பொய்யுடன் வாழ்கிறோம்: போலீஸ்காரர் மனைவியின் கண்ணீர் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொய்யுடன் வாழ்கிறோம்: போலீஸ்காரர் மனைவியின் கண்ணீர்

Added : செப் 03, 2018 | கருத்துகள் (38)
Advertisement
 பொய், வாழ்கிறோம், போலீஸ்காரர், மனைவி, கண்ணீர்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் போலீசாரும், அவர்களின் குடும்பத்தினரும் சந்தித்து வரும் துயரத்தை ஒரு கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது. போலீஸ்காரர் ஒருவரின் மனைவி அந்த கட்டுரையை எழுதியுள்ளார்.


பயங்கரவாதிகளின் புது பார்வை


காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பார்வை தற்போது போலீசார் மீது திரும்பியுள்ளது. தனித்து இருக்கும் போலீஸ்காரர்களை கொல்வது, அவர்களின் குடும்பத்தினரை கடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சூழ்நிலையில், போலீஸ்காரர் ஒருவரின் மனைவியான ஹாரீபா தவ்ஷிப் என்பவர், உள்ளூர் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
காஷ்மீர் போலீசாரின் மனைவிகளுக்கு, இளமை கால கனவுகள் பல உண்டு. அதில் ஒன்று தான் எப்போதும் கணவருடன் இருக்க வேண்டும் என்பது. இது கனவு ஒரு கானல் நீர் என்பது அவர்களுக்கு தெரியும். தெரிந்தாலும், மதிய உணவின் போது கணவருக்காக காத்திருப்பதும், இரவு உணவின் போது வெறுமையை சந்திப்பதும் தினம் தோறும் நடப்பது தான்.
குடும்ப விழாக்களுக்கு அல்லது உறவினர், தெரிந்தவர் சாவுக்கு கணவருடன் சேர்ந்து செல்ல வேண்டும் என திட்டமிடுவோம். ஆனால், இது எப்போதாவது தான் நிகழும். கணவர் உடன் இல்லாமல் குழந்தைகளை வளர்ப்பதும், நாங்கள் மிகப்பெரிய பொய்யர்களாகவும் இருக்கிறோம்.


பொய் கூறி ஆறுதல்


எங்கள் குழந்தைகளுடன், ' தந்தை இந்த சனிக்கிழமை வந்து விடுவார்' என, பொய் கூறுவோம். ' பள்ளியில் நடக்கு பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்திற்கு இந்த முறை தந்தை கண்டிப்பாக வந்து விடுவார். இந்த வார இறுதியில் பிக்னிக் செல்வோம். இந்த ஆண்டு பண்டிகையின் போது தந்தை உடன் இருப்பார்...' என்று தொடர்ந்து பொய்களாக கூறி வருகிறோம். வயதான பெற்றோரிடம், 'உங்கள் மகன் இன்னும் சில நாட்களில் வந்து விடுவார்' என, பொய் கூறுவோம். எங்களிடம் நாங்களே பொய் கூறி ஆறுதல் அடைவோம்.
இரவில் தனியாக படுப்பது போன்ற கொடுமை வேறு கிடையாது. நள்ளிரவில் திடீரென முழிப்பு வந்து விடும். அப்போது அசவுகரியமாக, அமைதி இல்லாமல், மூச்சு திணறி கஷ்டப்படுவோம். ஆனால், ஆறுதல் கூற யாரும் இருக்க மாட்டார்கள்.
காத்திருப்போம்... காத்திருப்போம்... காலம் முழுவதும் காத்திருக்கிறோம். ஒருவேளை கணவர் வீட்டுக்கு வந்தாலும், அவர் உடல் அளவில் தான் உடன் இருப்பார். அவரது நினைவுகள் முழுக்க போலீஸ் பணியை பற்றி தான் இருக்கும்.
இது போலீஸ்காரர்களின் மனைவிகளுக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையும் மீறி, தற்போதைய சூழ்நிலை கூடுதலாக மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. எப்போது பார்த்தாலும், பாதுகாப்பு இன்மை குறித்த கவலை தான் காணப்படுகிறது.


புரிந்து கொள்ளாத உள்ளூர் மக்கள்


ஆபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏதாவது ஒரு இடத்தில் ஒரு போலீஸ்காரர் இறந்து விட்டார் என்று தகவல் வந்தால் உடனே பீதியில் ஆழ்ந்து விடுகிறோம். இத்துடன் உள்ளூர் மக்கள் எங்களை விரோதிகள் போல பார்க்கின்றனர்.
அவர்களிடம், எங்கள் கணவர் உங்களுக்கு எதிராக பணி புரியவில்லை என்பதை விளக்க முடியவில்லை. அதே நேரத்தில் போலீஸ்காரருக்கு எதாவது நடந்து விட்டால், எங்களுக்காக பரிதாபப்பட யாரும் முன்வருவதில்லை. எங்கள் குழந்தைகள் சூழ்நிலையை விரைவில் புரிந்து கொள்கின்றனர். எங்கள் மாநிலத்தை சூழ்ந்துள்ள கருப்பு மேகங்கள் விரைவில் கலைந்து போகும். நல் விடியல் வரும். அமைதியான வளமான காஷ்மீர் உருவாகும் என்பதே எங்கள் உணர்வாக உள்ளது.
இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kaliyan Pillai - Chennai,இந்தியா
04-செப்-201811:12:57 IST Report Abuse
Kaliyan Pillai சந்தேகப்படும் நபர்களையெல்லாம் சுட்டு வீழ்த்த வேண்டும். தேடுதல் வேட்டையை கடுமையாக்க வேண்டும். காவலர் குடியிருப்புக்களை 24 மணிநேரமும் ரேடார் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். நாற்புறமும் ஆயுதம் தங்கிய காவலர் கண்காணிக்க வேண்டும். தீவிரவாதிகள் மோப்பம் பிடித்து அங்கே வரும்போது சித்திரவதை செய்து சுட்டுகொன்றுவிட வேண்டும். பாதுகாப்பு அதிகாரிகளைப்பற்றி அவருக்கு உண்மையான அக்கறையில்லை.
Rate this:
Share this comment
Cancel
Muthu - Bangalore,இந்தியா
04-செப்-201809:16:51 IST Report Abuse
Muthu காஷ்மீரை எல்லோர்க்கும் பொதுவாக்கி... இந்துக்களை பெருவாரியாக குடியேற்றினால் நிலைமை மாறும்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
04-செப்-201808:09:10 IST Report Abuse
Srinivasan Kannaiya கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரிக்க காரணமாக இருந்தது... காஷ்மீர் பெண்களின் கண்ணீர் வலிமை வாய்ந்தது... என்ன செய்ய போகிறதோ...
Rate this:
Share this comment
Anand - chennai,இந்தியா
04-செப்-201810:05:37 IST Report Abuse
Anandசீக்கிரமாக அனைத்து தீவிரவாதிகளும் அழிக்கப்படுவர்...
Rate this:
Share this comment
Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ
04-செப்-201811:35:25 IST Report Abuse
Prakash Elumalaiகாஷ்மீர் பெண்களின் கண்ணீர் அவர்களின் குழந்தைகள் மற்றும் சகோதரர்களை தீவிரவாதி ஆகாமல் தடுத்தால் போதும் ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X