அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கோமா நிலையில் அ.தி.மு.க., அரசு
திருச்சியில் ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருச்சி : ''அ.தி.மு.க., அரசு கோமா நிலைக்கே சென்று விட்டது,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

A.D.M.K,ADMK,D.M.K,M.K.Stalin,Stalin,Thiruchirapalli,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,தி.மு.க,திருச்சி,ஸ்டாலின்


தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று காலை, திருச்சி, முக்கொம்பு வந்தார். இடிந்து விழுந்த கொள்ளிடம் அணையை பார்வையிட்ட பின், அவர் கூறியதாவது: திருச்சியில் உடைந்த அணையை போலத்தான், தமிழகத்தில், பழனிசாமி ஆட்சி நடக்கிறது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென அதிகமான தண்ணீரை திறந்து விட்டதால் தான், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஆக., 24ல் அணையை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி 'ஒருவாரத்தில் சீரமைக்கப்படும்'

என்றார். ஆனால், 40 சதவீதம் தான் பணிகள் முடிந்துள்ளன. மேலும் முதல்வர் 'காய்ச்சல் சொல்லிக் கொண்டா வருகிறது; திடீரென வந்து விடுகிறது' எனவும் தெரிவித்துள்ளார். காய்ச்சல் சொல்லி வருவதில்லை; ஆனால், கமிஷன் சொல்லி வைத்தாற் போல வந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க., அரசுக்கு காய்ச்சல் வரவில்லை; கோமா நிலைக்கே சென்று விட்டது.

மேட்டூர் அணை திறக்கப்பட்டு, 42 நாட்களாகியும், கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில், கால்வாயை துார்வாரவில்லை; கமிஷனைத் தான் துார் வாருகின்றனர். இதில், 5,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஆட்சியில், முறையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை. விரைவில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே, வறண்டு கிடந்த கரம்பா ஏரியை ஸ்டாலின் பார்வையிட்டார்.

Advertisement

கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராதது குறித்தும், துார்வாரும் பணியின் மெத்தனம், முறைகேடு குறித்தும், ஸ்டாலினிடம், விவசாயிகள் மனு அளித்தனர். ஸ்டாலின், செங்கிப்பட்டி பாலத்தை கடந்து சென்ற போது, முன்னால் சென்ற லாரியில் மோதி, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத், 30, என்பவர் காயம் அடைந்தார்.

காரை நிறுத்தி இறங்கிய ஸ்டாலின், வினோத்தை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறி சென்றார். போலீசார், அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம், தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


Advertisement

வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
07-செப்-201801:39:51 IST Report Abuse

Matt Pசின்னச்சாமி ...விளக்கம் எல்லாம் நல்லா தான் இருக்கு. சங்க காலத்தில் மதுவை அருந்தினான் என்பதற்காக இப்போவும் அருந்தலாம் என்கிறீர்களா? . சங்க காலத்தில் மனிதன் சரியா உடைய உடுத்தியிருக்க மாட்டான் .. பெண்கள் உட்பட யாரும் மேலாடை யாரும் அணிந்திருக்க மாட்டார்கள் .. நல்ல இலக்கியங்கள் தோன்றியிருந்தாலும் அன்றைக்கும் மனிதர்கள் பல தவறுகளை செய்து கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்கள் . அறிவியலால் மனிதன் எவ்வளவோ வளர்ச்சி பெற்று விட்டான். குடி தண்ணீர் மனிதன் வாழ்க்கைக்கு தேவை ,குடி சாரயம் வாழ்க்கையை சீரழித்து , ஏழையாக்கி தெருவில் கொண்டு விடுகின்ற ஓன்று. காங்கிரஸ் ஆரம்பிச்சாலும் தவறு தான் .. கருணாநிதி திமுக காரன் ஆரம்பிச்சாலும் ,அம்மா திமுக காரன் ஆரம்பிச்சாலும் ,தேவையில்லாத ஓன்று தான். இஸ்லாமிய மதத்தில் மதுவை கையால் தொடுவதே தவறு. அமெரிக்காவில் கண்டிப்பாக குடிப்பது தவறு என்று வாழ்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். காய்கறி உணவே சிறந்தது என்று வாழ்பவர்களும் இருக்கிறார்கள் .தமிழ்நாட்டில் வருமானம் ஒன்றைஏ கருத்தில் கொண்டு அரசு குடி தொழிலை natatthi கொண்டிருக்கிறது. ...குஷ்பு கற்பா இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றபோது கருணாநிதி சங்க கால இலக்கியத்தில் களவொழுக்கம் பற்றி பேசப்படுகிறதே என்றார் ....சங்க காலமும் ஒரு காட்டுமிராண்டி காலமே.

Rate this:
Ramachandran Madambakkam - Chennai,இந்தியா
06-செப்-201810:52:28 IST Report Abuse

Ramachandran  Madambakkamமின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை என்கின்ற நிலைமையை மாற்றிய அரசு கோமா நிலையில் உள்ளது என்றால் தி மு க ஆட்சியை மீண்டும் கொண்டு வரலாம்.

Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
04-செப்-201821:41:00 IST Report Abuse

Vaithilingam Ahilathirunayagamவேறொன்றுமில்லை, அண்மைக்கால வைத்தியசாலை அனுபவத்தைத் தடுமாறிச் சொல்லிவிட்டார்.

Rate this:
மேலும் 70 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X