அரசியல் செய்தி

தமிழ்நாடு

விமானத்தில் கோஷமிட்ட சோபியா; நடந்தது என்ன ? தமிழிசை விளக்கம்

Added : செப் 04, 2018 | கருத்துகள் (351)
Share
Advertisement
சென்னை: சோபியாவின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியுள்ளார். தூத்துக்குடியில் விமானத்தில் பயணித்த சோபியா என்ற பெண் பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குறித்து விமர்சித்தார். இதனால் அளிக்கப்பட்ட புகாரில் சோபியா கைது செய்யப்பட்டுள்ளார். விமர்சனம்இது தொடர்பாக இன்று ( 4 ம் தேதி) சென்னை விமான நிலையத்தில் அவர் மேலும்
Sophia, Sophia arrest,Tamilisai Soundarajan, சோபியா, தமிழிசை, பாஜக, தமிழிசை சவுந்திரராஜன் , சென்னை விமான நிலையம், சோபியா கைது, ஸ்டாலின் , மாணவி சோபியா, தூத்துக்குடி கோர்ட் , Tuticorin, tamilisai, BJP, Chennai Airport,  Stalin, student Sophia, Thoothukudi court,

சென்னை: சோபியாவின் பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியுள்ளார். தூத்துக்குடியில் விமானத்தில் பயணித்த சோபியா என்ற பெண் பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குறித்து விமர்சித்தார். இதனால் அளிக்கப்பட்ட புகாரில் சோபியா கைது செய்யப்பட்டுள்ளார்.


விமர்சனம்


இது தொடர்பாக இன்று ( 4 ம் தேதி) சென்னை விமான நிலையத்தில் அவர் மேலும் பேசியதாவது : அவர், சோபியா விமானத்தில் கைகளை உயர்த்தி பா.ஜ., பாஷிச ஆட்சி ஒழிக என கோஷம் எழுப்பினார். நான் அமைதியாக இருந்தேன். வெளியில்,வரவேற்பரையில் காத்திருந்த போது, அவர் முறைத்து கொண்டு சென்றார். அவரிடம் விமானத்தில் கோஷமிடலாமா என கேட்டதற்கு, எனது பேச்சுரிமை எனக்கூறினார். தொடர்ந்து சொல்ல முடியாத வார்த்தைகளில் விமர்சனம் செய்தார். விமானம் பொது தளம். அதில் விமர்சனம் கூடாது என்றேன். ஆனால் அவர், அதே வார்த்தையை கூறினார். அவரது பின்னணி, இயக்கம் குறித்து சந்தேகம் உள்ளது. விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்னர், பா.ஜ.,வுக்கு எதிராக கோஷம் போட போவதாக சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.


உரிமை

விமானத்தில் மாற்று கட்சி தலைவர்கள் பயணிக்கும் போது, கோஷம் போடலாமா? பொது மக்கள் நிலை என்னாவது? நான் தவறு செய்யவில்லை. சட்டத்தை மீறவில்லை. பேஸ்புக் பக்கத்தை பார்த்தால், எப்படி பட்ட கருத்துகளை பதிவு செய்துள்ளார். பின்புலம் பற்றி தெரியும். தேசத்தின் பாதுகாப்பு முக்கியம். மீண்டும் சொல்கிறேன். நான் தவறு செய்யவில்லை.


கண்டனம்

சோபியா கைதுக்கு ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். நான் சம்பவம் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகளிடம் தான் புகார் கொடுத்தேன். அவர்கள் தான் போலீசாரிடம் சென்றனர். போலீசார் முடிவெடுக்கட்டும். சோபியா தவறு செய்யவில்லை என்றால், அவர் விடுதலையாகட்டும். தவறு செய்திருந்தால், போலீசார் நடவடிக்கை எடுக்கட்டும். நான் புகாரை திரும்ப பெற மாட்டேன் என்றார்.


சோபியாவுக்கு ஜாமின்:

இதனிடையே, மாணவி சோபியாவுக்கு தூத்துக்குடி கோர்ட் ஜாமின் வழங்கியது. அவருக்கு ஜாமின் வழங்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஜாமினில் வெளிவரக்கூடிய 2 பிரிவுகளின் கீழ் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (351)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian - Mumbai,இந்தியா
08-செப்-201820:07:03 IST Report Abuse
Balasubramanian I do not belong to BJP or RSS or Hindu fanatic. Please read my post with this context. What this girl done in flight or airport is totally wrong. For my official purpose I have travelled in flights many times in India. I had happened to see many politicians in the flight many times.(all party politicians and most of them are crooks and looters). But I have not raised my voice against them in the flight or airport. The reasons are (1) It is NOT PROPER MANNERS in raising your objections in a public place like flight or airport. (2) All these politicians are surrounded by "thondars"(ie.(GOONS). They will thrash me. so I am afraid of raising my voice against them in the airport/ flight. It is quite surprising that DMK is talking about freedom of speech. In Annamalai University, students had objected the award of Ph.D to Karunanithi in 1971. (he had passed only 10th std.). Hence DMK goons went on rampage and attacked students. Udayakumar was killed by them and police had threated his parents and taken declaration that, the dead body is not their son's body. ( I had studied in that university. So I can tell with confidence). You can ask old Annamalai university students. They will tell the same thing. Similarly DMK goons had attacked students in Clive hostel in Trichy in 1970. Recently three employees of DINAKARAN newspaper were burnt alive in Madurai by DMK goons. Because of the MK family dispute, such thing had happened. Where is the freedom of expression?? What happened to Sadiq basha and Anna Nagar Ramesh, Tha. Krishnan murders?? If this sort of thing is allowed, then no politician or their family CAN Travel on flight/train. Every politicians has some points against them. If public start shouting against them these politicians will travel with GOONS (like DONs). Further it seems this girl's supporters are trying to bring Christian Religion and e into this issue. This is unwanted. This will backfire on them. This is not 1960, 1970 and 1980 wherein Hindu religion bashing will go unnoticed. every step against Hindu religion will bring neutral Hindus into BJPs' support . In her own interest, this girl should apologise and go ahead in her career. I need to write separate article on ADMK atrocities against their opponents
Rate this:
Cancel
Pondichéry à Londres - London,யுனைடெட் கிங்டம்
08-செப்-201802:39:12 IST Report Abuse
Pondichéry à Londres This clearly shows the height of atrocity of ruling power which confirms in line with what a student Sophia said is correct. There is no intolerance and to upkeep fame of a Party which are basic qualification for any matured person that who is now a unfortunate President of the Tamilnadu Bharatha Janata Party and mother of a similar age group student, it explicitly shows that they can handle anything with the influence of centralised power in their hand and with Police and IB. In culmination, this adds and attracts the real and negative publicity to their stupidity of handling any sensitivity and uncontrolled brutality to a student and meaning of what is meant by fascism is and supports the slogan that Sophia has expressed is true. There is sunset for her dream of lotus to blossom in TN. What a wonderful Leaders for BJP in TN. Tamilisai and H.Rajah both have equally contributed to ruin up BJP dream's for next 2 to 3 decades and they are the right choice for the wrong PM and the Party.
Rate this:
jay - toronto,கனடா
10-செப்-201809:20:27 IST Report Abuse
jayதாய் மொழியில் பேசு ,,, உன் மத உள்நோக்கம் தெரியுது ,,...
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
07-செப்-201816:51:44 IST Report Abuse
தமிழர்நீதி ஒரு பெண் ஓங்கி குரல் கொடுத்தால் பொறுத்துக்கொள்ள முடியாத ஆணவம் உள்ள நீங்கள் எல்லாம் தலைமைக்கு வந்தால் நாட்டில் ரத்தம்தான் ஓடும் . உரசல் அரசியல் செய்யும் கூட்டம் மத்தியில் பாவம் ஒரு பெண் கல்லூரி மாணவி சிக்கி தவிக்குது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X