்கண்ட நிறுவனங் களின், மது வகைகள், அதிகம் விற்பனைக்கு அனுப்பப்பட்டன. அவற்றை வாங்க, மது பிரியர்கள் ஆர்வம் காட்ட வில்லை. இதுவும், மது விற்பனை சரிய காரணம்.


இப்பிரச்னைக்கு தீர்வு காண, அதிகம் விரும்பி வாங்கப்படும் மதுவகைகள் தற்போது டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இருப்பினும், கடை ஊழியர்கள், குறிப் பிட்ட நிறுவனங்களின் மது வகைகளை மட்டும் விற்பதாக புகார் எழுந்துள்ளது.


இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறிய தாவது:தற்போது, அதிகம் விற்கும் மது வகைகள் வாங்கப்படுகின்றன. குறிப்பாக, மிடாசிடம், 1.50 லட்சம் பெட்டிகள் தான் வாங்கப்படுகின்றன. சில மது தயாரிப்பு நிறுவனங்கள், கடை ஊழியர்கள், மேற்பார்வையாளர்களுக்கு, பணத்தை வழங்கி, தங்களின், மது வகைகளை மட்டும் விற்கச் செய்வ தாக புகார்கள் வந்தன.

இதனால், ஊழியர்கள், குறிப் பிட்ட மது வகைகளை விற்று விட்டு,மற்றதை கடைகளில் தேக்கி

Advertisement

வைப்பது தெரிய வந்துள்ளது. எனவே, 'கிடங்கு களில் இருந்து அனுப்பப்படும் அனைத்து மது வகைகளையும், கடைகளில் அடுக்கி வைக்க வேண்டும்; அவற்றை, பாரபட்சமின்றி விற்க வேண்டும்' என, ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கடைக்கு தேவையான மது வகைகள் பட்டியல் சமர்ப்பிக்கும் போது, இருப்பு விபரம் ஆய்வு செய்யப்படும். அதில், சில மது வகைகளை, அதிகம் தேக்கி வைப்பது கண்டறியப்பட்டால், மேற்பார்வையாளர் கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prabu Ragu Raman - Chennai,இந்தியா
02-செப்-201815:54:34 IST Report Abuse

Prabu Ragu Raman25 lakhs cases, charged 30Rs extra per beer - Total black money generated per month 75000000 (7.5 crore) it is only for beer. If we count liquor it will be again another 20 crores. No bills for sales in tasmac shop, It is happening only in Government running TASMAC Shop, Best example for Government genuineness.

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-செப்-201820:54:57 IST Report Abuse

Lion Drsekar"25 லட்சம் பெட்டிகள் பீர் 50 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனையாகின்றன" மொத்தத்தில் 75 பெட்டிகள் ஒரு பெட்டிக்கு ரூபாய் 1000 முதல் 3000 வரவு அதிக விலைக்கு விற்கிறார்கள், இது உலகு அறிந்த உண்மை, இதை கணக்கிட்டால் ஒரு நாளைக்கு எத்தனை லட்சம் கோடி ???? எவனாவது கேட்கிறானா? கேட்பவன் விபத்தில் இறந்து போவான், இது ஒரு புறம் இருக்கட்டும், தலைக்கவசம் அணிந்து சென்றால் விபத்திபோது உயிர் பிழைக்கலாம் என்று ஒரு சட்டம், ஐயா, அரசாங்கத்தால் விற்கப்படும் தரமற்ற சாராயம் கிங் இன்ஸ்டிடூடில் கொடுத்து நல்ல செர்டிபிகாடே வாங்கிப்பார்த்தால் தெரியும் இவர்கள் விற்பனையால் குடும்பம் மட்டும் அல்ல மனிதனின் ஆயுள், மற்றும் உடல் பாதிக்கும், இதை தடுக்க நீதிமன்றம் முன்வராதது என் ? அவர்களில் இவர்களும் அடக்கம், அவர்களால் இவர்கள் பிழைப்பதால், எவர்களைப்பற்றியும் யாருக்குமே கவலை இல்லை, மொத்தத்தில் அவரவர்களுக்கு வரவேண்டியது வந்தால் போதும் இதுதான் ஜனநாயகம், வந்தே மாதரம்

Rate this:
chennai sivakumar - chennai,இந்தியா
01-செப்-201820:40:07 IST Report Abuse

chennai sivakumarOld wine in a new bottle. The same situation started way back in 70s not allowing premium brands manufactured in other states.

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X