பேச்சுரிமை விவாதம் நல்ல துவக்கம்!| Dinamalar

பேச்சுரிமை விவாதம் நல்ல துவக்கம்!

Added : செப் 02, 2018
Advertisement

பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவை, அரசியல் அமைப்பு சட்ட உரிமையின் கீழ் ஜனநாயகத்தில் உள்ள வளமான அம்சமாகும்.ஆனால், சமீபத்தில் மஹாராஷ்டிரா அரசு, அறிஞர்கள் என்று கருதப்பட்ட சிலரை கைது செய்தது பெரிய விவாதமாகியிருக்கிறது. அறிஞர்கள் என்பவர்கள் பேச்சுரிமை, கருத்து உரிமை, எழுத்துரிமைக்கு சொந்தக்காரர்கள் என்றாலும், இந்தியா போன்ற வரலாறு அதிகம் உடைய நாட்டில், விளக்கத்தில் வர வேண்டிய காலம் வந்திருக்கிறது.கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் சிந்தனையாளர் வரவரராவ், சுதா பரத்வாஜ், நவல்கார் ஆகியோர் சிறையில் இல்லை. சுப்ரீம் கோர்ட் அதிரடி காரணமாக, வீட்டிற்கு திரும்ப அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் போலீஸ் காவலில் இருப்பர். இது ஒரு புதிய உத்தி.'இந்த பேரறிஞர்கள், நக்சல் என்ற போராட்ட சிந்தனைக்காரர்கள் தவிர, தடை செய்யப்பட்ட, மாவோயிஸ்ட் அல்ல' என்ற விளக்கம் உள்ளது. அதையும் தவிர, முதற்கட்டமாக, போலீசார், சுப்ரீம் கோர்ட் வழக்கில் வைத்த ஆவணங்களை வைத்து, இவர்கள் கைதுக்கு வழி இல்லை. ஆனால், ஒவ்வொரு தடவையும் வழக்கு தொடர்ந்து நடக்கும் போது, அடுத்தடுத்த குற்றப் பத்திரிகைகளை வைப்பது, இந்திய போலீஸ் பின்பற்றும் கிரிமினல் சட்டத்தில் உள்ளது.பொதுவாக, இனி வீட்டு காவலில் இருப்பது, சிறை வாழ்க்கை இல்லை. ஆனால், அவர்களை சந்திக்க எளிதாக, மற்றவர்கள் வரமுடியாது; போனில் பேசுவதும் கண்காணிக்கப்படலாம். ஏனெனில், நாடெங்கும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மத்திய அரசால் முடக்கப் பட்டன. அவை சேகரிக்கும் பணம், போராட்டங்கள் அல்லது அரசு முயற்சிக்கும் பாமர மக்கள் வசதிகளை முடக்க, தவறான தகவல்களை பரப்பு கின்றன என்பது நிரூபணமாகி இருக்கிறது.அதேபோல, மஹாராஷ்டிராவில், பீமாகோரேகான் என்ற தலித் இயக்கத்தினரை துாண்டும் செயலில் ஈடுபட்டதன் பின்னணியில் இருப்பவர்கள், அந்த மக்களுக்கு சிறிதும் தொடர்பில்லாத வர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.இடதுசாரி சிந்தனை என்பதற்கும், 'நக்சல் ஆதரவு அல்லது மாவோ ஆதரவு' என்பதற்கும் அதிக வித்தியாசம் உண்டு. இனி, இவ்வழக்குகள் கோர்ட்டில் அலசப்படும் போது, போலீசார் வைக்கும் சில ஆவணங்கள் பல விஷயங்களை அம்பலப்படுத்தலாம். வழக்கு பிசுபிசுத்து, இவர்கள் தனிப்பட்ட அறிஞர்கள் என்றால், இவர்கள் மத்திய அரசை விமர்சித்தது சரி என்றாகும்.இம்மாதிரி சிந்தனையாளர்கள், தங்களுக்கு பிடித்த கட்சிகளில் சேர்ந்து வெற்றி பெற்று, அதனடிப்படையில் தங்களது இஷ்டப்படி பேசினால், அது ஜனநாயகமாகும். குஜராத்தை சேர்ந்த இளைய, எம்.எல்.ஏ., ஜிக்வானி, நாட்டின் தலித் காவலராக பேசுகிறார். தனது தவறான வாதங்களை மறைக்க, புத்தர் பெருமானுக்குள் ஒளிந்து கொள்கிறார். அப்படி இருக்கும் போது, 'இந்துத்வா' பேசும் சக்திகளை மட்டும் ஜனநாயக விரோதம் என்று எப்படி முத்திரை குத்துவது?முன்பு, இந்திரா பிரதமராக இருந்த போது, அவருக்கு வழிகாட்டும் விதமாக, கம்யூனிச சிந்தனையாளரும் அறிஞருமான மோகன் குமார மங்கலம், அவருடன் இணைந்தார். விளைவு, காங்கிரசில், அதிக சோஷலிச சிந்தனை என்ற பெயரில், மார்க்சிய சிந்தனை பரவியது. இன்று அச்சிந்தனைக்கு எதிர்ப்பு வரும் காலமாகி விட்டதால், அறிஞர்களுக்கு ஆபத்து என்ற வாதம் வந்திருக்கிறது.துாய அறிஞர்கள் புத்தர்களை மறுப்பதும்இல்லை. காந்தி கூறிய ராமராஜ்யம் வர வலியுறுத்துவதும் இல்லை என்பதை அறிய வேண்டும். ஆனால், கலாசார விஷயங்கள் என்றுமே நமது அரசியலில் காலம் காலமாக நுழைந்ததில்லை என்பது வரலாறு.அரசியல் சட்டம், அதற்கான அமைப்பு, பார்லிமென்டரி நடைமுறைகள் என்ற பன்முக உத்திகள் தவிர விவாத மேடைகளுடன், சமூக ஊடகங்கள் தாக்கம் அதிகரித்திருக்கிறது. முகநுால் போன்ற சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள், பல நேரங்களில் போராட்டத்திற்கு வழி வகுக்கின்றன. சில நேரங்களில், அரசு மூடிமறைக்கும் தகவல்களை வெளிக் கொண்டு வருகின்றன.தமிழகத்தில், நீதிமான்கள் பல விஷயங்களில், தெளிவாக தீர்ப்பளிப்பர் என்பதை அனைவரும் அறிவர். ஆனால், அவர்கள் காலதாமதமின்றி பயணிக்க, டோல்கேட் தாமதமின்றி இருக்க, தனி வழி தேவை என்பது, சமூகத்தில் மற்றவர் களை விட சற்று உயர்ந்தவர்கள் என்பதை அடையாளமாக்கும் நிலை. சில அரசியல்வாதிகள் நடத்தும் போராட்டங்களில், பஸ் போக்குவரத்து தடங்கல்கள், அவசர மருத்துவ ஊர்திகள் காத்திருக்கும் நிலை, ஆகியவற்றைக் காண்கிறோம். இவை வளமான வழிகாட்டுதல்களா?வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X