ஒழுக்கமாக வாழ சொன்னால் சர்வாதிகாரி என முத்திரை: பிரதமர் வேதனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஒழுக்கமாக வாழ சொன்னால் சர்வாதிகாரி என முத்திரை: பிரதமர் வேதனை

Updated : செப் 02, 2018 | Added : செப் 02, 2018 | கருத்துகள் (67)
Advertisement
துணை ஜனாதிபதி, வெங்கையாநாயுடு, பிரதமர் மோடி

புதுடில்லி: ஒழுக்கத்தோடும் இருங்கள் என சொல்பவரை சர்வாதிகாரி என முத்திரை குத்துகின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


புத்தக வெளியீடு

பாரதிய ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தை, பிரதமர் மோடி வெளியிட்டார். “Moving on…Moving forward: A year in office” என்ற தலைப்பிலான இந்த புத்தகம் 245 பக்கங்களை கொண்டுள்ளது.


சித்தரிப்பு

விழாவில் பிரதமர் பேசுகையில், வெங்கையா நாயுடு பண்பானவர். ஆனால், இன்றைய நிலையில் பணபோடு இருங்கள் எனக்கூறினால், அது ஜனநாயகத்திற்கு விரோதம் என சொல்கின்றனர். பண்போடும், கட்டுப்பாட்டோடும், ஒழுக்கத்தோடும் இருங்கள் என சொல்பவரை சர்வாதிகாரி என முத்திரை குத்துகின்றனர். எந்த வேலை செய்தாலும், அதனை நேர்மையான முறையில் சிறப்பாக செய்து முடிப்பார். 10 ஆண்டுகள் மாணவர் அரசியலிலும், 40 ஆண்டுகள் தேசிய அரசியலிலும் இருந்தவர். மனதளவில் அவர் விவசாயி. விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் குறித்து சந்திப்பார். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, வெங்கையா நாயுடுவிற்கு அமைச்சர் பதவி வழங்க விரும்பினார். தனக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பதவி வேண்டும் எனக்கூறி வெங்கையா பெற்று கொண்டார் என்றார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், துணை ஜனாதிபதி அலுவலகத்திற்கு, அரசியல் மற்றும் நிர்வாக அனுபவத்தை வெங்கையா நாயுடு கொண்டு வந்துள்ளார். இது கடந்த ஒரு வருடத்தில் எதிரொலித்தது. இருப்பினும், அவரிடமிருந்து இன்னும் சிறப்பானது வரவேண்டும் என்றார்.


இயல்பாக இயங்காத பார்லி.,


துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசுகையில், விவசாயத்திற்கு நீடித்த ஆதரவு தேவைப்படுகிறது. அனைவர் மீதும் அக்கறை செலுத்தும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, விவசாயம் குறித்தும் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால், விவசாயத்தை விட்டு மக்கள் விலகிவிடுவர். பார்லிமென்ட் இயல்பாக இயங்காதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. உலக வங்கி, உலக பொருளாதார அமைப்பு அனைத்தும் இந்திய பொருளாதாரம் குறித்து தரும் அறிக்கைகள் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட வேண்டும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
03-செப்-201803:00:51 IST Report Abuse
Anandan உங்க கட்சிக்காரங்க பார்க்க கூடாத காணொளியை சட்டசபையில் பார்த்த போது அது ஒழுக்கக்கேடாக உங்களுக்கு தெரியவில்லை?
Rate this:
Share this comment
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
02-செப்-201821:47:53 IST Report Abuse
K.n. Dhasarathan ஐயா பிரதமரே உண்மையை பேசுங்க , மாதந்தோறும் நீங்கள் பேசும் மனதோடு பேசும் நிகழ்ச்சியில் புள்ளி விபரம் ஏதும் உண்மையில்லை , புள்ளியியல் துறையும் உண்மையை கொடுப்பதில்லை என்று பரவலாக பேசப்படுவது உங்கள் காதுக்கு வந்ததா ? பொய் கணக்குகள் நிற்காது , மக்களுக்கு உண்மை தெரிய வரும் போது கிடைக்கும் அடி மிக பலமாக இருக்கும் , மீண்டும் எழுந்துவர பலகாலம் பிடிக்கும் . எனவே உண்மையே பேசுங்க ./
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
03-செப்-201802:39:11 IST Report Abuse
Anandanவேலை வாய்ப்புகள் பற்றி எடுத்த புள்ளி விவரங்கள் எதிர் கட்சிகள் குறை சொன்னதைவிட மோசமாய் இருப்பதை அறிந்து நடுவண் அரசு அதிர்ச்சி. இருந்தாலும் பொய்யான புள்ளி விவரங்களை சொல்லி வருகின்றனர். ஒழுக்கம் பற்றி போதிக்கும் இவர்கள் போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் என்று சித்தரிக்கின்றனர். பலரை மாட்டுக்கறி வைத்திருக்கிறாய் என்று கொன்றனர். இதெல்லாம் ஒழுக்கம் சீர்கேடு என்று பிரதமருக்கு தெரியாது. பணமதிப்பிழப்பின் பொது நோட்டுகள் அளவு குறைந்தால் அதற்க்கு காலிப்ராட் செய்ய வேண்டும் என்ற விவரம் கூட தெரியாமல் மக்களை 3 நாட்கள் அதிகமாக பணம் இன்றி அவதிப்பட வைத்தனர். எதிர்கட்சியினரையும் மாற்று கருத்து கொண்டுள்ளவர்களையும் பட்ட பெயர் ஏளன பேச்சு கொண்டு யேசுகின்றனர் அதெல்லாம் ஒழுக்கம் இவர்கள் அகராதியில். ராகுலை கிண்டல் செய்து பிரதமர் செய்த அங்க சேஷ்டைகள் எந்த பிரதரும் இதுவரை செய்யாதது, இவரால் அந்த பதவிக்கே இழுக்கு....
Rate this:
Share this comment
Cancel
N Parthiban - Thanjavur,இந்தியா
02-செப்-201821:20:25 IST Report Abuse
N Parthiban During sterlite agitation we saw lot of new faces surfaced. Like that till 2019 election bjp has to face these kind of radicals. In spite of looting money by UPA alliance members they ridicule modi and bjp that means democracy prevails in India.
Rate this:
Share this comment
yila - Nellai,இந்தியா
03-செப்-201800:20:28 IST Report Abuse
yilaRubbish...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X