தனியாருக்கு மின் வினியோக உரிமை: முதல் முறையாக ஆணையம் அனுமதி Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தனியாருக்கு மின் வினியோக உரிமை:
முதல் முறையாக ஆணையம் அனுமதி

தமிழகத்தில், முதல் முறையாக, மின் வினியோகம் செய்யும் உரிமையை தனியாருக்கு வழங்கி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தனியாருக்கு,மின் வினியோக,உரிமை,முதல் முறையாக ,ஆணையம்,அனுமதி


தமிழ்நாடு மின் வாரியம், மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் என, இரு நிறுவனங்களாக செயல்படுகிறது. தமிழகத்தில், மின் வாரியத்திற்கு இருப்பது போல, தனியார் நிறுவனங்களுக்கும், மின் நிலையங்கள் உள்ளன. அந்நிறுவனங்கள், தங்களின் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, சொந்த தேவைக்கு போக, மின்வாரியத்திற்கு விற்கின்றன.

வீடு, தொழிற்சாலை, வணிகம், விவசாயம் என, அனைத்து பிரிவினருக்கும், மின் வினியோகம் செய்யும் உரிமை, மின் பகிர்மான கழகத்திற்கு மட்டுமே உள்ளது.இந்நிலையில், முதல் முறையாக, நெல்லை மாவட்டம்,

நாங்குநேரியில் அமைய உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு, மின் வினியோகம் செய்யும் உரிமையை, 'இந்தியா பவர் கார்ப்பரேஷன்' என்ற, தனியார் நிறுவனத்திற்கு வழங்கி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தவிட்டுள்ளது.

இதுகுறித்து, ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாங்குநேரியில், ஏ.எம்.ஆர்.எல்., நிறுவனம், 2,518 ஏக்கரில், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க உள்ளது. இதற்காக, அந்நிறுவனம், 'இந்தியா பவர் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் வாயிலாக, இந்தியா பவர் நிறுவனம், நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில், தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, மின் வினியோகம் செய்ய, ஆணையத்திடம் அனுமதி கோரியது.

இதுதொடர்பாக, மின் வாரியம் உட்பட, மாநில ஆலோசனை குழுவின் கருத்துகள் கேட்கப்பட்டன. 'மின் சட்டப்படி, சிறப்பு பொருளாதார மண்டலத்தில் துவக்கப்படும் நிறுவனங்களுக்கு, மின் வினியோகம் செய்ய, தனியாருக்கு அனுமதி உள்ளது. அதனால், எதிர்க்கவில்லை. 'தேவையை விட, எங்களிடம் அதிக மின்சாரம் உள்ள நிலையில், தனியாருக்கு அனுமதி வழங்கினால், புதிய நுகர்வோரை இழக்க நேரிடும்' என, மின் வாரியம் தெரிவித்தது.

Advertisementதனியார் நிறுவனம் மின் வினியோகம் செய்ய ஆட்சேபனைகள் வராததால், நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, 2017 ஏப்., 19 முதல், 2042 ஏப்., 18 வரை, 25 ஆண்டுகளுக்கு, மின் வினியோகம் செய்ய, இந்தியா பவர் கார்பரேஷன் நிறுவனத்திற்கு உரிமை வழங்கப்பட்டு உள்ளது.

அந்நிறுவனம், மின் வாரியத்தை விட குறைந்த கட்டணத்தில், மின் வினியோகம் செய்ய வாய்ப்புள்ளது. எந்த விலைக்கு, மின்சாரம் விற்க வேண்டும் என்பதை, ஆணையம் ஆண்டு தோறும் நிர்ணயம் செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-செப்-201823:10:42 IST Report Abuse

suraGopalanநீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும் - விக்கு மண்டையன் விஜய்

Rate this:
bcravi - pondicherry,இந்தியா
03-செப்-201812:36:11 IST Report Abuse

bcraviஇந்த மின் விநியோகம் ஏற்கனவே சௌத் மெட்ராஸ் எலக்ட்ரிக் சப்ளை கார்பொரேஷன் என்ற பெயரில் (சேஷாசயீ நிறுவனம்) 1970 களில் செயல் பட்டது பின்பு அதை TNEB உடன் இணைத்து விட்டார்கள் எதோ இப்போதுதான் தனியாருக்கு முதலில் மின் விநியோகம் கொடுப்பதாக சொல்கிறிரர்கள்

Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
03-செப்-201810:56:32 IST Report Abuse

பாமரன்மின்சார சப்ளை தனியார் மயம் ஆக்கப்படனும். அதேநேரம் தற்போது இருப்பது போல் மோனோபாலி இருக்கக்கூடாது. இது கார்பொரேட் வளர்க்கும் நடவடிக்கை என்பதெல்லாம் சுத்த பித்தலாட்டம். உதாரணமாக வெகுகாலம் கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்த கல்கத்தா தனியார் மின் சப்ளை கம்பெனி நிர்வாகத்தில் சிறப்பாக இல்லையா...???

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X