அள்ளிக்கோங்க! இலவசங்களை வாரி இறைத்த சந்திரசேகர ராவ் Dinamalar
பதிவு செய்த நாள் :
அள்ளிக்கோங்க!
இலவசங்களை வாரி இறைத்த சந்திரசேகர ராவ்
முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடத்த வியூகம்

ஐதராபாத் : தெலுங்கானாவில், முன்கூட்டியே சட்டசபைத் தேர்தலை நடத்த திட்டமிட்டு, முதல்வர், சந்திரசேகர ராவ் காய்களை நகர்த்தி வருகிறார். இதையொட்டி, ஐதராபாத் அருகே, நேற்று பிரமாண்ட பேரணியை நடத்தியதுடன், விவசாயிகள், இளைஞர்கள், பெண்களுக்கு ஏராளமான இலவசம் மற்றும் சலுகை திட்டங்களையும் அறிவித்தார்.

அள்ளிக்கோங்க,இலவசங்களை,வாரி இறைத்த,சந்திரசேகர ராவ்


தெலுங்கானா மாநிலத்தில், அடுத்தாண்டு, லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், முன்கூட்டியே சட்டசபைத் தேர்தலை நடத்தும் முடிவில், முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்றாவது அணி :


காங்., - பா.ஜ., கட்சிகள் இடம் பெறாத, தேசிய அளவிலான மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் தீவிரம் காட்டி வருகிறார். இந்த அணிக்கு, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோர் தலைமையேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால், அவர்களை விட, தனக்கு தான் அதிக செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபித்து காட்டுவ தற்காக, முன்கூட்டியே தேர்தல் நடத்தி, அதில் வெற்றி பெறும் முயற்சியுடன், இந்த நடவடிக்கைகளில் அவர் இறங்கியுள்ளார். இதற்காக, சட்டசபையை கலைக்கும் முடிவை, விரைவில் அவர் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், இந்தாண்டு முடிவதற்குள், தெலுங்கானாவில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் சூழல் உருவாகி உள்ளது.

தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில், முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டு, காய்களை நகர்த்தி வருகிறார். நேற்று முன்தினம், மின்துறை ஊழியர்களுக்கு, 35 சதவீத சம்பள உயர்வை அறிவித்த முதல்வர், 'மின்துறை ஊழியர்களின் விருப்பங்களை மறக்க மாட்டேன்; அதேபோன்று, அவர்களும் என்னை மறக்கக் கூடாது' என்றார்.

தெலுங்கானாவில், கடந்த சில நாட்களாக, போலீஸ் அதிகாரிகள் அதிகளவில் இடமாற்றம்

செய்யப்பட்டு வருகின்றனர். தேர்தல் அறிவிக்கப்பட்டால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்து, அதன்பின், அதிகாரிகளை மாற்ற முடியாததால், இப்போதே இத்தகைய மாற்றங்களை, முதல்வர் சந்திரசேகர ராவ் செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் உருவாகி, நான்கு ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், ஐதராபாத் அருகே, நேற்று, 2,000 ஏக்கர் இடத்தில், பிரமாண்ட பேரணியை, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி நடத்தியது. 'பிரகதி நிவேதனா' என, பெயரிடப்பட்ட இந்த பேரணிக்கு முன், தெலுங்கானா மாநில அமைச்சரவை கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைகள், தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து, பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதில், லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். நேற்றைய பேரணியின்போது, விவசாயிகள், பெண்கள், வேலையில்லா இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை, சந்திரசேகர ராவ் அறிவித்தார்.

'விவசாயிகளுக்கு, ஒவ்வொரு பருவத்திலும், 1 ஏக்கருக்கு, 4,000 ரூபாய் பணம், அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்' என, சந்திரசேகர ராவ் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட, 12 ஆயிரம் கோடி ரூபாயில், 6,000 கோடி ரூபாய், ஏற்கனவே விவசாயிகளின் வங்கி கணக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த, 2014 தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், விவசாயிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என, தெலுங்கானா அரசு ஏற்கனவே அறிவித்தது. நேற்றைய பேரணியில், விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகை, இரண்டு லட்ச ரூபாயாக உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மானிய விலை :


மேலும், முதியோர், விதவை, மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத் தொகையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும், வேலை இல்லாத இளைஞர்கள், பெண்களுக்கு, கடன்கள், தொழில் செய்வதற்கு மானிய விலையில் பொருட்கள் வழங்க உள்ளதாகவும், முதல்வர் அறிவித்தார். ஆளும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் பிரமாண்ட பேரணிக்கு, தெலுங்கானா மாநில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Advertisement'முதல்வர் சந்திரசேகர ராவ் பதற்றத்தில் உள்ளார். அதனால், பிரமாண்ட பேரணிகளை நடத்தி வருகிறார். இந்த பேரணிகளில், பல்வேறு இலவச திட்டங்களை அவர் அறிவித்து வருகிறார்' என, எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். 'தெலுங்கானா அரசு, சமீப காலமாக அறிவித்து வரும் இலவச திட்டங்களால், அரசுக்கு, கூடுதலாக, 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்' என, நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

'25 லட்சம் பேர் பங்கேற்பு'

தெலுங்கானா தலைநகர், ஐதராபாதில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, நேற்று நடத்திய பிரமாண்ட பேரணியில், 25 லட்சம் பேர் பங்கேற்றதாக, அந்த கட்சி வட்டாரங்கள் கூறின. நேற்றைய பேரணிக்காக, மாநிலத்தின், 31 மாவட்டங்களில் இருந்து, பஸ், வேன், டிராக்டர், கார்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் வந்தபடி இருந்தன. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், மோட்டார் பைக்குகளில், பேரணி மேடையை சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்தனர். ஐதராபாதிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும், முதல்வரின், 'கட் - அவுட், பேனர்'கள் வைக்கப்பட்டிருந்தன.


எங்கும் இளஞ்சிவப்பு!

தெலுங்கானாவில், நேற்று, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தொண்டர்கள், இளஞ் சிவப்பு நிற ஆடையுடன் பேரணியில் பங்கேற்க திரண்டதால், ஐதராபாத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், எங்கும், இளஞ்சிவப்பு நிறத்தையே காண முடிந்தது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் பேரணியை நடத்த, ரங்கா ரெட்டி மாவட்டத்தில், 2,000 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், பேரணி நடைபெறும் பகுதியில் விரிக்கப்பட்டிருந்த கம்பளங்கள் நனைந்தன. இருப்பினும், மழையை பொருட்படுத்தாது, ஏராளமான தொண்டர்கள், பேரணியில் பங்கேற்றனர். பேரணி பகுதியிலும், ஐதராபாத் நகரிலும், இளஞ்சிவப்பு நிறத்தில் பிரமாண்ட பேனர்களை காண முடிந்தது.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
03-செப்-201823:39:32 IST Report Abuse

Sathish இதென்ன காட்டுமிராண்டி கூட்டமா? தமிழ்நாடு தேவல போலிருக்கே.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-செப்-201822:26:30 IST Report Abuse

Pugazh Vஒனறரைக் கோடிப்பேருக்கு சமையல் வாயு இணைப்பை இலவசமாக மோடி அறிவித்தபோது இவர்கள் எங்கே போய் இருந்தார்களாம். 2020 ஆம் ஆண்டு க்குள் லட்சக்கணக்கான.இலவச வீடுகள். மோடி அரசு மட்டுமே இலவசங்களை அறிவிக்கலாமா? என்ன மடத்தனம் இது.

Rate this:
Anandan - chennai,இந்தியா
03-செப்-201821:58:18 IST Report Abuse

Anandanதெலுங்கானா ஆட்கள் இவர்கள் நல்ல ஆட்சி தருகினர் என்று சொன்னாங்க ஆனா இவரு இலவசத்தய் அள்ளி விடுறாரு. எல்லாம் வந்தது ஒரே குட்டையில் இருந்துதானா?

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X