பொது செய்தி

இந்தியா

வளர்ச்சி சரிவுக்கு ரகுராம் ராஜனே காரணம்

Updated : செப் 03, 2018 | Added : செப் 03, 2018 | கருத்துகள் (44)
Advertisement
நிதி ஆயோக், ராஜிவ் குமார், ரகுராம் ராஜன், பண மதிப்பிழப்பு, ஏஎன்ஐ செய்தி நிறுவனம், ரிசர்வ் வங்கி, மன்மோகன்சிங், ப சிதம்பரம், வங்கித்துறை,  வாராக்கடன் விவகாரம், 
Finance Ayodh, Rajiv Kumar, Raghuram Rajan, demonetization, ANI News Agency, Reserve Bank, Manmohan Singh, P Chidambaram, Banking, NPA affair,Non performing asset

புதுடில்லி : ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த நிதிஆயோக் அமைப்பின் துணை தலைவர் ராஜிவ் குமார், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனை கடுமையாக சாடி உள்ளார்.

பேட்டியில் அவர் கூறுகையில், முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் கொள்கைகளாலேயே நாட்டின் வளர்ச்சி சரிந்துள்ளது. பண மதிப்பிழப்பால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை. மக்கள் தலைவர்களாக நினைக்கும் , நமது முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சிதம்பரம் போன்றோர் இப்படி கூறுவது அச்சமாக உள்ளது.
வங்கித்துறையில் வாராக்கடன் அதிகரித்ததாலேயே வளர்ச்சி சரிந்துள்ளது. முந்தைய கவர்னர் ரகுராம் ராஜன் வாராக்கடன்களை வசூலிக்க கையாண்ட விதம் தான் இதற்கு காரணம். வாராகடன் விவகாரத்தால் வங்கிகள் தொழில்துறைக்கு அளித்து வந்த ஆதரவையும், உதவிகளையும் நிறுத்தி விட்டது. இது தான் வளர்ச்சி பாதிக்க காரணமாக அமைந்துள்ளது. என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
04-செப்-201806:03:08 IST Report Abuse
Sanny நாங்க நல்லவங்க, இந்த ஆட்சி நல்லதுங்க ஆனால் இந்த நாலுவருடமாக மற்றவங்க செய்த தப்பை சொல்லிகிட்டே எங்க நாலு வருடத்தை கழித்து விட்டோம்ங்க, இன்னும் ஒரு ஐந்து வருடம் தாங்க இன்னும் அடுத்தவங்க தப்புகளை சொல்ல, நாங்களும் ஜாலியாக இருக்கனும், இப்படி பேட்டி கொடுத்திருக்கலாம்,
Rate this:
Share this comment
Cancel
04-செப்-201804:43:08 IST Report Abuse
அரசு raghuram rajan தன் பதவி காலத்தில் எப்படி வாராக்கடன் எப்படி அணுகினார் என்பது பொதுவெளியில் அனைவரின் கவனத்திற்கும் இருக்கக்கூடிய ஒரு விஷயம். niti ayog ல் பொறுப்பில் இருப்பவர் மோடிக்கு ஜால்ரா அடித்த தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள போடப்படுகின்றன நாடகமே.
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
04-செப்-201802:41:25 IST Report Abuse
spr 2013 க்கும் 15 க்கும் இடையில் மட்டும் 29 அரசு வங்கிகள் 1,20,000 கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்திருக்கின்றன. அதானி, அம்பானி போன்ற முதலாளிகள் கடனுக்கு வட்டி கூடக் கட்டுவதில்லை. தொடர்ந்து வட்டி கட்டவில்லை என்றால் அதை வாராக் கடன் என்று கருத வேண்டும். அதனை தவிர்ப்பதற்காக, மீண்டும் அதே முதலாளிக்கு மேலும் கடன் கொடுத்து, அந்த கடன் தொகையிலிருந்தே வட்டியை வரவு வைத்திருக்கின்றன அரசுடைமை வங்கிகள்.இப்படி வாராக்கடனை வரப்போகிற கடன் போல பொய்க்கணக்கு காட்டுகிறார்கள் வங்கி அதிகாரிகள். எனவே இவர் கூறுவது முழுவதும் உண்மையல்ல திரு ராஜன் பரிந்துரைத்த பல கருத்துக்களையே திரு மோடி அதிரடியாக நியைவேற்றுகிறார் அவற்றில் சில “The government is in the process of speeding up the debt recovery process, and creating a new Bankruptcy tem The first is to improve the governance of public sector banks so that we are not faced with this situation again. The Government, through the Indradhanush initiative, has sent a clear signal that it wants to make sure that public sector banks, once healthy, stay healthy. The second is to infuse bank capital, with some of the infusion related to stronger performance, so that better banks have more room to grow. Capital infusion into weak banks should ideally accompany an improvement in governance, but given the need for absorbing the losses associated with balance sheet clean up, better that government capital be infused quickly.” வாராக்கடனை வசூலிக்க தக்க அமைப்பு - திரு மோடி அரசு எடுத்த நடவடிக்கை கடன் கட்டாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றால் கூட அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை ஏற்கெனவே, வங்கிகளின் நலனுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் மக்களின் பணம் முழுவதும் வங்கிக்கு வந்துசேர்ந்தது. பணப் பரிவர்த்தனைக்குக் கட்டுப்பாடுகள் போடப்பட்டு, அதற்குக் கட்டணங்களும் விதிக்கப்பட்டன. டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டது.வங்கிகளை மீட்பதற்காக அரசே சமீபத்தில் 2.5 லட்சம் கோடி ரூபாயை மறு மூலதனம் செய்ய முன்வந்தது. கடன் வாங்கிவிட்டுத் திருப்பித்தராமல் ஏமாற்று பவர்களின் சொத்துகளை விற்று, கடனை மீட்க நடவடிக்கை எடுத்தது. இப்படியெல்லாம் செய்தாலும்கூட, வாராக்கடனில் அதிகபட்சமாக 20 சதவிகிதம்தான் மீட்கப்படுகிறது. எனவே, இப்படியொரு சுலபமான வழியை அரசு திட்டமிடுகிறது. Most recently, the government is contemplating a fund to lend into distressed situations, with significant participation by third parties, so that new loans can be made to viable distressed projects பல பொதுத்துறை வங்கிகளை இணைத்து வங்கியின் நிதியாதாரத்தைப் பெருக்குதல் எனவே காங்கிரசின் திட்டங்களையே அதிரடியாக நிறைவேற்றி பேர் வாங்கிய பாஜக அரசு என்று மக்கள் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர் இப்பொழுது திரு ரகுராம் ராஜன் சொன்னதையே செய்திருக்கிறது என்று சொல்லுமுன்னர் இவர்மூலம் முந்திக்கொண்டு வெளியிட்டு அவரை குறை சொகிறதோ விவரங்களுக்கு இந்த இணைப்பை படியுங்கள் புரியும் s://scroll.in/article/810450/why-have-bad-loans-been-made-full-text-of-raghuram-rajans-speec
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X