பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
அசத்தல்!
'ஒரு நாடு; ஒரு கார்டு' திட்டம் விரைவில் அமல்
ரயில், பஸ், மெட்ரோவில் பயன்படுத்தலாம்

'ஒரு நாடு; ஒரு கார்டு' திட்டத்தை, மத்திய அரசு, விரைவில் அமல்படுத்த உள்ளது. 'இதற்காக தரப்படும் கார்டை பயன்படுத்தி, ரயில், பஸ், மெட்ரோ ரயில் என, அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் செல்ல முடியும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

one nation,one card,விரைவில்,ஒரு நாடு,ஒரு கார்டு,திட்டம்,அமிதாப் காந்த்,amitabh kantமத்திய அரசுக்கு திட்டங்களை வகுத்து தரும் அமைப்பான, 'நிடி ஆயோக்' மற்றும், சி.ஐ.ஐ., எனப்படும், இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை சேர்ந்து, டில்லியில் நேற்று, இந்தி யாவின் அடுத்த தலைமுறை போக்குவரத்து வசதிகள் தொடர்பான கூட்டத்தை நடத்தின.


இந்த கூட்டத்தில் பேசிய, நிடி ஆயோக் தலைவர், அமிதாப் காந்த் கூறியதாவது: 'மொபைலிட்டி மார்க்கெட்' எனப்படும், போக்கு வரத்து சந்தை, இந்தியாவில், வரும் காலங்களில் பல்வேறு அதிரடி மாற்றங்களை சந்திக்க உள்ளது. இதனால், மின்சாரத்தை சேமித்து வைக்கும் பேட்டரி தொழில், அசுர வளர்ச்சியை அடைந்து வருகிறது. வரும் ஆண்டுகளில், பேட்டரி உற்பத்தி தொழில், 21 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு சந்தையாக உருவெடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


நம் நாட்டின் வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு, மின்சாரம் சேமித்து வைக்கும் பேட்டரிகளை சப்ளை செய்யும்

தொழிலின் பங்கு, முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக, மின்சாரம் சேமிக்கும் பேட்டரிகள் மட்டுமே இருக்க முடியும். இதனால், புதுப்பிக்கத்தக்க மின் சக்தியை நோக்கி, வாகனங்கள் உற்பத்தி துறை நகர்ந்து வருகிறது.


வரும், 7ல், டில்லியில், நாட்டின் முதல், சர்வதேச வாகன போக்குவரத்து திறன் மாநாடு நடக்கஉள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். அப்போது, 'ஒரு நாடு; ஒரு கார்டு' திட்டம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட உள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கிலான இந்த திட்டம், பல்வேறு பொது போக்குவரத்து வசதி களை ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


பொது போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைத்தல், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல அம்சங்கள், இந்த திட்டத்தில் இடம் பெற்று உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


திட்டத்தின் பயன்கள் :• 'ஒரு நாடு; ஒரு கார்டு' திட்டம், மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துகிறது; அலைச்சலை போக்குகிறது

• பல்வேறு போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த முடியும்

• 'டெபிட் கார்டாக' பயன்படுத்த முடியும்

• போக்குவரத்துக்கான மக்களின் செலவுகள் குறையும்

Advertisement


• காகித பயன்பாடு ஒழிக்கப்படும்

• டில்லி, கொச்சி, மும்பை, கோல்கட்டா ஆகிய நகரங்களில், 'ஒரு நாடு; ஒரு கார்டு' திட்டம், ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டம் சொல்வது என்ன?

'ஒரு நாடு; ஒரு கார்டு' திட்டத்தில், தேசிய பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவதற்கான, டிஜிட்டல் கார்டு அளிக்கப்படும். நகர்ப்புற வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை எட்டும் வகையில், இந்த கார்டு திட்டம் செயல்படும். இந்த கார்டு மூலம், பஸ், ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட, பொது போக்குவரத்து வசதிகளில், எதையும் நாம் பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட தொகையை முன் கூட்டியே செலுத்தி, வாடிக்கையாளர்கள், இந்த கார்டை பெற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும்போதும், அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், கழிக்கப்படும். இருப்பு தொகை காலியாகி விட்டால், குறிப்பிட்ட தொகைக்கு, 'ரீசார்ஜ்' செய்து, மீண்டும் அந்த கார்டை பயன்படுத்தலாம். இந்த திட்டத்தின் மூலம், பொது போக்கு வரத்தையும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளையும் மக்களிடையே அதிகரிக்க முடியும். இதனால், மக்களின் நேரம் மீதமாகும்.- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-செப்-201809:54:08 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இந்தியாவில் 98.0% மக்களிடம் கிரெடிட், டெபிட் கார்டுகள் இல்லை. வெறும் இரண்டு சதவீத பணக்காரர்களுக்கான அசத்தல் திட்டம் இது.. டிஜிட்டல் இந்தியா என்று கூவும் இந்த மோசடி வித்தகர்கள், சட்டத்தில் போலி கார்டுகளால் பணம் இழக்கும் அப்பாவிகளுக்கு சாதகமாக எந்த வங்கி நடைமுறைகளையும், சட்டங்களையும் மாற்றவோ, இயற்றவோ இல்லை.. உன் பணம் போனால் நாயாய் பேயாய் அலைய வேண்டியது தான். அது பயன்பாட்டாளரின் தவறாக தான் சித்தரிக்கப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் அப்படி இல்லை.. கிரடிட் கார்டில் எந்த ஒரு செலவையும் நிராகரிக்கும் உரிமை -dispute- அட்டை பயன்பாட்டாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.. எல்லாம் ஏ.சி குளிர் அறையில் உட்கார்ந்து கொண்டு இவர்களின் வசதிக்காக அரசு திட்டங்களை போட்டுகொண்டு வளர்ச்சி என்று சொல்லி அலையும் பாசிச மூடர் கூடம்.

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
04-செப்-201822:27:02 IST Report Abuse

Visu Iyerஇதுக்கு எவ்வளவு கோடி செலவு செய்ய போறாங்க...ன்னு தெரியவில்லையே...பயமா இருக்கு

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
04-செப்-201816:35:11 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா 04-செப்-2018 11:32 நாலு ஆண்டுகளுக்கு ஒருமுறை டிரான்ஸபார் /// அப்படி டிரான்ஸ்பர் பண்ணியும் லஞ்சம் வாங்காமலா வேலை செய்யறீங்க. இதுல ஆட்சியை வேற குறை சொல்லரது.

Rate this:
மேலும் 52 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X