சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
புரோக்கர்களான பேராசிரியர்கள்
போலீஸ் விசாரணையில், 'திடுக்'

விடைத்தாள் மறுமதிப்பீடு மோசடியில் சிக்கியுள்ள, பேராசிரியை உமாவுக்கு, புரோக்கர்கள் போல, உதவி பேராசிரியர்கள் செயல்பட்டுள்ள தகவல் தெரிய வந்துள்ளது.

புரோக்கர்கள்,பேராசிரியர்கள்,போலீஸ் விசாரணை,திடுக்


சென்னை, அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, 2017ல், தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய மாணவர்களில், 3.02 லட்சம் மாணவர்கள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ததில், 73 ஆயிரத்து, 733 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

அதிலும், 16 ஆயிரத்து, 636 பேருக்கு, அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, தேர்ச்சி பெற வைக்கப்பட்டனர். இதற்காக, அண்ணா பல்கலையின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான, பேராசிரியை உமா உள்ளிட்ட, 10 பேர், மாணவர்களிடம், தலா, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி உள்ளனர். இவர்களுக்கு பின்னணியில், முக்கிய புள்ளிகள் அடங்கிய, மிகப்பெரிய கும்பல் இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், உமாவுக்கு வலது கரமாக, திண்டிவனத்தில் உள்ள, அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரி உதவி பேராசிரியர்கள் சிவகுமார், விஜயகுமார் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். அவர்களிடம், மூன்றாவது நாளாக, நேற்று, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது: உமாவின் உத்தரவின்படி, மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த, மாணவர்களின் விடைத்தாள்கள்,

Advertisement

தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன; இது, சட்டப்படி குற்றம். உதவி பேராசிரியர்கள் சிவகுமார், விஜயகுமார் ஆகியோர், புரோக்கர்களாக செயல்பட்டு, லஞ்சப் பணம் வசூலித்து தந்து உள்ளனர்.

அண்ணா பல்கலைக்கு, சான்றிதழ்கள் அச்சடித்ததிலும், கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. உமாவிடம் விசாரித்த பின்னரே, முழு விபரம் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
04-செப்-201820:38:54 IST Report Abuse

Srikanth Tamizanda..இவனுங்க பண்ண தில்லுமுல்லு வெளியில வந்துடக்கூடாதுன்னு தான் சூரப்பா நியமனத்தை எதிர்த்தார்கள் இந்த திருட்டு திராவிஷர்கள்... இப்ப வெட்ட வெளிச்சம்..

Rate this:
jagan - Chennai,இந்தியா
04-செப்-201817:25:19 IST Report Abuse

jaganஎப்போ தகுதி முக்கியம் இல்ல ஜாதி தான் முக்கியம் என்று இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு , கண்ட கசுமாலங்கள் குளிப்பாட்டி நடுவீட்டில் வைக்கப்பட்டதோ அன்னிக்கே கல்வி மற்றும் முன்னேற்றத்திற்கு சங்கு தான்...

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
04-செப்-201815:56:46 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்தி.மு.க ஆட்சியில் பேராசிரியர்கள் யாரும் நியமிக்கவில்லை. நியமிக்கப்பட்ட அனைவருமே புரோக்கர்கள் எனவே ஆட்சி மாறினாலும் அவர்களின் தொழிலை இன்றுவரை சிறப்பாகவே செய்கிறார்கள்.

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X