20 பர்சென்ட் வெட்டு... இல்லைன்னா நடையை கட்டு!| Dinamalar

'20 பர்சென்ட் வெட்டு... இல்லைன்னா நடையை கட்டு!'

Added : செப் 04, 2018
Share
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதற்காக, கோல்டன் நகரில் உள்ள கோவிலுக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். சுட்டிக்குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு, அங்குமிங்கு ஓடிக்கொண்டிருந்ததை பார்த்த இருவரும் குஷியாகி, ரசித் துக்கொண்டிருந்தனர். விழா, துவங்க நேரமாகும் என்பதால், கோவில் வளாகத்தில் இருவரும் அமர்ந்தனர். ''தன்னோட அதிகாரிக்கு, இன்ஜினியர் ஒருத்தரு, கார்
'20 பர்சென்ட் வெட்டு... இல்லைன்னா நடையை கட்டு!'

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதற்காக, கோல்டன் நகரில் உள்ள கோவிலுக்கு சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். சுட்டிக்குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு, அங்குமிங்கு ஓடிக்கொண்டிருந்ததை பார்த்த இருவரும் குஷியாகி, ரசித் துக்கொண்டிருந்தனர். விழா, துவங்க நேரமாகும் என்பதால், கோவில் வளாகத்தில் இருவரும் அமர்ந்தனர். ''தன்னோட அதிகாரிக்கு, இன்ஜினியர் ஒருத்தரு, கார் கொடுத்தாருன்னு போனவாரம் பேசியிருந்தோமே நினைவிருக்குதா? மித்து!'' ''ஊரக வளர்ச்சித்துறையில்தான சொல்றீங்க,'' ''பரவாயில்லை, ரோட்டில் ஊத்துற தார் மாதிரி 'கப்'புன்னு புடிச்சுட்டயே. அந்த துறையில என்ன, எவ்வளவு நடந்தாலும் வெளியே தெரியவே தெரியாது. ஒவ்வொரு மட்டத்திலும் 'கமிஷன்' வெட்டுனா மட்டும்தான் வேலை நடக்குதாம். குறிப்பா, இன்ஜினியர் மிரட்டல் அதிகமாயிருச்சாம். 20 பர்சென்ட் வேணும்னு கன்டிசன் போடறாராம். பொறுத்துப்பார்த்த கான்ட்ராக்டர்கள், சி.எம்., செல்லுக்கு பெட்டிஷன் அனுப்பிட்டாங்க''''அப்புறம் என்னாச்சுங்க்கா?''ஆவலாக கேட்டாள் மித்ரா.''அங்கே இருந்து, மாவட்டத்துக்கும் வந்தாச்சு. டி.ஆர்.டி.ஏ.,வுல ஓரமா வச்சிட்டாங்களாம். நம்பர் கூட போட்டு பதிவு செய்யாம இருக்குதாம்'' ''நடவடிக்கை இல்லைன்னா எப்படி, மனுவுக்கு பதில் அனுப்பியாகணுமேங்க்கா'' ''அதனாலதான், நம்பர் போடாம வச்சிருக்காங்க. ஊரக வளர்ச்சித்துறைங்கறது பூசணிக்காய் மாதிரி, சோத்துல மறைக்க முடியாது மித்து. கான்ட்ராக்டர் சங்கம் மூலமாகவே, காங்கயத்திலிருந்து பெட்டிஷன் போட்டிருக்காங்க. அதில், 'ரோடு வேலைக்கு, பாதி தார் போட்டா போதும்னு சொல்றாரு. கண்டிப்பாக, 20 பர்சென்ட் வேணுமின்னு மிரட்டி கேக்குறாரு. இப்படி வாங்கின காசுல, தோட்டம், வீடுனு வாங்கி போட்டுட்டார்ன்னு,' ஏகத்துக்கும் பத்த வெச்சுட்டாங்களாம்,''''இந்த பெட்டிஷன் மேல, கலெக்டர் என்ன நடவடிக்கை எடுக்கப்போறாருன்னு, ஒட்டுமொத்த ஊரக வளர்ச்சித்துறையும், ஆவலாக பார்த்துட்டுத்தான் இருக்காம்,'' என்று சித்ரா விளக்கவும், ''ஸ்டேஜ் அமைப்பாளர் செல்வக்குமரன் எங்கிருந்தாலும், வரவும்,' என்ற மைக்கில் அறிவித்தனர்.கிருஷ்ண ஜெயந்தி விழாவில், உறியடி களை கட்டத்துவங்கியது. அதனை பார்க்க பலரும் முண்டியடித்ததால், போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும், சித்ரா, ''சிட்டி லிமிட்டில், உள்ள ஒரு ஸ்டேஷன் இன்ஸ்., பல வருஷமா கிடப்பில் உள்ள வழக்கு ஆவணங்களை, துாசி தட்டி தயார் செய்து கொண்டிருக்கிறாராம். என்ன ஒரு ஆச்சரியம், இந்த மாதிரியெல்லாம், அவரு செய்யமாட்டாரே என விசாரித்ததில், ''அட... நீங்க வேற. திடீர் திடீர்னு கமிஷனர் ஏதாவது ஒரு ஸ்டேஷனுக்கு போறார்''''அப்டி இங்க வந்துட்டாருன்னா, கிடப்பில் வழக்கு இவ்ளோ இருக்கிறது தெரிஞ்சா, எவன் அவர்கிட்ட ஏத்து வாங்கறது,'ன்னு சொல்லிட்டு, விழுந்து விழுந்து வேலை செய்கிறாராம். இப்படி இன்ஸ்., ஒரு பக்கம் இருந்தாலும் கூட, அந்த ஸ்டேஷன் ஏரியாவில், சரக்கு, கஞ்சான்னு கொடி கட்டி பறக்குதாம். 'பைல்களை' துாசு தட்டுற மாதிரி, இந்த மேட்டரிலும், ஆட்களை புடுச்சு உள்ளே போட்டால் பரவாயில்லையே,'' என்றாள்.''ஆமாம் போங்க. நல்லாச்சொன்னீங்க. அவங்களை புடுச்சு உள்ளே போட்டா, 'கிம்பளத்துக்கு' என்ன பண்ணுவாங்களாம்,'' என்று கூறிச்சிரித்தாள் மித்ரா. அப்போது, ஒலி பெருக்கியில், ''அடுத்ததாக, சண்முகம் உறியடிப்பார்,'' என்ற அறிவிப்பு வெளியானது. ''ஏங்க்கா.. நீங்க சொன்ன மாதிரி, ரூரல் பகுதியில், சரக்கு, ஒரு நம்பர் லாட்டரி, சக்கைப்போடு போடுதாம். பெருமாநல்லுார் ஸ்டேஷன் லிமிட்டில், முத்தையன் கிணறு, திருப்பூர் ரோட்டில் உள்ள பழைய ஸ்கூல், இப்படி பல இடங்களில், சிலர் கடையை போட்டு, ஆன்லைன் லாட்டரியை தைரியமாக தட்டி எடுக்கிறாங்களாம்,'' ''ஏண்டி போலீசுக்கு தெரியாதா?''''என்னங்க்கா, இப்படி போன நுாற்றாண்டில் பொறந்தது மாதிரி பேசுறீங்க. எல்லா ஊரிலும், நல்லாவே லாட்டரி விற்கறாங்க. அடி முதல் தலை வரை, 'பணம் பாய்வதால்,' யாருமே கண்டுக்கறதில்லையாம். மாவட்டத்தோட பெரிய அதிகாரிக்கும் தெரியும். என்ன செய்ய?'' ''இதைக்கேளு மித்து. அதுக்கு பக்கத்தில, வெண்ணெய்க்கு 'பேமஸான' ஸ்டேஷனில், எப்.ஐ.ஆர்., போடறதே இல்லையாம். ஏன்னு கேட்டால், ஸ்டேஷனுக்கு எந்த புகார் வந்தாலும், அதில் ஏதாவது 'வைட்டமின்-ப' பார்க்க முடியுமான்னு, அதிகாரி கண்ணும் கருத்துமா இருக்கிறாராம்,''''ஸ்டேஷனில் எந்த போலீஸ் விசாரிச்சாலும், 'எனக்கு தெரியாம எதுவும் நடக்கக்கூடா து,'ன்னு 'கட் அண்ட் ரைட்டா' சொல்லிட்டாராம்,''''ஆக... மொத்தத்தில், கொக்கு தலையில வெண்ணெய் வைச்சு பிடிக்கிற கதைதான். என்னக்கா, நான் சொல்றது சரிதானே,'' என்றாள் மித்ரா. ''மித்து, பக்கத்திலு ள்ள லிங்கேஸ்வரர் ஊரிலுள்ள மகளிர் ஸ்டேஷனில், ஒரே லஞ்சப்புகாராம்,''''கொஞ்ச நாளா அமைதியா இருந்தாங்களே. இப்ப என்ன ஆச்சு?''''அட.. நீ வேற. அதெல்லாம் ஒரு காலம். இப்பவெல்லாம், எந்த பெட்டிஷன் வந்தாலும், 'துட்டை வெட்டு'ன்னு சொல்றாங்களாம். போன வாரம், ஒரு இளம்பெண், தன்னோட கணவர், 'வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைச்சிருக்கார், கூப்பிட்டு விசாரிங்க'ன்னு புகார் கொடுத்தாராம்,''''அந்த ஆள்.. ஏதோ பெரிய இடமாம். அதைத்தெரிஞ்சுகிட்ட ஸ்டேஷன் அதிகாரி, புகார் கொடுத்த பெண்ணிடம், 'கொஞ்சம் பொறும்மா,'னு சொல்லியே காலத்தை கடத்துறாங்களாம். ஸ்டேஷனுக்கு வந்தா பிரச்னைன்னு, வர்றதேயில்லையாம்,''''ஏங்க்கா.. ஒரு பெண்ணோட கஷ்டம் பெண்ணுக்குத்தான் தெரியும்பாங்க. இவங்க இப்படியே செஞ்சாங்கன்னா, பாதிக்கப் பட்டவங்களுக்கு எப்படிதான் நியாயம் கிடைக்கும்? 50 சதவீத இட ஒதுக்கீடு எங்கே வேலை செய்தோ இல்லையோ? கைநீட்டி வாங்கறதில், ஒருத்தருக்கு ஒருத்தர் யாருமே சளைச்சவங்க கிடையாதுங்க்கா,''மித்ரா ஆவேசமாக சொல்லி முடிக்கவும், மேடையில், குட்டி கிருஷ்ணர், ராதை, அனுமன் என பல வேடம் புனைந்து பூலோக தேவதைகளாக வலம் வந்து கொண்டிருக்க. கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X