.2,990-Crore Statue Of Sardar Patel: Chinese Workers Add Finishing Touches | திறப்பு விழாவிற்கு தயாராகிறது பிரம்மாண்ட பட்டேல் சிலை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

திறப்பு விழாவிற்கு தயாராகிறது பிரம்மாண்ட பட்டேல் சிலை

Added : செப் 04, 2018 | கருத்துகள் (99)
Advertisement
 பட்டேல் சிலை திறப்பு விழா,பிரதமர் மோடி, சர்தார் வல்லபாய்ப பட்டேல் , நர்மதை ஆறு , சர்தார் சரோவர் அணை,  ஆமதாபாத், குஜராத்,  சர்தார் வல்லபாய்ப பட்டேல் சிலை , நரேந்திர மோடி, பிரதமர் நரேந்திர மோடி, மோடி, Patel Statue opening ceremony, Prime Minister Modi, Sardar Vallabhbhai Patel, Narmada River, Sardar Sarovar Dam, Ahmedabad, Gujarat, Sardar Vallabhbhai Patel Statue, Narendra Modi, Prime Minister Narendra Modi, Modi,

ஆமதாபாத்: குஜராத்தில் பிரம்மாண்ட சர்தார் வல்லபாய்ப பட்டேல் சிலை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. திறப்புவிழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.
கடந்த, 2013ல், நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, குஜராத்தின் கேவாடியா பகுதியில், நர்மதை ஆற்றின் நடுவில் சர்தார் சரோவர் அணைக்கு அருகே, 182 மீட்டர் உயரமுள்ள இந்த சிலை, ரூ.3,000 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. சிலை கட்டும் பணிகள் நடந்து வந்தன. உலகில் உள்ள சிலைகளிலேயே, மிக உயரமான சிலையாக, 182 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படவுள்ள இந்த சிலை வடிவமைப்பு பணிகள் நான்கு ஆண்டுகளில் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது சிலைக்கான இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் நிறைவடைந்து வருவதாகவும் இதற்காக சீனாவில் இருந்து கட்டட கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திட்டமிட்டபடி பட்டேல் பிறந்த நாளான அக்.31-ம் தேதி திறப்பு விழா நடத்தப்படலாம் என தெரிகிறது.


சிறப்பு அம்சங்கள்:


* தற்போது, உலகின் மிக உயரமான சிலையாக கருதப்படும், சீனாவில் உள்ள, புத்தர் சிலை, 153 மீட்டர் உயரமுடையது.
* நர்மதை ஆற்றில், 3.5 கி.மீ., தூரம் படகில் பயணித்து தான், சிலை இருக்கும், தீவுக்கு செல்ல முடியும்.
* இரும்பால் வடிவமைக்கப்பட்டாலும், சிலையின் புறத் தோற்றம், உயர்தர வெண்கலத்தில் அமைக்கப்படும்.
* சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும், சிலையை அருகில் சென்று பார்ப்பதற்கும், சிலையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இயற்கை வளங்களை ரசிப்பதற்கும், 200 பேர் நின்று பார்க்க கூடிய வகையிலான, கண்காணிப்பு கூண்டு அமைக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
07-செப்-201817:37:42 IST Report Abuse
ganapati sb உலகின் மிகப்பெரிய சிலை உலகின் மிகப்பழமையான கலாச்சாரம் கொண்ட தேசத்தை ஒன்றிணைத்ததற்கு சாலப் பொருத்தம் மகத்தான சாதனை செய்த சங்க கால தமிழக வள்ளுவர் இஸ்லாமியர் ஆக்ரமிப்பு கால மராட்டிய சிவாஜி போல கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் ஆக்ரமிப்பு கால குஜராத்தின் வல்லபாய் சிலையும் நீடித்து நிற்கட்டும்
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
05-செப்-201804:13:32 IST Report Abuse
Panneerselvam Chinnasamy நவீன பாரதத்தின் சிற்பிக்களில் இவர் முக்கியமானவர்... இவர் இல்லாதிருந்திருந்தால் இந்தியா இவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த ஒரு நாடாக உருவாகியிருக்கமுடியாது... அதற்குப்பதிலாக 562 ராஜா/நிஜாம்கள் நம்மிடையே ஆட்சியில் இருந்திருப்பார்கள்..அவர்கள் அமெரிக்கா அல்லது மேலை நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்திருப்பார்கள் ... பலவித சுரண்டல்கள்/ புரட்சிகள் என்று அங்கெல்லாம் வாழ்க்கை நரகம் ஆகி இருக்கும்... இந்தியாவில் அகதிகள் தொல்லை அதிகம் ஆகி இருக்கும்... இந்தியா ராணுவ மற்றும் அகதிகள் பராமரிப்பு செலவு அதிகரித்து, இந்தியா அரசியல் ,ராணுவ பலம் மட்டுமல்லாது பொருளாதார துறையிலும் பின்னுக்கு தள்ளப் பட்டிருக்கும்... வாழ்க பாரதம்... வாழ்க படேல்ஜி...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
04-செப்-201817:57:40 IST Report Abuse
Nallavan Nallavan பெண்பித்தராகவும், சக சுதந்திர போராட்ட வீரர்களிடம் பொறாமைப்பட்டு, தட்டியே வைத்தவராகவும், முட்டாள்தனமான தனது முடிவுகளால் தேசத்தை இருளில் தள்ளியவராகவும் இருந்த ஒரு மனிதரை மறக்கடிக்கச் செய்யவேண்டும் ..... நியாயமே ..... அதற்கு இவ்வளவா விலை கொடுக்கவேண்டும் ????
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
09-செப்-201804:30:34 IST Report Abuse
Anandanஆமாம், நாட்டில் பல தொழிற்சாலைகள் வரவும், IIT போன்ற நாட்டை சீரழிக்கும் கல்வி நிறுவனங்கள் கொண்டு வந்ததால் நேருவை மறக்கடிக்க வேண்டும். நாட்டிற்காக மனிதனை கொள்வதுதான் சிறந்த கொள்கை. எதிர்த்து கேள்வி கேட்பவனை தேச துரோகி இன்னும் பல சொற்கள் கொண்டு கேவலப்படுத்துவது, மத்த கட்சிக்காரர்களை பட்டப்பெயர் வைத்து சொல்பவர்கள் ஆட்சி செய்வது பொற்காலம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X