கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மெரினாவில் போராட
அனுமதி இல்லை: ஐகோர்ட்

சென்னை : சென்னை, மெரினா கடற்கரையில், ஒரு நாள் போராட்டத்துக்கு அனுமதி அளித்த உத்தரவை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

High Court,Marina,Marina Beach,ஐகோர்ட்,மெரினா,மெரினா கடற்கரை


விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, சென்னை, மெரினா கடற்கரையில், 90 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி, விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ஒரே ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கும்படி, போலீசுக்கு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை, நீதிபதிகள் சசிதரன், ஆர்.சுப்ரமணியன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், அரவிந்த் பாண்டியன் ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மெரினா கடற்கரை, காமராஜர் சாலை, சர்வீஸ் சாலையில், எந்த வகையான போராட்டங்களும் நடத்த அனுமதி அளிப்பதில்லை என்ற, கொள்கை முடிவை, அரசு எடுத்துள்ளதாக, போலீஸ் கமிஷனரின் மனுவில் கூறப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், மெரினா வில் இருக்கும் நினைவிடங்களுக்கு சென்று, மரியாதை செலுத்துவது, குடியரசு தின அணிவகுப்பு, விழிப்புணர்வு திட்டங்களுக்கான மாரத்தான் ஓட்டம் போன்றவற்றுக்கு, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எல்லாம், பொது மக்களுக்கு அசவுகரியம் ஏற்படாத நேரங்களில் தான், அனுமதிக்கப்பட வேண்டும். அதிகாரிகள் ஒதுக்கும் இடம் அல்லாமல், தான் தேர்ந்தெடுக்கும் இடத்தில் தான், உண்ணாவிரதம் நடத்த அனுமதிக்கும்படி, உரிமை கோர முடியாது.

சென்னை நகரில், எங்கும் போராட்டம் நடத்தக் கூடாது என, அரசு தடை ஏதும் விதிக்கவில்லை. ஊர்வலம், கூட்டங்கள் நடத்த, சில பகுதிகளை, போலீஸ் ஒதுக்கி உள்ளது. சில இடங்கள், சட்டசபை மற்றும் தலைமை செயலகம் அருகில் உள்ளது. போராட்டத்தை முடித்த பின், முதல்வர் அல்லது அமைச்சரை சந்தித்து, தலைவர்கள் மனு அளிக்கவும் முடியும்.

Advertisement

விவசாயிகள் பிரச்னைக்காக, மெரினாவில் கூட்டத்தை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. சட்ட - ஒழுங்கு பிரச்னையை பேண வேண்டிய கடமை, அதிகாரிகளுக்கு உள்ளது. எனவே, மெரினாவில் அனுமதி அளிக்கும்படி பிறப்பித்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. போக்குவரத்து கழகங்களுக்கு மற்றும் அரசு துறைகளுக்கு வாங்கப்படும் புதிய பஸ்கள் மற்றும் வாகனங்கள், துவக்க நிகழ்ச்சிக்காக, காமராஜர் சாலையில் நிறுத்தப்படுகின்றன.

இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது; பொது மக்களுக்கும் அசவுகரியம் ஏற்படுகிறது. இந்த அசவுகரியத்தை, அரசு கவனத்தில் கொள்ளும் என, நம்புகிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-செப்-201800:38:30 IST Report Abuse

நக்கல்இந்த முடிவை எடுத்த நீதிபதிக்கு நன்றி... Thank God...

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
04-செப்-201815:49:13 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்பொதுமக்கள் கூடும் இடங்களில் பொனத்தை பொதைக்கலாம்.ஆனால் பொதுகூட்டம் போட்டால் தப்பாமா சார்

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
04-செப்-201810:45:44 IST Report Abuse

நக்கீரன்மெரினாவில் மட்டுமல்ல இன்றைக்கு எங்குமே போராடக்கூடாது என்பதுதான் உண்மையில் அரசின் எண்ணம். அதற்க்கு ஜால்றா தட்டுகின்றனர் இந்த நிதியரசர்கள். இன்றைக்கு அரசியல்வாதிகளுக்கும், அரசாங்கத்தில் வேலை செய்வோருக்கும், நீதிமன்றத்தில் வேலை செய்வோருக்கும் கவலை இல்லை. மாசாமாசம் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் டாண்ணு வந்துடும். சுங்கச்சாவடியில் 15 நிமிடங்கள் காத்திருக்க யோசிக்கும் நீதிபதிகள், ஒரு சாதாரண வழக்கு 15 வருடங்களாக இழுத்தடிக்கப்படுவதற்கு துணை போகின்றனர். மற்றவர்களும் அதே சுங்கச்சாவடியில் பல மணி நேரங்கள் காத்திருந்தே பயணம் செய்கின்றனர். அப்போ நீதிபதிகள் என்ன வானதிலிருந்தா குதித்து விட்டார்கள்? அது போக அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கின்றனர். அதில் பலருக்கும் பங்கு போய் விடுகிறது. அதனால் இவர்களை எல்லோரும் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். அதனால் லஞ்சம் கொடுத்தோ முறைகேடுகளில் ஈடுபட்டோ தகுதியில்லாதவர்கள் கூட எப்படியும் இந்த பதவிகளை அடைந்துவிடுகின்றனர். இவர்கள் யாருக்கும் ஏழை எளிய அடித்தட்டு மக்கள் அன்றாடம் படும் வேதனைகள் தெரியாது. மக்கள் அமைதி வழியில் தங்கள் அடிப்படை தேவைகளுக்கு, உரிமைகளுக்காக போராடினால் அதை கூட மதிக்க தெரியாது. கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், யாருமே கவனிக்காததால் மக்கள் வெகுண்டெழுந்தால் உடனே கலவரக்காரர்கள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவார்கள். இது உண்மையா இல்லையா? இன்றைக்கு லஞ்ச ஊழல்களால் புரையோடிப்போயிருக்கிற இந்த அரசின் மீதும், கூட்டாளி நீதிமன்றம், கையாலாகாத காவல்துறை ஆகிய எல்லாவற்றின் மீதும் மக்களுக்கு கடுமையான கோபம் இருக்கிறது. ஆகவே, இந்த அரசின் முக்கிய நோக்கம், மக்கள் யாரும் பெரிய அளவில் தன்னெழுச்சியாக தங்களை எதிர்த்து ஒன்று கூடிவிடக்கூடாது என்பது. அதற்க்கு இந்த நீதிமன்றங்கள் என்று சொல்லிக்கொள்பவைகளும் துணை போவதுதான் வேதனை. ஆனால், எல்லாவற்றிக்கும் தாங்கள்தான் காரணம் என்பதை இந்த சாக்கடை கூட்டங்கள் உணர மறுக்கின்றன. தங்களிடம் உள்ள ஓட்டு என்ற ஆயுதத்தை நல்லவழியில் பயன்படுத்த மறுக்கின்றனர். அதனால்தான் இந்த அவல நிலை என்கிற புரிதல் இல்லை. ஆனால் எல்லாவற்றிக்கும் ஒரு முடிவு உண்டு. அது நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X