'மைக்ரோ பயாலாஜி துறையில் எம்.எஸ்சி., எம்.பில்., முடித்து வேலைக்கு போக வேண்டும்' என்பதே கனவு. அதே சமயம் அளவில்லாத சினிமா ஆர்வம் என்னை ஆட்கொண்டுவிட்டது என்கிறார் நடிகர் ஜெயசிந்த்,33. பல இளைஞர்களை போல நெல்லையில் இருந்து சென்னைக்கு பயணமானவர், நடிகரானதை விவரிக்கிறார். அவரது கதையை கேளுங்களேன்:
சினிமாக்களை பார்த்து பழகிய எனக்கு படிப்பு முடித்ததும் நடிப்பில்தான் நாட்டம் போனது. 2008ல் சென்னையில் வேலை செய்த போது ஞாநி எழுதி, பிரசன்னா ராமசாமி இயக்கிய 'டிவி' நாடகத்தில் நடித்ததே சினிமாவுக்கான வாய்ப்பை தந்தது.
2013ல் வெளியான டைரக்டர் மித்துன்மாணிக்கத்தின் 'ஐவர் ஆட்டம்' படத்தில் புட்பால் கோச்சாக வில்லன் கேரக்டரில் நடித்துள்ளேன். பின்னர் சத்தியபிரபாஸ் இயக்கிய 'யாகாவாராயினும் நாகாக்க', எம்.ஏ.பாலா இயக்கிய 'கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்' படங்களில் வில்லனானேன்.
எனது முகஅமைப்பு கோபமான கேரக்டருக்கு பொருந்தி போவதால் வில்லன் வாய்ப்பாகவே வருகிறது. நடிப்பு என வந்தால் கதாநாயகன், வில்லன் என கருதாமல் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்பதே ஆசை. சென்னையில் செயல்படும் மேடை என்ற குழுவோடு இணைந்து நாடகங்களை இயக்கியும், நடித்தும் வருகிறேன். குறும்படங்களிலும் நடித்துள்ளேன்.'வல்லமை தாராயோ' படத்தை இயக்கிய மதுமிதாவின் 'கறுப்பு துரை' படத்தில் காமெடி ரோலில் நடித்துள்ளேன். 'சீயான்கள்' என்ற படத்திலும் நடித்து வருகிறேன்.
பைட் மாஸ்டர் பவர்பாண்டியன், பிட்னஸ் மாஸ்டர் ரியாஸ்சிடம் பயின்று வருகிறேன். நடிகர் சூர்யா, எந்த ரோலாக இருந்தாலும் அதற்கு மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வார் என்பர். அதனால் அவரே எனக்கு இன்ஸ்பிரேஷன். சினிமாவில் ஜொலிக்க கடும் பயிற்சி, முயற்சியில் ஈடுபட்டுள்ளேன், என்றார்.
இவரை பாராட்ட jai3682@gmail.com தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE