மதுரை ராகிங்கில் நடந்தது என்ன? விளக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை ராகிங்கில் நடந்தது என்ன? விளக்கம்

Updated : செப் 03, 2018 | Added : செப் 03, 2018 | கருத்துகள் (30)
Advertisement
மதுரை, ராகிங், என்ன ? முதல்வர், விளக்கம்

மதுரை: மதுரை மருத்துவ கல்லூரியில் ராகிங் நடந்தபோது, இளம் மாணவர்கள் எப்படி பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து மருத்துவ கல்லுாரி முதல்வர் மருதுபாண்டியன் இன்று நிருபர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.

சமீபத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவர்கள் சிலரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து ராகிங்கில் ஈடுபட்டவர்களை சஸ்பெண்ட் செய்ய இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டது.இந்நிலையில் இன்று மருத்துவக்கல்லூரி முதல்வர் மருதுபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:
மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவு. ராகிங் தடுப்பு கமிட்டியிடம் சமர்ப்பிக்கப்பட்டு, ராகிங் பிரச்னையில் 19 பேர் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கண்காணிப்பு காமிரா மூலமும் தகவல்கள் சேகரிக்கப்பட்டது.


அனுமதிக்கப்பட மாட்டார்கள்


ராகிங்கில் ஈடுபட்ட 2 ம் ஆண்டு படிக்கும் 19 மாணவர்கள் ஒரு ஆண்டிற்கு விடுதியில் இருந்தும் 6 மாதங்கள் மருத்துவ கல்லூரியில் இருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்படுகின்றனர். விடுதியில் தங்கவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். டில்லி மருத்துவ கவுன்சிலுக்கும், எம்ஜிஆர் மருத்துவ கல்லூரி பல்கலை., மருத்துவ கல்லூரி இயக்குனரகம், பெற்றோர்களுக்கும் இது பற்றி தகவல் தெரிவிக்கப்படும்.
ராகிங்கில் உடல் ரீதியாக யாரும் துன்புறுத்தப்படவில்லை. வார்த்தை ரீதியாக அதாவது டீ சர்ட் போடு, முழுக்கை சட்டை போடு, உட்கார்ந்து இரு என்பன போன்ற ராகிங் நடந்துள்ளது. இவ்வாறு முதல்வர் கூறினார்.

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
04-செப்-201815:57:53 IST Report Abuse
kalyanasundaram THE REASON SEEMS TO BE A FABRICATED ONE MAY BE DUE TO PRESSURE FROM POLITICIANS . WHAT QUOTED MAY BE VERY WRONG . SOME THING ELSE SEVIOR ONE WOULD HAVE HAPPENED.
Rate this:
Share this comment
Cancel
S.prakash - Palakkarai,இந்தியா
04-செப்-201810:34:20 IST Report Abuse
S.prakash மருத்துவ கல்லூரி படிப்பு ஆரம்பமே அயோக்கியத்தனம். படிப்பதை விட்டே துரத்தவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
04-செப்-201808:44:47 IST Report Abuse
ஆரூர் ரங் இது சாதிப் பிரச்சனையாகத் தான் தோன்றுகிறது. தென் மாவட்ட முக்கியமாக மதுரைக் கல்லூரிகளில் சாதிமோதல் சாதாரணம். பேராசிரியர்கள் தூண்டுகிறார்கள். சாதிப்பிரச்சனையால்  பாதிக்கப்பட்டு பத்துப்பதினைந்தாண்டுகள் BE கோர்ஸையெ முடிக்கமுடியாமல் திணறியவர்களுண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X