படம் பார்த்தேன்...படம் எடுக்கிறேன்...: மகிழ்ச்சியில் மகாவிஷ்ணு

Added : செப் 02, 2018 | |
Advertisement
''நான் மதுரை அலங்காநல்லுாருகாரன் தான். அப்பா டெய்லர். கஷ்டப்பட்ட குடும்பம். திருப்பூரில் படிப்பை முடிச்சேன். 14 வயதிலேயே 'டிவி' நிகழ்ச்சிகளில் 'ஸ்டாண்ட் ஆப் காமெடி' பண்ண ஆரம்பிச்சேன்'' என தனது பிளாஷ்பேக்கை ஒரு படமாகவே சொல்ல ஆரம்பிக்கிறார் மகாவிஷ்ணு...'ரைட்டர் இமேஜினன்ஸ்' என்ற சினிமா வினியோக கம்பெனியை துவக்கி 'துருவங்கள் 16' என்ற படத்தை வினியோகித்து சினிமா
படம் பார்த்தேன்...படம் எடுக்கிறேன்...: மகிழ்ச்சியில் மகாவிஷ்ணு

''நான் மதுரை அலங்காநல்லுாருகாரன் தான். அப்பா டெய்லர். கஷ்டப்பட்ட குடும்பம். திருப்பூரில் படிப்பை முடிச்சேன். 14 வயதிலேயே 'டிவி' நிகழ்ச்சிகளில் 'ஸ்டாண்ட் ஆப் காமெடி' பண்ண ஆரம்பிச்சேன்'' என தனது பிளாஷ்பேக்கை ஒரு படமாகவே சொல்ல ஆரம்பிக்கிறார் மகாவிஷ்ணு...

'ரைட்டர் இமேஜினன்ஸ்' என்ற சினிமா வினியோக கம்பெனியை துவக்கி 'துருவங்கள் 16' என்ற படத்தை வினியோகித்து சினிமா துறையில் காலடி எடுத்து வைத்த இவருக்கு வயது ஜஸ்ட் 24தான். இன்று யாருடைய உதவியுமின்றி தானே தயாரித்து தனது முதல் படத்தை டைரக்ட் செய்து கொண்டிருக்கிறார் இந்த குறும்புக்கார இளைஞர். படத்தின் தலைப்பு 'நான் செய்த குறும்பு'.

* 24 வயதில் இது எப்படி சாத்தியமானது..?'எனக்கு சினிமான்னா போதும். ஒரு நாளைக்கு நாலைந்து படங்கள் ரிலீஸ் ஆனாலும் அன்றைக்கே அந்த படங்களை பார்த்துவிடுவேன். அந்தளவிற்கு சினிமா வெறியன்னே என்னை சொல்லலாம். படம் பார்த்து பார்த்தே எந்த மாதிரி டைரக்ட் பண்ணணும்னு தெரிஞ்சுகிட்டேன். நல்ல ரசிகனால் மட்டும் தான் நல்ல படைப்பை தரமுடியும் என்பது எனது கருத்து. படம் பார்த்த அனுபவத்தால 2 குறும்படங்களை எடுத்தேன். நல்லா 'ரீச்' ஆச்சு. அடுத்து சினிமாதானே. எல்லோரும் போல் நானும் கண்ட கனனை நனவாக்க சினிமா துறையில் 'என்ட்ரி' ஆனேன். வித்தியாசமான கதையை படமாக எடுக்கணும்னு நினைச்சேன். 'நான்செய்த குறும்பு' படத்தை எடுக்கிறேன். போஸ்ட் புரொடக் ஷன் போயிட்டு இருக்கு.

* அதென்ன நான் செய்த குறும்பு?'வயிற்று வலியும், அவஸ்தையும் அவன் அவனுக்கு வந்தா தான் தெரியும்' என்பார்கள். அது தான் கதை கரு. பெண்கள் கர்ப்பமாவது தெரிந்தது தான். அதுவே ஒரு ஆண் கர்ப்பம் ஆனால்... என்னவெல்லாம் நடக்கும், எந்த மாதிரியான பிரச்னைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும் என்பது தான் கதை. காமெடி, காதல் கலந்த குடும்ப படம். கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரன் இதில் நடிக்கிறார். ஹீரோயின் அஞ்சுகுரியன்.

* அடுத்து நீங்களும் ஹீரோ தானா?காலமும், சூழ்நிலைகளும் ஒத்து வந்தால் நடிக்க வேண்டியது தான். ஆனா... இன்னும் நாலு கதைகள் கைவசம் தயாரா இருக்கு. ஸ்கிரிப்ட் அசோசியேஷனிலும் பதிவு செஞ்சிட்டேன். அதை எல்லாம் எடுத்து முடித்த பிறகு நடிப்பது பற்றி யோசிக்கணும்.

* குடும்பத்தினர் எப்படி 'பீல்' பண்றாங்க?நான் தான் இப்ப 'பீல்' பண்ணிட்டு இருக்கிறேன். நான் நல்லா வரவேண்டும் என அப்பா ரொம்பவே ஆசைப்பட்டார். இரண்டு மாதத்திற்கு முன் விபத்து ஒன்றில் இறந்துபோனார். இது எதிர்பார்க்காத ஒன்று. நான் கஷ்டப்பட்ட போதெல்லாம் கூடவே இருந்தவர், இன்று படத்திற்கு பூஜை போடும்போது அதை காண அவரில்லை என கண் கலங்கினார் மகாவிஷ்ணு.
இவரிடம் பேச 97877 77177

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X