பதிவு செய்த நாள் :
பிரகடனம்!
 பயங்கரவாதத்தை வேரறுக்க, 'பிம்ஸ்டெக்' ...  
ஒருங்கிணைந்த செயல் திட்டம் உருவாக்க முடிவு

காத்மாண்டு : 'உலக அமைதிக்கு சவாலாக உள்ள பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்; பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள்,நிதியுதவி செய்யும் அமைப்புகளை கண்டறிய வேண்டும்' என, 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக, ஒருங்கிணைந்த செயல் திட்டம் தயாரிக்க, மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், பிம்ஸ்டெக், நாடுகள், பிரகடனம், செயல் திட்டம், முடிவு, இந்தியா, மியான்மர், மோடி, பிரதமர், தாய்லாந்து


'பிம்ஸ்டெக்' எனப்படும், வங்காள விரிகுடா ஒட்டிய நாடுகளின் தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் நான்காவது மாநாடு, அண்டை நாடான நேபாள தலைநகர், காத்மாண்டில், துவங்கியது.இந்த அமைப்பில், இந்தியா, நேபாளம், இலங்கை, வங்கதேசம், மியான்மர், பூடான், தாய்லாந்து ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.


பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் காத்மாண்டு சென்றார். மாநாட்டை, நேபாள பிரதமர், சர்மா ஒலி துவக்கி வைத்தார்.மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது:உலக அளவில் மிகப் பெரிய அச்சுறுத்தலாக, பயங்கரவாதம் உள்ளது. 'மனித குலத்துக்கு மிகவும் ஆபத்தான பயங்கர வாதத்தை, நாம் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும். அதேபோல், போதைப் பொருள் கடத்தலையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில், மாநாட்டின் 2-வது மற்றும் இறுதி நாளான நேற்று நிறைவேற்றப் பட்ட, 18 அம்சங்கள் உடைய பிரகடனத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:பிம்ஸ்டெக் நாடுகள் உட்பட, உலகின் பல நாடுகள், பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கபட்டுள்ளன. உலக அமைதிக்கு சவாலாக விளங்கும் பயங்கரவாதத்தை,

யாரும், எதற்காகவும், எந்த காரணத்துக்காகவும் நியாயப்படுத்த முடியாது; நியாயப்படுத்தவும் கூடாது. பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும். இதற்கு, பிம்ஸ்டெக் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படும்.

பயங்கரவாத அமைப்புகள், பயங்கரவாதிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள், நிதியுதவி செய்யும் அமைப்புகள் ஆகியவற்றை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.பயங்கரவாதஅமைப்புகளுக்கு நிதியுதவி செய்யப்படுவதை தடுக்க, ஒருங்கிணைந்த செயல் திட்டம் உருவாக்க வேண்டும். அத்துடன், பயங்கரவாத அமைப்புகளில் ஆட்கள் சேர்வதை தடுப்பதுடன், எல்லை தாண்டிய பயங்கவாதத்தை ஒழிக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு அடுத்தபடியாக, போதைப் பொருள் கடத்தல், பெரும் சவாலாக உள்ளது. இதை தடுக்க, பிம்ஸ்டெக் நாடுகள் ஒருங்கிணைந்து, ஒத்துழைப்புடன் செயல்படும். இதற்காக, பிம்ஸ் டெக் நாடுகளின், உளவு, பாதுகாப்பு அமைப்பு அதி காரிகள், அடிக்கடி சந்தித்து, தகவல்களை பரிமாறிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. பிம்ஸ்டெக் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவும் உறுதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிம்ஸ்டெக் நாடுகளில், வறுமை ஒழிப்பு பெரும் சவாலாக உள்ளது. இந்த நாடுகளில், வறுமை ஒழிப்பு திட்டங்களில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, வளர்ச்சியின் பலன் களை பகிர்ந்து கொள்ளவும், திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பிரகடனத்தில் கூறப்பட்டு உள்ளது. மாநாட்டின் முடிவில், பிம்ஸ்டெக் தலைவர் பொறுப்பை, இலங்கை அதிபர், சிரிசேனாவிடம், நேபாள பிரதமர், சர்மா ஒலி ஒப்படைத்தார். பிம்ஸ்டெக் நாடுகள், மின்சக்தி துறையில் ஒருங் கிணைந்து செயல்படும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தம்ஒன்றும்கையெழுத்தானது.

போக்குவரத்து இணைப்புஒருங்கிணைந்த, நீடித்த வளர்ச்சி பெற, பிம்ஸ்டெக் நாடுகளிடையே போக்குவரத்து இணைப்பை செயல் படுத்தும் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற,

Advertisement

மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.சாலை, ரயில்வே, நீர் வழி, கடல் வழி, வான் வழி ஆகியவை மூலம்,பிம்ஸ்டெக் நாடுகளிடையே போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என, இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கேட்டுக் கொண்டன. இந்த திட்டத்தை நிறைவேற்ற, ஆசிய வளர்ச்சி வங்கி ஆதரவு தந்துள்ளதற்கு, மாநாட்டில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

தலைவர்களுடன் மோடி சந்திப்புபிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, இதன் ஒரு பகுதியாக, இலங்கை அதிபர், சிரிசேனா, வங்கதேச அதிபர், ஷேக் ஹசீனா ஆகியோரை, நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி அவர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில், தாய்லாந்து பிரதமர், பிரயுத் சனோசா, மியான்மர் அதிபர், வின் மியின்ட், பூடான் அரசின் தலைமை ஆலோசகர், டாஷோ வாங்சுக் ஆகியோரை பிரதமர் மோடி, நேற்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புகள் குறித்து, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், ராவேஷ் குமார் கூறிய தாவது:தாய்லாந்து பிரதமருடன், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி பிரதமர் மோடி பேசினார்.இந்தியா - மியான்மர் இடையே வர்த்தகம், எரிசக்தி உட்பட பல்வேறு துறை களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றி, அந்நாட்டுஅதிபருடன், மோடி பேசினார். பூடானு டனான நம் நட்பை மேலும் வலுப் படுத்தும் நோக்கில், அந்நாட்டின் தலைமை ஆலோசகரு டனும், பிரதமர் பேசினார். இவ்வாறு கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasamy - Erode ,இந்தியா
01-செப்-201819:01:25 IST Report Abuse

Ramasamyபன்னி மடையார் கருத்து , ஆஹா , ஓஹோ . International லெவெலுக்கு போய்ட்டிங்க. கும்புடறேன் சாமி .

Rate this:
Ramasamy - Erode ,இந்தியா
01-செப்-201818:55:41 IST Report Abuse

Ramasamyஅமேரிக்கா லண்டன் ஜெர்மனி எல்லாம் நம்மாள வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க போலிருக்கு அதான் பிம்ஸ்டெக் நாடுகளுக்கு டூர் போட்டுட்டார்// ராகுல் பப்பு மாதிரி , இந்த அரை கிறுக்கு பச்சைக்கு Modi போபியா வியாதி போல. சீனாவில் ஒரு நாளைக்கு எவ்வோளோ பண்ணுகிறார்கள் , இந்தியாவில் ஒண்ணுமே நடக்கலே என்று 70 வருடம் ஆட்சியில் இருந்த வாரிசு வாந்தி ராகுல் பப்பு ( முதலை கண்ணீர் ) அழுவது போல இருக்கு இந்த கருத்து.

Rate this:
01-செப்-201813:25:18 IST Report Abuse

MurugeshsivanBjpOddanchatramஅமெரிக்கா ஜெர்மனி எல்லாம் போனாத்தான் ஏத்துக்குவீகளோ....லண்டன் ஜெர்மன் எல்லாம் போன ராகுல் எந்த நாட்டுக்கு பிரதமர்?

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X