சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு குழந்தைகளை கொன்ற கொடூர தாய் கைது : கள்ளக்காதலனுடன் வாழ ஆசைப்பட்டதால் பாதக செயல்

Added : செப் 02, 2018 | கருத்துகள் (53)
Advertisement
இரு குழந்தைகளை கொன்ற கொடூர தாய் கைது : கள்ளக்காதலனுடன் வாழ ஆசைப்பட்டதால் பாதக செயல்

குன்றத்துார்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரில், கள்ளகாதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, தன் இரண்டு குழந்தைகளை கொலை செய்து, தப்பிச் சென்ற கொடூர தாயை, போலீசார் கைது செய்தனர்.
காதலித்த அழகான பெண்ணையே, இரு வீட்டார் சம்மதத்துடன் கரம் பிடித்த மகிழ்ச்சி; ஆசைக்கு ஒரு மகள், ஆஸ்திக்கு ஒரு மகன்; வங்கியில் வேலை; விடுமுறை தினத்தில் கொண்டாட்டம் என, மகிழ்ச்சியாக சென்றது, குன்றத்துார், மூன்றாம் கட்டளையில் வசித்த, தனியார் வங்கி ஊழியர் விஜய், 30, என்பவரது, எட்டு ஆண்டு திருமண வாழ்க்கை. காலை எழுந்தவுடன் அன்பு மகளுக்கு முத்தம் கொடுத்த பிறகே பணிக்கு செல்வார் விஜய். அன்று - ஆக., 31ம் தேதி - வழக்கத்திற்கு மாறாக, சற்று தாமதமாக எழுந்த விஜய், பணிக்கு கிளம்பியதும், மகளுக்கு முத்தம் கொடுக்க சென்றுள்ளார். அவரை தடுத்த மனைவி அபிராமி, 25, 'குழந்தை அசதியாக துாங்குகிறது. நீங்கள் முத்தம் கொடுத்து எழுப்பினால், நான், அவளை பார்த்து கொள்வேனா... இல்லை, வீட்டு வேலை செய்வானா... துாங்குபவளை எழுப்ப வேண்டாம்' என, செல்லமாக கூறியுள்ளாள்.
'டாட்டா' : மனைவியின் பேச்சை உண்மை என, நம்பிய விஜய், தன், 7 வயது மகன் அஜய்க்கு, 'டாட்டா' காட்டி விட்டு, பணிக்குச் சென்றார். அன்று பணி அதிகம் என்பதால், தி.நகரில் உள்ள வங்கி அலுவலகத்திலேயே விஜய் தங்கிவிட்டார். மறுநாள் அதிகாலை, தன் அன்பு மகளை பார்க்க, ஆசையுடன் வீட்டிற்கு சென்று கதவை திறந்த விஜய்க்கு, பேரதிர்ச்சி காத்திருந்தது.மனைவியை காணவில்லை; கட்டில் மெத்தையில், தன் இரண்டு குழந்தைகளும், வாயில் நுரை தள்ளியபடி, இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார் விஜய். ஓயாத அழுகுரலை கேட்டு, அருகில் வசிப்போர் சென்று, அவருக்கு ஆறுதல் கூறினர். மேலும், இதுகுறித்து குன்றத்துார் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இரு குழந்தைகளின் சடலங்களையும் கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.போலீசாரின் விசாரணையில், விஜய்யின் மனைவிக்கு, குன்றத்துாரில் உள்ள பிரியாணி கடையில் பணியாற்றி வந்த சுந்தரம், 27, என்பவனுடன், கள்ளக்காதல் இருந்தது தெரிந்தது.இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலனுடன் சேருவதற்காக குழந்தைகளை கொன்று விட்டு, அபிராமி தப்பிச் சென்றது தெரிய வந்தது.இதையடுத்து, இரண்டு தனிப்படைகள் அமைத்த போலீசார், அபிராமியின் கள்ளக்காதலன் சுந்தரத்தை, குன்றத்துாரில் பிடித்தனர்.
கைது : சுந்தரத்திற்கு போன் செய்த அபிராமி, தான் திருவனந்தபுரத்தில் இருப்பதாக கூறியுள்ளாள். சுந்தரம் மூலமாகவே பேச வைத்த போலீசார், அபிராமியை நாகர்கோவிலுக்கு வரவழைத்து, மடக்கி பிடித்து, கைது செய்தனர். குன்றத்துார் காவல் நிலையத்திற்கு, நேற்று அழைத்து வந்து, அபிராமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கள்ளக்காதலனுடன் வாழ வேண்டும் என்பதற்காக, குழந்தைகளை கொலை செய்ததாக அபிராமி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கணவன் விஜய் மற்றும் அபிராமியின் தந்தை மற்றும் உறவினர்களின் முன்னிலையில், அபிராமியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: இரு மாதங்களுக்கு முன், குன்றத்துாரில் உள்ள பிரியாணி கடைக்கு, தன் மனைவி அபிராமியை, விஜய் அழைத்து சென்றுள்ளார். அப்போது, அந்த கடையில் பணியாற்றி வந்த சுந்தரத்துடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகள் : சுந்தரத்திற்கு, திருமணமாகி நான்கு ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லை. கடைக்கு போன் செய்து, 'டோர் டெலிவரி' வேண்டும் என, ஆர்டர் கொடுத்து, சுந்தரம் மூலம் பிரியாணியை தன் வீட்டிற்கே அபிராமி வரவழைத்தாள்; இது அடிக்கடி நடந்துள்ளது. கணவன் இல்லாத போது, வீட்டில் இருவரும், தனிமையில் ஒன்றாக இருந்துள்ளனர்.இருவரின் கள்ளக்காதல் விஜய்க்கு தெரிந்ததால், மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன், வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி, குன்றத்துாரில் தனியாக வீடு எடுத்து, சுந்தரத்துடன் தங்கினார்.இதையடுத்து, அபிராமியை அங்கிருந்து அழைத்து வந்த அவரின் உறவினர்கள், அறிவுரை கூறி மீண்டும் விஜய்யுடன் வாழ வைத்தனர். குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து, அனைத்தையும் மறந்து, விஜய்யும் அவருடன் சேர்ந்து வாழ்ந்தார். அதன் பிறகும், கள்ளக்காதலனுடன் அபிராமி தொடர்பில் இருந்துள்ளாள். 'உன் கணவன், குழந்தைகள் இருக்கும் வரை, நாம் சேர்ந்து வாழ முடியாது. அவர்களை விஷம் வைத்து கொன்று விட்டு, நீ வெளியூர் சென்று தங்கி விடு. பிரச்னைகள் முடிந்தவுடன் நாம் சேர்ந்துவிடலாம்' என, சுந்தரம் கூறியுள்ளான்.
திட்டம் : சுந்தரம் வகுத்த திட்டப்படியே, கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்ய, அபிராமி முடிவு செய்தார். ஆக., 30ம் தேதி இரவு, பாலில் அளவுக்கு அதிகமாக துாக்க மாத்திரைகளை கலந்து, கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கும் அபிராமி கொடுத்துள்ளாள்.ஆனால், மறுநாள் காலை, குழந்தை கார்னிகா மட்டும் இறந்துள்ளார். விஜய் யும், மகன் அஜயும் எழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சோர்வாக இருப்பினும், விஜய் பணிக்கு சென்று விடவே, மகன் அஜய்க்கு, மீண்டும் அதிக துாக்க மாத்திரை கலந்த பாலை, அபிராமி கொடுத்தாள். மருந்து வேலை செய்யாமல், மீண்டும் பிழைத்து கொள்வானோ என நினைத்து, மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளாள். பின், வீட்டில் குளித்து, உடைகள் மாற்றி, நன்கு அலங்கரித்து, தன் கணவர் வாங்கி கொடுத்த ஸ்கூட்டரில் வாகனத்தில், 'கூலிங் கிளாஸ்' அணிந்து, கோயம்பேடு சென்றுள்ளாள். அங்கு, வாகன நிறுத்துமிடத்தில், பதற்றமின்றி வாகனத்தை விட்டு செல்லும் காட்சிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.மேலும், வீட்டில் இருந்து கிளம்பும் போது பணம் எடுக்க மறந்ததால், தன் கழுத்தில் இருந்த தங்க தாலி சரடை, அடகு கடையில் விற்று, பணம் பெற்றுள்ளாள். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் தங்கி, கள்ளக்காதலன் சுந்தரத்துடன் வாழ, அபிராமி திட்டம் தீட்டியுள்ளாள்.திருவனந்தபுரம் சென்ற பின், சுந்தரத்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டாள், அபிராமி. மறுமுனையில், 'நான் மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருக்கிறேன். நீயும் இங்கே வா; நாம் வேறு இடத்திற்கு செல்லலாம்' என, போலீசார் கூறியது போல் சுந்தரம் பேசினான். அதை உண்மை என, நம்பி, கள்ளக்காதலன் சுந்தரத்தை பார்க்க வந்த போது, அபிராமியை பிடித்தோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அபிராமி, சுந்தரத்தை கைது செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர். காதலித்து திருமணம் செய்து, எட்டு ஆண்டுகளாக கணவனுடன் வசித்த அபிராமி, இரண்டு மாதம் பழக்கமான கள்ளக்காதலனுக்காக, குழந்தைகளை துணிந்து கொலை செய்து விட்டு சென்றது, குன்றத்துாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனநல நிபுணர் கருத்து : பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகம். திருமணத்திற்கு முன்னரே, தன் கணவன் இப்படி தான் இருக்க வேண்டும் என, கற்பனை செய்து கொள்வர்.திருமணத்திற்கு பின் நிஜவாழ்க்கையில், தங்களின் எதிர்பார்ப்புகள், ஆசைகள் எல்லாம் பொய்த்துபோகும் போது, பெண்கள் விரக்தியடைகின்றனர். மேலும், மனைவிக்கு கணவன் பாதுகாப்பாளனாக இருக்க வேண்டும் என, பெண் நினைப்பாள். ஆனால், கணவன் சந்தேகப்பட்டு, கொடுமைப்படுத்துபவனாக இருந்தால், பெண்ணுக்கு பிடிக்காது. இது போன்ற காரணங்களாலே, மற்றொரு ஆண் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, வேறு ஆண்களை நாட, பெண்கள் ஆரம்பிக்கின்றனர். அப்போது, புதிதாக பழக்கமான ஆண், அன்பாக பேசி, பழகும் போது, பெண் திசை மாறுகிறாள். அதன் பின், தாய் பாசத்தையும் மறந்து, தன்னுள் இருக்கும் மிருக குணத்தை வெளிப்படுத்தி, கொலை செய்து குற்றவாளிகளாக மாறிவிடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
07-செப்-201813:02:06 IST Report Abuse
narayanan iyer மிக மோசமான துர்பாக்கியமான சம்பவம் . இதில் என்ன வருத்தம் என்றால் காதலித்து கைபிடித்து இரு அருமையான குழந்தைகளை பெற்றடுத்து, மீண்டும் வேறு ஒருவனுடன் காதல் அதுவும் அவனும் கல்யாணமானவன். இந்த காதலுக்கு என்ன மரியாதை? அவன் பின்னால் ஓட முடிவெடுத்தபின் குழந்தைகளைப்பற்றிய கவலை எதற்கு? பொதுவாக பெண்களுக்கு நிறைய ஆசைகள். மற்றவர்களைப் பார்த்து வாழ்க்கையை திசைதிருப்பி கொள்வார்கள். இதை உணர்ந்த பெரியோர்கள் பெண்களை ஓரளவிற்கு சுதந்திரத்தோடு வளர்க்கலாம் என்றார்கள் ஆனால் நாம் அதை ஏதோ பெண் அடிமை அது இது என்று சொல்லி அவர்களை நிறயபடிக்க வைத்து வேலைக்கும் போக விட்டதினால் வந்த வினை . இது போதாதுஎன்று இன்றைய ஊடகங்கள் நிறைய தொடர்களை போட்டு பெண்களை திசை திருப்புகிறார்கள். வினை வைத்துவிட்டோம் .என்ன செய்ய?
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
08-செப்-201816:00:08 IST Report Abuse
Sathya Dhara தொலைகாட்சி தொடர்கள்தான் மனதை தீய வழிகளில் கொண்டு செல்கிறது. பாரதத்தை ஊடுருவும் புல்லுருவிகள் இதை வளர்த்து புனிதத்தை கெடுத்து வருகின்றனர்....
Rate this:
Share this comment
Cancel
Yogeendra Bhaarati VP - coimbatore,இந்தியா
05-செப்-201812:36:00 IST Report Abuse
Yogeendra Bhaarati VP கல்வித்திட்டத்தின் நோக்கம் கம்பெனிகளுக்கு நல்ல அடிமைகளை உண்டு பண்ணுவதாக மட்டுமே இருக்கிறது. நல்ல மகனாக, மகளாக கணவனாக மனைவியாக தாயாக தந்தையாக நண்பனாக .... இருக்க எந்த திட்டமும் இல்லை. பெயரளவுக்கு சிறியதாக மரியாதையின்றியே வைக்கப்பட்டுள்ளது. அதை சொல்லித்தருபவர்களுக்கே அதெல்லாம் இருக்கிறதா என்று பார்த்தால் பதில் மிகவும் கஷ்டப்படுத்துவதாகவே இருக்கிறது. இதற்குமேல் டிவி சீரியல்கள் இளைஞர்களின் மனதை மிகவும் பாழ்படுத்துவதாகவும் குழப்புவதாகவுமே இருக்கிறது. அதற்க்கும் மேல் ப்ராய்லர் கோழி போன்ற உணவு முறைகள் உடலையும் மனதையும் தடுமாறச் செய்வதாக இருக்கிறது. இதையெல்லாம் இப்படித்தான் இருக்கும், அவரவரும் சரியாக இருக்க வேண்டியது தான் என்பவன் சிந்திக்க இயலாதவன். உரிய பொறுப்பு உணர்ச்சியுடன் ஆட்சி நடத்தப்பட வேண்டும். நாட்டிலும் வீட்டிலும்.
Rate this:
Share this comment
Cancel
Raja - Madurai,இந்தியா
05-செப்-201810:43:38 IST Report Abuse
Raja பாடத் திட்டத்தில் மாற்றம் வேண்டும். நல்லொழுக்க வகுப்புகள் இப்போது எல்லாம் பள்ளிகளில் இல்லவே இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X