கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
  தகுதி,   எம்.எல்.ஏ.,  தீர்ப்பு, சென்னை ஐகோர்ட், அதிமுக, தினகரன், அமமுக, சத்தியநாராயணன்

சென்னை:அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப் பட்டதை எதிர்த்த வழக்கில், இருதரப்பு வாதத்தை, மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முடித்து வைத்தார். தேதி குறிப்பிடாமல், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், முடிவு எப்படி இருக்குமோ என தெரியாமல், அ.தி.மு.க., மற்றும் தினகரனின், அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள், 'திக் திக்' நிலையில், எதிர்பார்ப்புடன் உள்ளன.

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட, 18 பேர், கவர்னரை நேரில் சந்தித்து, கடிதம் அளித்தனர். கடிதத்தில், அரசியலமைப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கோரியிருந் தனர். இதையடுத்து, 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ௧௮ பேரும், மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை, தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய,

'முதல் பெஞ்ச்' விசாரித்தது. 'தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும்' என, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டார். 'சபாநாயகரின் உத்தரவு செல்லாது' என, அதை ரத்து செய்து, நீதிபதி சுந்தர் உத்தரவிட்டார்.

வழக்கில், மாறுபட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டதால், முடிவு ஏற்பட வில்லை. இதை யடுத்து, வழக்கை விசாரிக்க, மூன்றாவது நீதிபதியாக, எம்.சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்டோர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், மூன்றாவது நீதிபதியை நியமித்தது. இதையடுத்து, நீதிபதி சத்தியநாராயணன், வழக்கை விசாரிக்க துவங் கினார். விசாரணை, 2018ஜூலை, 21ல் துவங்கியது.

தகுதி நீக்கம்

செய்யப்பட்டோர் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், மோகன் பராசரன், பி.எஸ்.ராமன், வழக்கறி ஞர் ராஜா செந்துார் பாண்டியன்; சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலர் தரப்பில், மூத்த வழக்கறிஞர், ஆரியமா சுந்தரம், முதல்வர் சார்பில், மூத்த வழக்கறிஞர், சி.எஸ். வைத்தியநாதன், கொறடா சார்பில், மூத்த வழக்கறிஞர், முகுல் ரோத்தகி ஆஜராகினர்.

இறுதி வாதம், நேற்று நடந்தது. சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஆரியமா சுந்தரம் வாதாடியதாவது:போதிய அவகாசம் அளித்த பின், ௧௮ எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டார். இதில், இயற்கை நீதி எதுவும் மீறப்பட வில்லை. முதல்வரை மாற்றும்

அதிகாரம் கவர்னருக்கு இல்லை என தெரிந்தும், கடிதம் அளித்துள்ளனர். இவர்களை, தகுதி நீக்கம் செய்தது சரியே. சபாநாயகரின் உத்தரவில் தவறு இல்லை.இவ்வாறு அவர் வாதிட்டார்.

தகுதி நீக்கம் செய்யப் பட்டோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பி.எஸ்.ராமன் வாதாடிய தாவது:முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்த தால், ஆட்சியை கவிழ்க்க முயற்சித்ததாக கூற முடியாது. சபாநாயகரின் உத்தரவு, உள்நோக்கம் கொண்டது.இவ்வாறு அவர் வாதிட்டார்.

இரு தரப்பு மூத்த வழக்கறிஞர்களின் வாதங்களும், நேற்று முடிந்தன. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், நீதிபதி சத்தியநாராயணன் தள்ளி வைத்தார். மூன்றாவது நீதிபதி முன்,12நாட்கள் விசாரணை நடந்தது. இந்நிலையில், தீர்ப்பு எப்போது வரும்; தங்களுக்கு சாதகமாக வருமா; பாதக மாக வருமா; ஆட்சி நீடிக்குமா என, தெரியாமல், அ.தி.மு.க., மற்றும் தினகரனின், அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள், 'திக் திக்' நிலையில், எதிர்பார்ப்புடன் உள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-செப்-201820:45:42 IST Report Abuse

Lion Drsekarமக்கள் வரிப்பணத்தில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் மன்னிக்கவும் திரியும் இவர்களுக்காக இவ்வளவு விளம்பரம், எட்டி மரம் காயாதிருத்தேன்னா காய்த்துப்பயன் பயன் என்ன, இதுதான் இவர்கள் மீண்டும் வந்தாலும், அசிங்கம், வந்தே மாதரம்

Rate this:
muthu - trz,இந்தியா
01-செப்-201820:38:21 IST Report Abuse

muthuநீதி வழங்க ஏன் இவ்வளவு காலம் ஆகிறது, இதென்ன விவகாரத்து வழக்கா? சமரசம் செய்ய.

Rate this:
karthi - chennai,இந்தியா
01-செப்-201818:24:23 IST Report Abuse

karthiஒரு விஷயம் யாருமே புரிந்து கொள்ளவில்லை. திமுக நினைத்தால் மட்டுமே இந்த ஆட்சி முடிவுக்கு வரும். YES . பாஜக திமுகவின் கூட்டணிக்காக காத்துக்கொண்டு இருக்கிறது. கூட்டணிக்கு திமுக ஒத்துக்கொண்டால் அடுத்த நிமிடமே இந்த ஆட்சி கவிழ்க்கப்படும். இப்பொழுது உள்ள பாஜக எதிர்ப்பு அலையில் பாஜகவுடன் கூட்டணிக்கு திமுக ஒத்து கொள்ளாது. மேலும், கோர்ட் தீர்ப்பு எப்படி வந்தாலும் மேல்முறையீடு இருக்கிறது. மேலும், பாஜகவுக்கு லாபம் இல்லை என்றால், இந்த ஆட்சியை பாஜக கலைக்காது. இந்த ஆட்சிக்கு 2019 பாராளுமன்ற தேர்தல் வரை எந்த பிரச்சினையையும் இல்லை. மேலே ஓரிருவர், தினகரன் பற்றி எழுதி உள்ளார்கள். சசிகலா- தினகரன் கட்சிக்கு தமிழகத்தில் எந்த விதமான ஆதரவும் இல்லை. சசிகலா மேல் பொதுமக்களுக்கு இன்னும் வெறுப்பு அதிகமாக இருக்கிறது. அவர்கள் ஜாதி மக்கள் அதிகம் உள்ள தொகுதியில் மட்டும் ஓரளவு ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அதை வைத்து அவர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது.

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X